Published:Updated:

எர்டிகா 2.0 மராத்ஸோவுக்குப் போட்டி ரெடி!

எர்டிகா 2.0 மராத்ஸோவுக்குப் போட்டி ரெடி!
பிரீமியம் ஸ்டோரி
எர்டிகா 2.0 மராத்ஸோவுக்குப் போட்டி ரெடி!

ஃபர்ஸ்ட் டிரைவ் - மாருதி சுஸூகி எர்டிகா

எர்டிகா 2.0 மராத்ஸோவுக்குப் போட்டி ரெடி!

ஃபர்ஸ்ட் டிரைவ் - மாருதி சுஸூகி எர்டிகா

Published:Updated:
எர்டிகா 2.0 மராத்ஸோவுக்குப் போட்டி ரெடி!
பிரீமியம் ஸ்டோரி
எர்டிகா 2.0 மராத்ஸோவுக்குப் போட்டி ரெடி!

று ஆண்டுகளுக்கு பிறகு, ‘நெக்ஸ்ட் ஜென் எர்டிகா’ என்ற பெயரில் இரண்டாம் தலைமுறை எர்டிகாவை அறிமுகம் செய்திருக்கிறது மாருதி சுஸூகி. ஏழு பேர் அமர்ந்து பயணிக்கக்கூடிய குடும்பத்துக்கான எம்பிவி என்றாலும், சிறிய காரைப் போலவே ஈஸியாக ஓட்டலாம் என்பது இதன் USP-யாக இருந்தது.

எர்டிகா 2.0 மராத்ஸோவுக்குப் போட்டி ரெடி!

மஹிந்திராவின் மராத்ஸோ விற்பனை செய்யப்படும் அதே சந்தையில் இப்போது இதுவும் விற்பனைக்கு வந்திருப்பதால், எர்டிகாவுக்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

வெளித்தோற்றம்

க்ரோம் பூச்சு கொண்ட கிரில், பக்கவாட்டில் வளையும் புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், கவர்ச்சியான டெயில் லைட்ஸ் ஆகியவை எர்டிகாவின் அழகைக் கூட்டுகின்றன. காரின் இருபுறமும் இருக்கும் கிரீஸ் கோடுகள் அழுத்தமாக இருப்பதால், எர்டிகா முன்பைவிட ஸ்டைலாகத் தெரிகிறது. கதவின் கைப்பிடிகள், மல்டி ஸ்போக் அலாய் வீல் ஆகியவை கவர்ச்சி.  காரின் பானெட் டொயோட்டா இனோவாவை நினைவுப்படுத்துகிறது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எர்டிகா 2.0 மராத்ஸோவுக்குப் போட்டி ரெடி!

பழைய எர்டிகாவைவிட புதிய எர்டிகா, அகலம், நீளம், உயரம் என்று எல்லா திசைகளிலும் வளர்ந்திருக்கிறது. அதனால் கேபின் ஸ்பேஸும் தாராளமாகியிருக்கிறது. ஆனால், பழைய எர்டிகா அளவுக்குத்தான் புதிய எர்டிகாவின் (பெட்ரோல்) எடை இருக்கிறது. புதிய டீசல் எர்டிகா மட்டும் பழைய எர்டிகாவைவிட சுமார் இருபது கிலோ எடை குறைந்திருக்கிறது. இதன் வீல்பேஸ் அதே 2,740 மி.மீதான்.

உள்ளலங்காரம்

முன்பு இருந்ததைக் காட்டிலும் கேபின் தாராளமாகக் காட்சியளிக்கிறது. இரண்டாவது வரிசை இருக்கைகளை மட்டுமல்ல, மூன்றாவது வரிசை இருக்கைகளைக்கூட பின்னோக்கிச் சாய்த்துக் கொள்ள முடிகிறது. இரண்டாவது வரிசை அளவுக்கு இல்லாவிட்டாலும், மூன்றாவது வரிசைக்கும் பெரிய கண்ணாடிகள் இருப்பதால், காரில் பயணிக்கும்போது அடைப்பட்ட உணர்வு ஏற்படவில்லை. 

எர்டிகா 2.0 மராத்ஸோவுக்குப் போட்டி ரெடி!

ஸ்டீயரிங் வீல், டச் ஸ்க்ரீன், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், கியர் லீவர், ஏ.சி திருகுகள் என்று எர்டிகாவின் உள்ளே இருக்கும் பல பாகங்கள்... மற்ற மாருதி கார்களில் இருக்கும் அதே பாகங்கள்தான். கறுப்பு மற்றும் பீஜ் என்று இரட்டை வண்ணங்களில் டேஷ்போர்டு மிளிர்கிறது. இடையே மர வேலைப்பாடுகள் டேஷ்போர்டுக்கு மெருகூட்டுகின்றன.  ஏ.சிக்கான ஏர்வென்ட்... கூடவே, அதன் நீட்சியாக இருக்கும் டம்மி ஏர்வென்ட் ஆகியவை விலை உயர்ந்த ஆடி கார்களை நினைவுப்படுத்துகின்றன. கதவுகள் பெரிதாக இருப்பதால், காரில் ஏறுவதும் இறங்குவதும் சுலபமாக இருக்கிறது. பக்கவாட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் சப்போர்ட் மற்றும் குஷனிங் தரம் அருமை. முன்பக்க சீட்டுகள் உயரமாக இருப்பதால், வெளிச்சாலை தெளிவாகத் தெரிகிறது. ஸ்லைடிங் ஆர்ம்ரெஸ்ட் கூடுதல் வசதி.

எர்டிகா 2.0 மராத்ஸோவுக்குப் போட்டி ரெடி!

 மூன்றாவது வரிசை சீட்டுகளுக்குப் போக, இரண்டாவது வரிசையில் இருக்கும் சீட்டின் தலையில் இருக்கும் விசையை லேசாகத் தூக்கினாலே, அது சாய்ந்துவிடுகிறது. அதனால் மூன்றாவது வரிசை சீட்டுகளுக்குப் போவது சுலபமாக இருக்கிறது. ஆனால் மூன்றாவது சீட்டில் பெரியவர்கள் வெகு நேரம் உட்கார முடியாது.  இருந்தாலும் மூன்றாவது வரிசைக்கும் பெரிய கண்ணாடிகள், மொபைல் போன் சார்ஜிங் பாயின்ட்ஸ் எல்லாம் கொடுக்கப் பட்டிருக்கின்றன.
 
மூன்று வரிசை இருக்கை இருந்தாலும், டிக்கியில் பெட்டி படுக்கைகளை வைக்க 209 லிட்டர் இடம் இருக்கிறது. மூன்றாவது வரிசை சீட்டுகளை மடக்கினால் 550 லிட்டர் அளவுக்கும், இரண்டாவது வரிசை சீட்டுகளையும் சேர்த்து மடக்கினால் 803 லிட்டர் அளவுக்கு பூட் ஸ்பேஸ் கிடைத்து விடுகிறது. யார் கண்ணிலும் படாமல் சில பொருட்களை ஒளித்துவைக்க விரும்பினால், டிக்கியில் அதற்கும் தனி இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பெட்ரோல் இன்ஜின்

சியாஸில் இருக்கும் அதே 1,462 சிசி K15 பெட்ரோல் இன்ஜின்தான் இதிலும். 1.4 லிட்டர் சக்தி கொண்ட பழைய எர்டிகாவோடு ஒப்பிடுகையில், இந்தப் புதிய இன்ஜின், 13 bhp பவரையும், டார்க்கில் 0.8 kgm திறனையும் அதிகமாக வெளிப்படுத்துகிறது. சியாஸைப் போலவே இதிலும் ஹைபிரிட் சிஸ்டம் இருக்கிறது. ஒவ்வொரு முறை பிரேக் போடும்போதும் கிடைக்கும் சக்தி, இதில் இருக்கும் லித்தியம் ஐயன் பேட்டரியில் சேமிக்கப்படுகிறது. இப்படி பேட்டரி சேமிப்பதை கிராஃபிக்ஸ் மூலமாகவும் டிஸ்ப்ளே யூனிட்டில் பார்க்க முடிகிறது.  ஸ்டார்ட் - ஸ்டாப் சிஸ்டம் என்று இன்னுமொரு வசதியும்  உண்டு. சிக்னலில் கார் ஐடிலிங்கில் நிற்கும்போது, இன்ஜின் தானாகவே ஆஃப் ஆகிவிடும். இது போன்ற சமயங்களில் ஏ.சியும் சேர்ந்து ஆஃப் ஆகிவிடுகிறது.

பழைய எர்டிகாவைப் போலவே சத்தமில்லாமல் இது ஸ்மூத்தாக இயங்குகிறது. நகர்ப்புறச் சாலைகளில் ஓட்டும்போது  தட்டுப்பாடே இல்லாமல் இன்ஜின், சக்தியை வாரி வழங்குகிறது. ஓவர்டேக் செய்ய அதிக சக்தி தேவைப்படும் தருணங்களில், கியரைக் குறைக்க வேண்டியிருக்கிறது. 6,200 rpm வரை இயங்கினாலும்,  3,500 rpm தாண்டினால் சத்தம் போடுகிறது. 

எர்டிகா 2.0 மராத்ஸோவுக்குப் போட்டி ரெடி!

இன்ஜின் வேகத்தை, நினைத்தவுடன் அதிகரிக்க முடியவில்லை. நின்று நிதானமாகத் தான் வேகமெடுக்கிறது எர்டிகா. 2,000 rpm வரை டர்போ லேக் இருக்கிறது. ஐந்து கியர்கள் கொண்ட இது 19.34 கி.மீ மைலேஜ் கொடுப்பதாகவும், 4 கியர்கள் கொண்ட AT  மாடல் என்றால், 18.69 கி.மீ-யும் மைலேஜ் தருவதாகவும் மாருதி சுஸூகி சொல்கிறது. இது பழைய எர்டிகாவைவிட அதிகம். நாம் முழுமையான டெஸ்ட் டிரைவ் செய்யும் போதுதான் உண்மையான மைலேஜ் தெரிய வரும்.

பெட்ரோல் இன்ஜின் AT

எர்டிகா பெட்ரோல் ஆட்டோ மேட்டிக்கைப் பொறுத்தவரை, ஒரு கியரிலிருந்து இன்னொரு கியருக்கு கார் மாறுவது தெரியவேயில்லை. அந்த அளவுக்கு கியர் ஷிஃப்ட்டிங் ஸ்மூத்தாக நடக்கிறது. ஆட்டோமேட்டிக் வேரியன்ட்டில் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் கொடுத்திருக்கிறார்கள். இதில் நான்காவது கியர் என்பது ஓவர்டிரைவ். ஓவர்டிரைவ் தேவையில்லை என்றால், அதை ஆஃப் செய்துக்கொள்ளக்கூடிய ஆப்ஷனும் உண்டு. இது தவிர L எனப்படும் LOW MODE  ஆப்ஷனும் உண்டு. செங்குத்தான பாதைகளில் ஏறுவதற்கு இது உதவும். ஆட்டோமேட்டிக் வேரியன்ட்டில் ESP மற்றும் ஹில்-ஹோல்ட் வசதியும் உண்டு.

டீசல் இன்ஜின்

90bhp சக்தியையும், 20kgm டார்கையும் கொடுக்கக்கூடிய ஃபியட்டின் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின்தான் எர்டிகாவின் டீசல் வேரியன்ட்டை இயக்குகிறது. இது நம்பகரமானது மட்டுமல்ல; நிருபிக்கப்பட்ட இன்ஜினும்கூட! முந்தைய டீசல் எர்டிகாவைவிட இது லிட்டருக்குச் சுமார் ஒரு கி.மீ அதிக மைலேஜ்... அதாவது 25.47 கி.மீ கொடுப்பதாக மாருதி சுஸூகி சொல்கிறது. ஆனால், இங்கே அதிர்வுகளும் சத்தமும் அதிகம். சிறிய இன்ஜின் என்பதால், ஸ்பீடு பிரேக்கர்களை முதல் கியரில்தான் கடக்க வேண்டியிருக்கிறது. காரில் பயணிகளோடு லக்கேஜும் இருந்தால், டிரைவரால் வேகத்தை மெல்ல மெல்லத்தான் கூட்ட முடியும். இது 5,100 rpm வரை ‘ரெவ்'வானாலும், 2,100 rpm முதல் 4,500  rpm வரைதான் இன்ஜின் உற்சாகமாகச் செயல்படுகிறது.

 ஸ்விஃப்ட், டிசையர், பெலினோ, இக்னிஸ் ஆகிய கார்கள் தயாரிக்கப்படும் அதே ஹார்டெக்ட் பிளாட்ஃபார்மில்தான் எர்டிகாவும் தயாரிக்கப்படுகிறது.

மேடு பள்ளங்கள் கொடுக்கும் அதிர்வுகளை எர்டிகா அற்புதமாக உள்வாங்கிக் கொள்கிறது. என்னதான் வேகமாகப் போனாலும், அதிர்வுகள் இல்லாமல் நிலைத்தன்மையோடு பயணிக்கிறது. இது MPV என்றாலும், ஓட்டுவதற்கு உயரமான ஹேட்ச்பேக்போல சுலபமானதாக இருக்கிறது. ஸ்டீயரிங்கும் நாம் இடும் கட்டளையைக் கச்சிதமாக நிறைவேற்றுகிறது.

வேல்ஸ் படங்கள்: ப.சரவணக்குமார்

எர்டிகா 2.0 மராத்ஸோவுக்குப் போட்டி ரெடி!

ந்தேகமேயில்லை. பழைய எர்டிகாவைவிட புதிய எர்டிகா பல வகைகளிலும் மேம்பட்டிருக்கிறது. இடவசதி, சொகுசு, விலைக்கேற்ற மதிப்பு, கவர்ச்சி யான டிசைன் என்று எல்லாமே சூப்பர். அதே போல ஓட்டுதல் தரமும் முன்னேற்றம் கண்டிருக்கிறது. புதிய அம்சங்களும் இதன் மதிப்பைக் கூட்டியிருக்கின்றன.

பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட எர்டிகா சத்தம் போடாமல் ஸ்மூத்தாக இயங்கினாலும், இதை ஓட்டும்போது உற்சாகம் ஏற்படவில்லை என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும். அதேபோல பெட்ரோல்  AT வேரியன்ட் வாங்க விரும்புகிறவர் களுக்கு, டச்-ஸ்க்ரீன் இல்லை என்பது ஏமாற்றமாக இருக்கலாம். டீசல் இன்ஜின் கொண்ட எர்டிகா சத்தம் போடுகிறது.

இந்தக் குறைகளை எல்லாம் எர்டிகாவின் விலை மறக்கடிக்கச் செய்து விடுகிறது. கொடுக்கும் பணத்துக்கு மதிப்புள்ள, பிராக்டிக்கலான, 7 சீட் MPV  வாங்க நினைப்பவர்களுக்கு எர்டிகா சரியான சாய்ஸ்.