எதிர்காலம் இப்படித்தான் இருக்கும்!
ராபர்ட் பாஷ் நிறுவனம் நடத்திய Beyond Mobility 2.0 என்ற நிகழ்ச்சியில் ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.

ஆட்டோமொபைல் துறையின் முதல் மாற்றமாக ஆட்டோமேஷன்தான் இருக்கப் போகிறது. Embedded தொழில்நுட்பம்தான் உற்பத்தித் துறையின் எதிர்காலமாக இருக்கப் போகிறது. ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் வாஷிங் மெஷின்போல இனி ஸ்மார்ட் தொழிற்சாலைதான் அடுத்த கட்டம். ஸ்மார்ட் தொழிற்சாலை என்பது ‘Artificial intelligence’ மூலம் செயல்படும். எல்லா இயந்திரங்களிலும் வைப்ரேஷன் சென்சார் வைத்துவிடுவார்கள். எங்கு தவறு நடந்தாலும், அது திறையில் தெரிந்துவிடும். எதனால் எப்படி தவறு நடக்கிறது என்று பார்த்து, அதிகபட்சம் 1 மணிநேரத்தில் அதைச் சரிசெய்துவிடலாமாம். அதற்கு அடுத்து VR தொழில்நுட்பம். எதிர்காலத்தில் பைலட்டுகள்போல சிமுலேஷன் முறையில்தான் பயிற்சி பெறப்போகிறோம். கண்ணில் ஒரு VR Box, கையில் இரண்டு ஜாய்ஸ்டிக் போதும்... நாம் களத்தில் போவதற்கு முன்பே கள அனுபவத்தைத் தந்து விடுவார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த மாநாட்டில் கடைசியாகவும், முக்கியமாகவும் குறிப்பிட்டது ‘Internet of Things’ (IoT). ஒரு பொருளை நாம் அத்தியாவசியமாகப் பயன்படுத்தும் எல்லா பொருட்களுடனும் இணைப்பதுதான் இந்த IoT. நம் வீட்டை, அலுவலகத்தை, லேப்டாப்பை, கார் மெக்கானிக்கை, ஆம்புலன்ஸ் சேவையை, டோல் சேவையை என இன்னும் பல விஷயங்களை இணைப்பதால் நம் காரில் இருந்தே பல விஷயங்களை செய்ய இயலும்.

சர்வீஸ் தாமதமானால் மணிக்கு 500 ரூபாய்!
மஹிந்திரா நிறுவனம், பிளாஸோ - X என்ற டிரக் வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 'பழைய பிளாஸோ ட்ரக்குகளை ஒப்பிடும்போது, பிளாஸோ-X அதிக எரிபொருள் சேமிப்பைக் கொடுப்பதற்காகவே உருவாக்கப்பட்டது' என்கிறார் மஹிந்திரா டிரக் & பஸ் நிறுவனத்தின் வினோத் சாஹோ.
‘பழைய மாடல் பிளாஸோ டிரக்குகளை விட இந்த பிளாஸோ - Xல் சஸ்பென்ஷன், பிரேக்கின் ஏர் மேனேஜ்மென்ட் சிஸ்டம், ஹேண்ட்லிங் ஆகியவை மேம்பட்டுள்ளன. பியரிங், கியர் போன்றவை நீடித்து உழைக்கும். கன்டெய்னர், டிராக்டர், டிரெய்லர் மற்றும் டிப்பர் மாடல்களில்கூட இந்த டிரக்கை வாங்கலாம். முந்தைய மாடலை விட X மாடல் ட்ரக்கில் 5 சதவிகிதம் அதிக மைலேஜ் கிடைக்கும்’ என மஹிந்திரா கூறுகிறது.
இந்த டிரக்குடன் மஹிந்திரா தனது North-South சர்வீஸ் காரிடாரையும் அறிமுகப் படுத்தியிருக்கிறது. 100 கிலோ மீட்டருக்கு ஒரு சர்வீஸ் டச் பாயின்ட் இங்குள்ளது. வாகனம் எங்கு நின்றாலும், 4 மணிநேரத்தில் டிரக் இருக்கும் இடத்துக்கு ஆபத்பாந்தவனாக வந்துவிடுவார்களாம். இல்லையென்றால், ஒவ்வொரு மணி நேரத்துக்கும், ரூ.500 இழப்பீடு கொடுப்பதாகவும் அறிவித்துள்ளார்கள்.
