அடிமைப் பெண்’ படத்துக்கு டிசைன் செய்வதற்கு ஸ்டில்ஸ்களைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். டிசைனர் பரணி, அவற்றிலிருந்த எம்.ஜி.ஆர் கூன் போட்டபடி நிற்கும் படத்தையே அன்றைய விளம்பரத்துக்குப் பயன்படுத்தினார். எம்.ஜி.ஆரின் காதல் காட்சியில் இருந்தோ, சண்டைக்காட்சியில் இருந்தோ படத்தைப் பயன்படுத்தும்படி பரணியிடம் கேட்டுக்கொண்டார்கள். ‘கூன் போட்ட படம்தான் சரி... இல்லையென்றால் நான் விலகிக்கொள்கிறேன்’ எனப் பிடிவாதமாக இருந்தார் பரணி.

‘ஆரண்ய காண்டம்’ தொடங்கி, ‘சர்கார்’, ‘செக்கச் சிவந்த வானம்’ வரை தன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களால் அசத்தி வரும் கோபி பிரசன்னா, அப்படி ஒரு பிடிவாதக்காரர். தனித்துவமான அடையாளங்களால் குறுகிய காலத்தில் உயரம் அடைந்தவர். அவரிடம் பேசினேன்.

‘‘பூக்கடைக்கு விளம்பரம் செய்வதுபோல பிரபலங்களைப் பிரபலப்படுத்த வேண்டிய வேலை. இதில் என்ன மாதிரியான சவால்களை எதிர்கொள்கிறீர்கள்?’’

‘‘மூன்று தீபாவளி கடந்து ஓடிய சினிமாக்கள் இருந்தன. ஒரு வருடம் ஓடியதும் உண்டு. 25 வாரங்கள் ஓடின. இன்றைய சினிமா மூன்று நாள்கள் முதல் மூன்று வாரங்கள் வரை எனச் சுருங்கிவிட்டது. திரையில் டைட்டில் போட்டதில் இருந்து படம் ஓடிய காலம் போய், ஃபர்ஸ்ட் லுக்-கில் இருந்தே மக்களை ஈர்க்க வேண்டிய கட்டாயம். டைட்டில், முதன் முதலில் வெளிவர வேண்டிய புகைப்படம் எல்லாமே படம் ரிலீஸ் ஆகிற அளவுக்கு முக்கியமாகிவிட்டது.’’

‘‘கதையைக் கேட்டதும் போஸ்டருக்கான டிசைன் கருக்கொள்ளும் தருணம்?’’

‘‘சமீபத்து உதாரணம் சொல்கிறேன். ‘96’ கதையைக் கேட்டபோதே ராம், ஜானு இருவரும் நடு இரவில் சாலையில் நடந்து வரும் காட்சிதான் முதல் போஸ்டர் என்றேன். அந்தப் படத்தின் எல்லா போஸ்டர் டிசைனுமே அது கதையாக இருந்தபோதே மனதில் உருவான சித்திரங்கள்தான். ஆனால், விஜய்சேதுபதி, த்ரிஷா போன்ற பெரிய நடிகர்களை முகமே தெரியாத அளவுக்கு சிறியதாகப் போட்டால் எப்படி என்ற கேள்வி வந்தது. படம் முழுக்க அவர்கள் இரண்டு பேர்தான் வருகிறார்கள். முதல்முறையே அவர்களைக் காட்டிவிட்டால், அடுத்து சொல்வதற்கு எதுவும் இருக்காதே? அதற்காக சிறிய மேஜிக் செய்ய வேண்டியிருந்தது. அந்த இருவரையே அடுத்தடுத்த டிசைன்களில் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதுபடுத்திக் காட்ட வேண்டியிருந்தது.’’

‘‘பொதுவாக எல்லோரும் கதையைச் சொல்லித்தான் டிசைன் கேட்கிறார்களா? படத்தை முடித்துவிட்டு வந்து புகைப்படங்களைக் காட்டி டிசைன் செய்யச் சொல்வார்களா?’’

‘‘என்னைப் பொறுத்தவரை கதையைக் கேட்காமல் டிசைன் செய்வதற்கு சம்மதிப்பதில்லை. ‘கத்தி’ படத்துக்கு விளம்பரத்துக்கு அழைத்து, கதையைச் சொல்லத் தயங்கினார்கள். பிடிவாதமாக இருந்தேன். பிறகுதான் கதையைச் சொன்னார்கள். இசையமைப்பாளருக்கும் கேமரா மேனுக்கும் போல டிசைனருக்கும் கதையின் ‘மூடு’ அவசியம் தெரிந்திருக்க வேண்டும். காதல், ஆக்ஷன், காமெடி என ஜானர் தெரிய வேண்டும்.

‘பரதேசி’ படத்தில் அதர்வாவின் உருவத்தைத் தலைகீழாகத் தொங்குவதுபோல அமைத்திருந்தேன். அவர் உட்கார்ந்த நிலையில் கத்துவதைப் போலத்தான் புகைப்படம் கொடுத்தார்கள். அவரைத் தலைகீழாகத் தொங்கவிட்டு, அவர் காதில் இருந்த கடுக்கன் மேல் கீழாகத் தொங்குவதுபோல மாற்றினேன். வாழ்வைத் தூக்கிச் சுமக்கும் வலி அதில் தெரிய வேண்டும் என நினைத்தேன். பாலா ரசித்துப் பாராட்டினார். ‘மெர்சல்’ படத்தின் டைட்டில் சீறிவரும் காளையின் முகத்தைப் போல அமைத்திருந்தேன். இவை எல்லாமே கதையை உள்வாங்கினால்தான் சாத்தியம்.

மணிரத்னம் சார்... மூன்று நிமிடங்களில் கதையைச் சொன்னாலும் மூளைக்குள் கதையை ஏற்றிவிடுவார். எனக்கு அதுபோதும்.’’

‘‘உங்களுடைய பரீட்சார்த்தமான முயற்சிகளை ஏற்றுக்கொள்ளாத நேரங்களில் என்ன செய்வீர்கள்?’’

‘‘விலகி வந்துவிடுவேன். சில படங்களில் பாதியில் அப்படி வந்திருக்கிறேன்.’’

‘‘உரிய அங்கீகாரம் கிடைப்பதாக நினைக்கிறீர்களா?’’

‘‘படத்தின் கதை விவாத நேரத்தில் இருந்து படத்தின் வெற்றிவிழா போஸ்டர் வரை உடன் பணியாற்றுகிற வேலை இது. இசை, எடிட்டிங், கேமரா போல முக்கியத்துவமானது. ஆனால், பரணி, உபால்டு போன்ற பெரிய திறமைசாலிகள் பற்றிய பதிவே இல்லை. மாநில அளவிலோ, தேசிய அளவிலோ சினிமா டிசைனுக்கு விருதுகள் இல்லை. அதுதான் வருத்தம்.’’

தமிழ்மகன் - படங்கள்: க.பாலாஜி