Published:Updated:

ஸ்கோடா ஏரியாவுக்குள் ஹோண்டா!

ஸ்கோடா ஏரியாவுக்குள் ஹோண்டா!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்கோடா ஏரியாவுக்குள் ஹோண்டா!

ஒப்பீடு - ஹோண்டா CR-V VS ஸ்கோடா கோடியாக்

ஸ்கோடா ஏரியாவுக்குள் ஹோண்டா!

ஒப்பீடு - ஹோண்டா CR-V VS ஸ்கோடா கோடியாக்

Published:Updated:
ஸ்கோடா ஏரியாவுக்குள் ஹோண்டா!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்கோடா ஏரியாவுக்குள் ஹோண்டா!

ந்த ஐந்தாம் தலைமுறை ஹோண்டா எஸ்யூவிக்கு எத்தனை பேர் காத்திருந்தார்கள் தெரியுமா? ஆம், டீசல் இன்ஜின்  - 3வது வரிசை இருக்கை - சொகுசான இடவசதி – தரம் மற்றும் வசதிகள் என CR-V அடுத்த கட்டத்துக்குச் சென்றிருக்கிறது. 33.75 லட்சம் (2WD பெட்ரோல், 5 சீட்டர்) – 36.71 லட்சம் (2WD டீசல், 7 சீட்டர்)  39.20 லட்சம் (4WD டீசல், 7 சீட்டர்) சென்னை ஆன்-ரோடு விலையில் வந்திருக்கும் CR-V, ஸ்கோடா கோடியாக்கின் ஏரியாவுக்குள் நுழைந்திருக்கிறது. 

ஸ்கோடா ஏரியாவுக்குள் ஹோண்டா!

யாருக்கு எந்த எஸ்யூவி மேட்ச்சாக இருக்கும்?

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

 புதிய CR-Vயில் பேச்சுப் பொருளாகியிருக்கும் 1.6 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினைப் பற்றி முதலில் பார்ப்போம். 120bhp பவர் மற்றும் 30kgm டார்க்கை வெளிப்படுத்தும் இது, 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. டெக்னிக்கல் விபரங்களின்படி, 1,725 எடையுள்ள CR-Vக்கு இந்தச் செயல்திறன் குறைவாக இருக்கிறதோ எனத் தோன்றினாலும், அவை தமது பணியைத் திறம்படச் செய்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்கோடா ஏரியாவுக்குள் ஹோண்டா!
ஸ்கோடா ஏரியாவுக்குள் ஹோண்டா!

ஐடிலிங்கில் இன்ஜின் படு ஸ்மூத்தாக இருப்பதுடன், வேகமெடுக்கும்போதும்கூட டீசல் இன்ஜின்களுக்கே உரிய சத்தம் கேட்கவில்லை. மிட் ரேஞ்ச்சில் க்ரூஸ் செய்யும்போதும் காருக்குள்ளே எந்த அதிர்வுகளும் சத்தமும் கேட்காதது நைஸ். பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில், காருக்குள் இருப்பது டீசல் இன்ஜின் என்பதை மறக்கடிக்கும் அளவுக்கு அது சைலன்ட்டாக இயங்குகிறது. கியர்பாக்ஸும் உடனுக்குடன் கியர்களை மாற்றுவதால், இன்ஜின் வேகத்துக்கு ஏற்றபடி கச்சிதமான கியரில் கார் சீராகப் பயணிக்கிறது. ஆனால் நெடுஞ்சாலையில் முன்னே செல்லும் காரை ஓவர்டேக் செய்ய நேரிடும்போதும், காரை விரட்டி ஓட்டும்போதும், பவர் குறைபாடு அப்பட்டமாகத் தெரிகிறது. அதுவும் கடைசி rpm-ல் பவர் டெலிவரி சுணங்கிவிடுவது, காரில் இருப்பது டீசல் இன்ஜின் என்பது தெரிந்துவிடுகிறது. 120bhp பவர்தான் என்பதால், 0 – 100கிமீ வேகத்தை எட்டுவதற்கு CR-V சாவகாசமாக 12.3 விநாடிகளை எடுத்துக்கொள்கிறது.

ஸ்கோடா ஏரியாவுக்குள் ஹோண்டா!
ஸ்கோடா ஏரியாவுக்குள் ஹோண்டா!

ஃபோக்ஸ்வாகனின் புகழ்பெற்ற 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினைக் கொண்டிருக்கிறது கோடியாக். CR-V-யை விட அதிகமான 150bhp பவர் மற்றும் 34kgm டார்க் இருப்பதால், எதிர்பார்த்தபடியே 0 – 100கிமீ வேகத்தை வெறும் 10.62 விநாடிகளிலேயே இந்த ஸ்கோடா எஸ்யூவி எட்டிவிடுகிறது. 3,000 ஆர்பிஎம்மில் இன்ஜின் ஸ்மூத்தாகி விடுவதுடன், மிட் ரேஞ்ச்சும் அதிரடியாக இருக்கிறது. 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸின் இயக்கம், ‘ஐஸ்ட் லைக் தட்’ பாணியில் அமைந்திருக்கிறது. எனவே, இன்ஜினின் வேகத்துக்கு ஏற்ப கியர்பாக்ஸ் சரியான கியரில் தன்னை வைத்துக் கொள்கிறது. ஆனால் டீசல் இன்ஜின், சத்தம் போடுகிறது என்பதுடன்... அது கேபினுக்குள்ளும் கேட்பது நெருடல். வேகமெடுக்கும்போது இது கொஞ்சம் குறைகிறது.

ஓட்டுதல் அனுபவம்

பெர்ஃபாமென்ஸில் தவறவிட்டதை, ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமையில் சரிக்கட்டிவிடுகிறது CR-V. கரடுமுரடான சாலைகளை சஸ்பென்ஷன் சிறப்பாகச் சமாளிக்கிறது என்பதால், எந்த அதிர்வுகளும் காருக்குள்ளே வரவில்லை. பெரிய எஸ்யூவியாக இருந்தாலும், திருப்பங்களில் காரை நம்பிக்கையுடன் வேகமாகச் செலுத்த முடிகிறது. கச்சிதமான எடையுடன் கூடிய ஸ்டீயரிங்கின் துல்லியமான ரெஸ்பான்ஸ் ஒரு காரணம் என்றால். மிஷ்லின் ப்ரைமஸி டயர்கள் மற்றொரு காரணம். ஆனால், பாடி ரோல் கொஞ்சம் இருக்கத்தான் செய்கிறது. 

ஸ்கோடா ஏரியாவுக்குள் ஹோண்டா!

அதிக வேகத்தில் காரின் நிலைத்தன்மை அசத்தலாக இருக்கிறது என்றாலும், திருப்பங்களில் CR-V அளவுக்கு கோடியாக் துடிப்பாக இல்லை. மேலும் கரடுமுரடான சாலைகளில் செல்லும்போது காரின் ஓட்டுதல் அனுபவம் சிறப்பாக இல்லை. இதற்கு இதன் பெரிய பாக்ஸ் போன்ற வடிவம் இங்கே ஒரு பிரச்னை என்றால், மென்மையான சஸ்பென்ஷன் செட்-அப் மற்றொரு பிரச்னை.

கேபின்

ஒரு மாடர்ன் ஹோண்டா கார் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது CR-V. மாடர்ன் ஸ்டைல், கட்டுமானத் தரம் ஆகியவற்றில் இது ஸ்கோர் செய்கிறது. லெதர் – பியானோ பிளாக் ப்ளாஸ்டிக் – அலுமினியம் – மர வேலைப்பாடு என டேஷ்போர்டு செம. அனலாக் டயல்களுக்குப் பதிலாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், கியர் லீவருக்குப் பதிலாக பட்டன்கள் என வழக்கத்திலிருந்து மாற்றி யோசித்திருக்கிறது ஹோண்டா. பெரிதாகவும் சொகுசாகவும் இருக்கும் முன்பக்க இருக்கைகளை, எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்ய முடியும். நடுவரிசை இருக்கை கொஞ்சம் உயரத்தில் இருப்பதுபோலத் தோன்றினாலும், சொகுசு அற்புதம். குஷனிங் கச்சிதமாக இருப்பதுடன், தொடைகளுக்கான சப்போர்ட்டும் அருமை. நடுவரிசையை Slide செய்யும்போது லெக்ரும் சூப்பர். ஆனால் 6 அடிக்கும் மேலான உயரத்தில் இருப்பவர்களுக்கு ஹெட்ரூம் குறைவாகவே உள்ளது. கடைசி வரிசை குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்கும் எனத் தோன்றுகிறது. மற்ற ஸ்கோடா கார்களுடன் ஒப்பிடும்போது, கோடியாக்கின் டேஷ்போர்டு கொஞ்சம் வழக்கத்தைவிட்டு வெளிவந்த டிசைனைக் கொண்டிருக்கிறது. சென்டர் கன்சோல் ஸ்டைலாக இருந்தாலும், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் டல்லான தோற்றத்தில் உள்ளது. 9 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் உடனான முன்பக்க சீட்கள் ஆகியவை பயன்படுத்த மிகச் சிறப்பு. கேபின் அகலமாக இருப்பதால், நடுவரிசை இருக்கையில் 3 பேருக்கான இடவசதி தாராளமாக கிடைக்கிறது. கடைசி வரிசை இருக்கை CR-V-யை விட பெட்டராக இருந்தாலும், இடவசதி நெருக்கடிதான்.

சிறப்பம்சங்கள்


LED ஹெட்லைட், 18 இன்ச் அலாய் வீல்கள், ஃபுல் சைஸ் ஸ்பேர் வீல், ஆப்பிள் கார் ப்ளே உடனான 7 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், இடதுபுறத்தில் Blind Spot கேமரா, எலெக்ட்ரிக் சீட்ஸ், பனரோமிக் சன்ரூஃப், ABS – EBD – ESC, ஹேண்ட்லிங் அசிஸ்ட், பிரேக் அசிஸ்ட், அட்டென்ஷன் அசிஸ்ட் என காரில் வசதிகளை வாரியிறைத்திருக்கிறது CR-V.

ஆட்டோமேட்டிக் பார்க்கிங், DRL உடனான LED ஹெட்லைட்ஸ், 18 இன்ச் அலாய் வீல்கள், Space Saver ஸ்பேர் வீல், ஆப்பிள் கார் ப்ளே – ஆண்ட்ராய்டு ஆட்டோ- மிரர் லிங்க் உடனான 8 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், சீட் மெமரி மற்றும் எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் உடனான முன்பக்க சீட்கள், நடுவரிசையில் SunBlinds & கிளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், எலெக்ட்ரிக் டெயில்கேட், 9 காற்றுப்பைகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ரிவர்ஸ் கேமரா, முன்பக்க & பின்பக்க பார்க்கிங் சென்சார் என கோடியாக்கும் அசத்துகிறது.

தொகுப்பு: ராகுல் சிவகுரு 

ஸ்கோடா ஏரியாவுக்குள் ஹோண்டா!

2WD / 4WD எனும் 2 வேரியன்ட்களில் கிடைக்கும் CR-Vயின் 4 வீல் டிரைவ் மாடல், 2 வீல் டிரைவ் மாடலைவிட 2.5 லட்ச ரூபாய் அதிகமாகவும், கோடியாக்கைவிட 3 லட்ச ரூபாய் (Style வேரியன்ட் மட்டும்) குறைவாகவும் இருக்கிறது. அதிக சிறப்பம்சங்கள் – சூப்பர் கட்டுமானத் தரத்தைக் கொண்டிருக்கும் கேபின், சொகுசான சீட்கள், சிறப்பான ஓட்டுதல் அனுபவம் என ஆல்ரவுண்டராக அசத்தும் CR-V, இந்த ஒப்பீட்டில் வெற்றிபெறுவதற்கான தகுதிகள் அனைத்தையும் தன்வசம் கொண்டிருக்கிறது. பெரிய எஸ்யூவியாக இருந்தாலும், கையாளுமை மற்றும் பாதுகாப்பு வசதிகளில் அதிரடிக்கிறது. ஒரே ஒரு குறை - கோடியாக்குடன் ஒப்பிடும்போது, இதன் நடுவரிசை மற்றும் கடைசி வரிசை இடவசதி கொஞ்சம் பெட்டராகவும், டீசல் இன்ஜின் கொஞ்சம் பவர்ஃபுல்லாகவும் இருந்திருக்கலாம்.

ஸ்கோடா ஏரியாவுக்குள் ஹோண்டா!

தனது வகையிலே பவர்ஃபுல்லான இன்ஜினாக இல்லாவிட்டாலும், CR-V-யை விட ரெஸ்பான்ஸிவ்வாக இயங்குகிறது கோடியாக்கின் இன்ஜின். நடுவரிசை இருக்கையில் அதிக இடவசதி இருப்பதுடன், கடைசி வரிசை இருக்கையும் கொஞ்சம் அவசரத்துக்குப் பயன்படுத்தக்கூடிய வகையில் உள்ளது. ஹோண்டாவுடன் ஒப்பிடும்போது, இந்த ஸ்கோடா எஸ்யூவியின் ஓட்டுதல் அனுபவம் மற்றும் கையாளுமை கொஞ்சம் ஓகே ரகம்தான். மேலும் இதன் கேபின் நீட்டாகவே இருந்தாலும், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் புஷ் பட்டன் கியர் Selector போன்ற மாடர்ன் வசதிகள் இல்லாதது மைனஸ். என்றாலும், பிராக்டிக்கலான 7 சீட்டர் எஸ்யூவி வேண்டும் என்பவர்களுக்கான தீர்வாக இருக்கும் கோடியாக், இந்த ஒப்பீட்டின் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறது.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism