Published:Updated:

2018-ன் சிறந்த படம், சீரிஸ் எது தெரியுமா? - கோல்டன் க்ளோப் விருதுகள் விழா

2018-ன் சிறந்த படம், சீரிஸ் எது தெரியுமா? - கோல்டன் க்ளோப் விருதுகள் விழா
2018-ன் சிறந்த படம், சீரிஸ் எது தெரியுமா? - கோல்டன் க்ளோப் விருதுகள் விழா

ஆஸ்கருக்கு இணையாகக் கருதப்படும் கோல்டன் க்ளோப் விருதுகள் விழா நடந்துமுடிந்தது. 76-வது வருடத்தில் அடியெடுத்துவைக்கும் இந்த விருதுகளில், கடந்த வருடம் வெளிவந்த சிறந்த திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல், டி.வி மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியாகும் சீரிஸ்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில், இந்த வருடம் அதிகபட்சமாக 'க்ரீன் புக்' திரைப்படம், மூன்று விருதுகளைப் பெற்றது. 'Bohemian Rhapsody' (போஹிமியன் ரப்ஸோடி) திரைப்படம் இரண்டு விருதுகளைப் பெற்றது.

இது தவிர, சிறந்த டி.வி சீரிஸ், சிறந்த அனிமேட்டட் படம் போன்ற பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. யார் யார் விருதுகள் பெற்றனர் என்ற முழுப் பட்டியல் இதோ...

சிறந்த நடிகர் (மியூசிக்கல் அல்லது காமெடி டி.வி சீரிஸ்) - மைக்கேல் டக்லஸ் (தி கோமின்ஸ்கி மெதேட்)

சிறந்த அனிமேஷன் திரைப்படம் - ஸ்பைடர்மேன் இன் டு தி ஸ்பைடர் வெர்ஸ்

சிறந்த நடிகர் (டி.வி ட்ராமா) - ரிச்சர்ட் மேடன் (பாடிகார்டு)

சிறந்த டி.வி ட்ராமா - தி அமெரிக்கன்ஸ் 

சிறந்த துணை நடிகர் (டி.வி சீரிஸ், லிமிடெட் சீரிஸ், டி.வி மூவி) - பெண் விஷாவ் (எ வெரி இங்கிலீஷ் ஸ்கேண்டல்)

சிறந்த நடிகை (லிமிடெட் சீரிஸ், டி.வி மூவி) - பாட்ரிசியா ஆர்க்யூவெட் (எஸ்கேப் அட் டன்னெமோரா)

சிறந்த இசை - ஜஸ்டின் குர்விட்ஸ் (ஃபர்ஸ்ட் மேன்)

சிறந்த பாடல் - ஷாலோ (எ ஸ்டார் இஸ் பார்ன்)

சிறந்த துணை நடிகை - ரெஜினா கிங் (இஃப் பெயல் ஸ்ட்ரீட் குட் டாக்)

சிறந்த நடிகை (டி.வி சீரிஸ்) - சாண்ட்ரா ஓ (கில்லிங் ஈவ்)

சிறந்த துணை நடிகர்- மஹெர்ஷாலா அலி (க்ரீன் புக்)

சிறந்த திரைக்கதை - நிக் கால்லேலங்கா, பிரையன் கரி. பீட்டர் பீட்டர் ஃபாரெல்லி (க்ரீன் புக்)

சிறந்த துணை நடிகை (டி.வி சீரிஸ், லிமிடெட் சீரிஸ், டி.வி மூவி) - ஃபாட்ரிசியா கிளார்க்சன் 

சிறந்த நடிகர் ( மியூசிக்கல் அல்லது நகைச்சுவை திரைப்படம் ) - கிறிஸ்டியன் பேல் (வைஸ்)

சிறந்த வெளிநாட்டு திரைப்படம் - ரோமா 

சிறந்த நடிகர் (லிமிடெட் சீரிஸ், டி.வி மூவி) - டேரன் கிறிஸ் (தி அசாசின் ஆஃப் கியானி வெர்செஸ்: அமெரிக்கன் கிரைம் ஸ்டோரி)

சிறந்த இயக்குநர் - அல்போன்ஸோ குரான் (ரோமா)

சிறந்த நடிகை (மியூசிக்கல் அல்லது நகைச்சுவை டி.வி சீரிஸ்) - ரேச்சல் ப்ரோஸ்னகன் (தி மார்வெலஸ் மிஸ்சஸ் மைசெல்)

சிறந்த மியூசிக்கல் அல்லது நகைச்சுவை டி.வி சீரிஸ் - தி கோமின்ஸ்கி மெதேட் 

சிறந்த லிமிடெட் சீரிஸ் அல்லது டி.வி மூவி -  தி அசாசின் ஆஃப் கியானி வெர்செஸ்: அமெரிக்கன் கிரைம் ஸ்டோரி

சிறந்த நடிகை (மியூசிக்கல் அல்லது நகைச்சுவை திரைப்படம்) - ஒலிவியா கால்மன் (தி ஃபேவரைட்)

சிறந்த மியூசிக்கல் அல்லது நகைச்சுவை திரைப்படம் - க்ரீன் புக்

க்ரீன் புக் படக்குழுவினர் 

சிறந்த நடிகை (ட்ராமா திரைப்படம்) - க்ளென் க்ளோஸ் (தி வைஃப்)

சிறந்த நடிகர்  (ட்ராமா திரைப்படம்) - ரெமி மாலெக் (போஹிமியன் ரப்ஸோடி)

சிறந்த ட்ராமா திரைப்படம் - போஹிமியன் ரப்ஸோடி

இந்த விழாவை முக்கிய ஹாலிவுட் திரைப் பிரபலங்கள் பங்குபெற்றுச் சிறப்பித்தனர்