ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தமிழ் மீது ஆர்வம் காட்டும் காலம் இது. அப்படி ஓர் அதிகாரிதான், கூட்டுறவுத்துறை தேர்தல் ஆணையர் மு.இராசேந்திரன். இவர் எழுதிய ‘1801’ நாவல் மலேசியாவில் இயங்கும் டான் ஸ்ரீகே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் அனைத்துலகப் பிரிவில் சிறந்த படைப்புக்கான விருதைப் பெற்றுள்ளது. விருதோடு சேர்த்து 10 ஆயிரம் அமெரிக்க டாலரையும் பெற்ற மகிழ்ச்சியில் இருந்தவரைச் சந்தித்தேன்.

“மதுரை திருமங்கலம் பகுதியிலிருக்கும் வடகரைதான் என் கிராமம். ஆங்கில இலக்கியம் முடித்துவிட்டு, சட்டம் படித்தேன். சட்டம் படித்துக்கொண்டிருக்கும்போது ஆட்சிமன்றத் தேர்வில் தேர்வாகி, உதவி ஆணையர் பணிக்குச் சென்றுவிட்டேன். பணியில் இருந்துகொண்டே திருக்குறளில் இருக்கும் சட்டக் குறிப்புகள் பற்றி ஆய்வுசெய்து முனைவர் பட்டமும் வாங்கினேன்.

தீவிரமான எழுத்துக்குள் வந்தது கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான். 1990-ம் ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சை மற்றும் நாகை என இரண்டு தனித்தனி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் வரலாற்றை ஒரு நூலாகப் பதிவு செய்தேன். பிறகு மகாமகம் குறித்து ஒரு நூல் எழுதினேன். இரண்டையும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.

2008-2011 காலகட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது வந்தவாசிப் போர் நடைபெற்றதன் 250-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அதற்காக கவிஞர் வெண்ணிலாவுடன் இணைந்து வந்தவாசிப் போர் உருவான சூழல், அந்தப் போரினால் ஏற்பட்ட விளைவுகள் போன்றவை பற்றி ‘வந்தவாசிப் போர் 250’ என்ற ஒரு நூல் வெளியிட்டோம்.

வந்தவாசிப் போர்தான் 1750-களுக்குப் பின்னர் இந்தியாவை ஆளப்போவது பிரிட்டிஷ்காரர்களா, ஃபிரெஞ்சுக்காரர்களா என்பதை முடிவுசெய்தது. அதற்குப் பின்னர் என்னுடைய குடும்ப வரலாற்றை மையமிட்டு ‘வடகரை. ஒரு வம்சத்தின் வரலாறு’ என்ற நாவலை எழுதினேன். அதன் பின்னர் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சோழர், பாண்டியர், சேரர், பல்லவர் என எல்லா மன்னர்களின் காலகட்டச் செப்பேடுகள் பற்றிய ஆய்வு நூல்களை எழுதியுள்ளேன்.

வந்தவாசிப் போர் மாதிரி தமிழகத்தின் மறைக்கப்பட்ட பக்கங்களைக் கண்டுபிடித்து வெளிக்கொண்டுவர வேண்டும் எனும்போதுதான் 1801-ம் ஆண்டில் மருது சகோதரர்களால் பிரிட்டிஷாரை எதிர்த்து நடத்தப்பட்ட போர் பற்றித் தெரியவந்தது. `இந்தியாவின் முதல் சுதந்திரப் போர்’ என்றழைக்கப்படும் சிப்பாய்க் கலகம் 1857-ம் ஆண்டில் நடந்தது. ஆனால், அதற்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே, தமிழகத்தில் சுதந்திரக் கனல் பற்றிக் கொண்டது. இப்படிப்பட்ட ஒரு நாவலை எழுதியது என் வாழ்நாளுக்குப் பெருமை. இந்த நாவலை எழுதுவதற்குக் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் எடுத்துக் கொண்டேன்.

இப்போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய வரலாற்றை மையமிட்டு ஒரு நாவலை எழுத முயற்சி மேற்கொண்டு வருகிறேன். காந்தியின் எதிர்ப்பையும் மீறி இரண்டு முறை காங்கிரஸின் தலைவராக இருந்த ஒரே ஆளுமை நேதாஜிதான். அவரது அரசியலில், போராட்டத்தில், வாழ்க்கையில் மிக முக்கியப் பங்களித்தவர்கள் பெரும்பாலும் தமிழர்களாகவே இருந்திருக்கிறார்கள். அவர் தனது இறுதி நாள்களில் பயணம் செய்த வழிகளில் நானும் பயணம்செய்து அவரது வாழ்க்கை பற்றிய தரவுகளுடன்கூடிய ஒரு வரலாற்றைப் பதிவுசெய்ய வேண்டும் என்று முயற்சியில் இறங்கியிருக்கிறேன். மறக்கடிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பதிவுசெய்ய வேண்டும் என்ற ஆதங்கம்தான் என்னை இப்படியெல்லாம் பயணம் செய்ய வைக்கிறது” என்கிறார்.

ச.அழகு சுப்பையா - படம்: சொ.பாலசுப்ரமணியன்