Published:Updated:

ரெக்ஸ்ட்டன் to ஆல்ட்டுராஸ்... via மஹிந்திரா!

ரெக்ஸ்ட்டன் to ஆல்ட்டுராஸ்... via மஹிந்திரா!
பிரீமியம் ஸ்டோரி
ரெக்ஸ்ட்டன் to ஆல்ட்டுராஸ்... via மஹிந்திரா!

ஃபர்ஸ்ட் டிரைவ் - மஹிந்திரா ஆல்ட்டுராஸ் G4

ரெக்ஸ்ட்டன் to ஆல்ட்டுராஸ்... via மஹிந்திரா!

ஃபர்ஸ்ட் டிரைவ் - மஹிந்திரா ஆல்ட்டுராஸ் G4

Published:Updated:
ரெக்ஸ்ட்டன் to ஆல்ட்டுராஸ்... via மஹிந்திரா!
பிரீமியம் ஸ்டோரி
ரெக்ஸ்ட்டன் to ஆல்ட்டுராஸ்... via மஹிந்திரா!

னி மஹிந்திராவின் விலை உயர்ந்த கார் XUV 500 இல்லை; ஆல்ட்டுராஸ் G4-தான். மஹிந்திராவின் கூட்டணியோடு இந்தியாவில் விற்பனையான ஸாங்யாங் ரெக்ஸ்ட்டன் காரின் அடுத்த தலைமுறை வெர்ஷன்தான் இந்த ஆல்ட்டுராஸ் G4. வலுவான லேடர் ஃப்ரேம் சேஸி, 4 வீல் டிரைவ், 7 சீட் என ஃபோர்டு எண்டேவர் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனருக்குப் போட்டியாகக் களமிறங்கியிருக்கிறது இந்த ஆல்ட்டுராஸ். புதிய இரண்டாம் தலைமுறை ரெக்ஸ்ட்டனுக்கு மஹிந்திரா லோகோவைப் பொருத்தி ஆல்ட்டுராஸ் G4 எனப் பெயர் மாற்றியிருக்கிறார்கள். முந்தைய ரெக்ஸ்ட்டனில் மெர்சிடீஸ் M க்ளாஸ் பிளாட்ஃபார்மைப் பயன்படுத்தியிருப்பார்கள். இதில் முற்றிலும் புதிய சேஸி, 7 ஸ்பீடு Gtronic கியர்பாக்ஸ் மட்டும் மெர்சிடீஸ் பென்ஸிடம் வாங்கியிருக்கிறார்கள்.

ரெக்ஸ்ட்டன் to ஆல்ட்டுராஸ்... via மஹிந்திரா!

அகலமான மூக்கு, நீளமான பானெட், உயரமான தோற்றம் என பார்க்க செம பல்க்காக இருக்கிறது இந்த கார். 18 இன்ச் அலாய் வீல் மட்டும் பார்க்க கொஞ்சம் சின்னதாகத் தெரிகிறது. HID ஹெட்லைட் மற்றும் LED DRL காருக்குத் தனி ஸ்டைலைத் தருகிறது. மூன்றாம் வரிசை ஜன்னலைக் குட்டியாக டிசைன் செய்தி ருப்பது, கார் நீளமாக இருப்பதுபோன்ற தோற்றத்தைத் தருகிறது.

தனியாக ஃப்ரேம் வைத்து பாடி கட்டமைக்கப்பட்ட Body-On-Frame எஸ்யூவிகளுடன் ஒப்பிடும்போது அகலம், உயரம், வீல்பேஸ் ஆகியவற்றில் பெரிய எஸ்யூவி இப்போது ஆல்ட்டுராஸ் தான். 9 காற்றுப் பைகள், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரோல் ஓவர் ப்ரொடக்‌ஷன், ஹில் டிஸென்ட் & ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், பிரேக் அசிஸ்ட், எமர் ஜென்சி ஸ்டாப் சிக்னல், எலெக்ட்ரானிக் பிரேக் மற்றும் ABS என எக்கச்சக்க பாதுகாப்பு வசதிகளும் இருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரெக்ஸ்ட்டன் to ஆல்ட்டுராஸ்... via மஹிந்திரா!

உள்பக்கம் எப்படி?

‘மற்ற நாடுகளில் விற்பனையாகும் ரெக்ஸ்ட்டனைவிட, ஆல்ட்டுராஸின் இன்டீரியரை கூடுதல் சொகுசாக வடிவமைத்து இருக்கிறோம்’ என்கிறது மஹிந்திரா. காரின் கதவைத் திறந்த உடனேயே மெர்சிடீஸ் A-Class போல சீட் தானாகவே பின்பக்கம் சென்று, டிரைவரை சொகுசாக உள்ளே கூப்பிடுகிறது. கதவை மூடியவுடன் சீட் மீண்டும் பழைய பொசிஷனுக்கே திரும்பிவிடும். காரின் ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷனே பெஸ்ட் இம்ப்ரெஷன். டேஷ்போர்டில் இருக்கும் மர வேலைப்பாடுகள் லக்ஸூரி கார்களை நினைவுபடுத்தும்.

டேஷ்போர்டில் இருக்கும் ‘நப்பா’ லெதர், இன்டீரியரை மேலும் அழகுபடுத்துகிறது. லெதருக்கு இடையே சென்டர் கன்சோலை வைத்திருப்பது பழைய மெர்சிடீஸ் S-Class காரை ஞாபகப்படுத்துகிறது. செம ப்ரீமியம் லுக். டேஷ்போர்டில் மிருதுவான பிளாஸ்டிக்குகள் மற்றும் தரமான ஸ்விட்சுகள் இருந்தாலும், ஏசி வென்ட், ஸ்டீயரிங் வீல் போன்றவற்றில் ஹார்டு பிளாஸ்டிக்தான் உள்ளது.

ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே உடன் கூடிய 8 இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம், 360 டிகிரி பார்க்கிங் கேமரா, 7 இன்ச் TFT ஸ்கிரீன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டயர் பிரஷர் மானிட்டர், two-zone climate control என வசதிகளுக்குக் குறையில்லை. ஃபோர்டு எண்டேவரில் இருக்கும் செமி ஆட்டோ பார்க் அசிஸ்ட், டெரெய்ன் மேனேஜ்மென்ட் சிஸ்டம் இதில் இல்லை. எண்டேவரிலும், ஃபார்ச்சூனரிலும் நடு வரிசை சீட்டை முன்னால் இழுத்துக் கொள்ளலாம். ஆல்ட்டுராஸில் இந்த வசதிகளைக் கொடுக்கவில்லை. சீட்களும் மிருதுவான நப்பா லெதரில் உருவானவை. முன்பக்க சீட்களில் வென்ட்டிலேஷன் வசதி உண்டு. டிரைவர் சீட்டில் மெமரி ஃபங்ஷன் இருப்பதால், அவ்வப்போது சீட்டை அட்ஜஸ்ட் செய்ய அவசியமில்லை. ஒரு பட்டனைத் தட்டினால் போதும்; தானாகவே உங்கள் பொசிஷனுக்கு வந்துவிடும். ஸ்டீயரிங்கில் பவர் அட்ஜஸ்ட்மென்ட் இல்லை. மேனுவல்தான்.

ரெக்ஸ்ட்டன் to ஆல்ட்டுராஸ்... via மஹிந்திரா!

நடு வரிசை சீட்டுக்குப் போவது கொஞ்சம் கஷ்டமான வேலை. 244 மி.மீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொடுத்துவிட்டு, ரன்னிங் போர்டு கொடுக்க மறந்துவிட்டார்கள். உள்ளே நுழைய, பெரிய அடியாக எடுத்து வைக்க வேண்டும். உள்ளே நுழைந்துவிட்டால், எக்கச்சக்க இடம் உண்டு. மூன்று நபர்கள் வசதியாக உட்காரலாம். லெக்ரூமைப் பொருத்தவரை, 6 அடி நபருக்குக்கூட அதிக இடம் இருந்தது. பின்பக்க சீட்டைச் சாய்த்து உட்கார முடியும். ஹெட்ரூம் குறைவு. 6 அடிக்கு மேல் இருந்தால் கொஞ்சமாக அட்ஜஸ்ட் செய்ய வேண்டியது வரும். மூன்றாம் வரிசை இருக்கைகள் பெரியவர்களுக்கு உகந்தது அல்ல. குள்ளமான சீட்டில் உட்காருவதுபோல உள்ளது. லெக்ரூம் குறைவு... ஜன்னல்களும் ரொம்பவே சின்னது என்பதால், காரில் அடைத்து வைக்கப்பட்ட ஒரு ஃபீலிங் வந்துவிடுகிறது.

 ஓட்டுவதற்கு எப்படியிருக்கிறது?


இந்த காரில் ஸாங்யாங்கின் புதிய 2.2 லிட்டர் Common Rail டீசல் இன்ஜின் இருக்கிறது. இந்த இன்ஜின் அதிகப்படியாக 178bhp பவரை 4000 rpm-ல் தருகிறது. 42kgm டார்க்கை 1,600-2,600 rpm-ல் தருகிறது. BS-IV இன்ஜின்தான். மெர்சிடீஸ் பென்ஸின் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கிறது. காருக்கு பவர் பின் வீல்களில் இருந்துதான் வருகிறது என்றாலும், 4 வீல் டிரைவுக்கு காரை மாற்றிக் கொள்ளலாம். 4 வீல் டிரைவிலும் குறைவான திறன் வேண்டுமா? அதிக திறன் வேண்டுமா என்று செலக்ட் செய்ய வட்டமான நாப் கொடுத்திருக்கிறார்கள்.

கேபினில் உட்கார்ந்தால், வெளிச்சத்தம் குறைவாகவே கேட்கிறது. இன்ஜின் சத்தமும் அவ்வளவாக இல்லை. இன்ஜினில் வைப்ரேஷன் குறைவுதான். குறைவான வேகத்தில் இன்ஜின் ரெஸ்பான்ஸிவாக உள்ளது. சிட்டியில் ஓடுவதற்கு இந்த எஸ்யூவி கஷ்டப்படவில்லை. மிட் ரேஞ்சில் ஓவர்டேக் செய்ய தேவையான பவர் கிடைக்கிறது. மிட்ரேஞ்சில் டார்க் அதிகப்படியாக வேண்டும் என்பவர்களுக்கு மட்டும் கொஞ்சம் ஏமாற்றம்.

கியர் மாறும்போது எந்தச் சலனமும் இல்லை. ஸ்மூத்தாக உள்ளது. சட்டென கியரைக் குறைத்து ஏற்ற வேண்டும் என்றால் முடியாது. கியர் மாற கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்கிறது இந்த கியர்பாக்ஸ். மேனுவல் மோடும் இருந்தது. ஸ்விட்ச்சில் கியர் மாற்றுவதற்கு மேனுவல் மோடைப் பயன்படுத்தாமலேயே இருக்கலாம். சஸ்பென்ஷனை இந்தியச் சாலைகளுக்கு ஏற்றபடி மாற்றியிருக்கிறார்கள். கிரவுண்ட் கிளியரன்ஸ் ரொம்பவே அதிகம். சில கரடுமுரடான சாலைகளில் காரை ஓட்டினேன். சஸ்பென்ஷன் செம ரெஸ்பான்ஸ். Body-On-Frame எஸ்யூவிகள் எப்போதுமே ஆடி அசைந்து போகும். ஆனால், இந்த எஸ்யூவி அப்படி இல்லை. ஸ்டீயரிங் லைட்டாக இருப்பதால், சிட்டி டிரைவிங்குக்கு அருமையாக உள்ளது. வேகம் அதிகரிக்கும்போது பாடி ரோல் தெரிகிறது. இருந்தும் கார்னர்களில் ஓட்டத் தூண்டுகிறது ஆல்ட்டுராஸ். பிரேக்குகளின் ரெஸ்பான்ஸ் மற்றும் ஸ்டாப்பிங் தூரமும் ஏமாற்றவில்லை. காரை இன்னும் ஆஃப் ரோடில் டெஸ்ட் செய்யவில்லை.

யார் வாங்கலாம்?

அதிக இடவசதி, சொகுசான இன்டீரியர்கள், பொறுமையாகச் சென்றாலும் உற்சாகம் தரும் டிரைவிங் என ஒரு பாரம்பரிய எஸ்யூவி பிரியர்களுக்கு இந்த கார் ரொம்பவே பிடித்துவிடும். 9 காற்றுப்பைகள், வென்டிலேட்டட் சீட்கள், சீட் மெமரி, எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் 360 டிகிரி கேமரா என இந்த செக்மென்ட்டிலேயே புதுசாக சில வசதிகளை இந்த காரில் சேர்த்திருக் கிறார்கள். டொயோட்டாவின் பீரங்கி போன்ற பில்டு குவாலிட்டியும், ஃபோர்டின் அருமையான டிரைவிங் எக்ஸ்பீரியன்ஸும் இதில் இல்லை. டிசைனும் எல்லாருக்கும் பிடிக்குமா எனத் தெரியவில்லை. ஆனால், 26.95 - 29.95 லட்ச ரூபாய் எனும் எக்ஸ்ஷோரூம் விலையில் டொயோட்டாவுக்கும் ஃபோர்டுக்கும் பெரிய போட்டியாக நிற்கிறது ஆல்ட்டுராஸ். பழைய ரெக்ஸ்ட்டனைக் கண்டுகொள்ளா தவர்கள் இனி ஆல்ட்டுராஸைக் கண்டுகொள்ள வாய்ப்புண்டு.

ரஞ்சித் ரூஸோ 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism