பிரீமியம் ஸ்டோரி

பொருளாதாரம், பங்குச் சந்தை, வருமான வரி தொடர்பான கேள்விகளையும் அவற்றுக்கு சில பதில்களையும் தந்துள்ளோம். சரியான பதிலுக்கு 10 மார்க் என மொத்தம் 100 மார்க். இதில் 60-70 மார்க்கை நீங்கள் எடுத்தால், உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம்.

1.     விலைக்கும், தேவைக்கும் உள்ள உறவு

அ. தலைகீழ்    ஆ.நேரடி
இ. இரண்டும்

2.     இதனை எதிர்கொள்ளும் ஒருவரே வெற்றிகரமான தொழில்முனைவோர்

அ. இடர்பாடு (ரிஸ்க்)
ஆ.பிரதான இடத்தில் தொழிற் சாலைக்கான இடம்
இ. புதுமை

3.     இதன்மூலம் மத்திய அரசுக்கு பல்வேறு வழிகளில் வருவாய் வருகிறது

அ. வரிசாரா வருவாய்
ஆ. தனிநபர் வருவாய்
இ. பொது வருவாய்

4.     இந்தியாவின் ஒரே ஆயுள் காப்பீடு நிறுவனம் எல்.ஐ.சி ஆஃப் இந்தியா

அ. சரி ஆ. தவறு

நாணயம் QUIZ

5.     பங்குச் சந்தையில் நேற்றைய பங்கின் முடிவு விலையே இன்றைய ஆரம்ப விலையாக இருக்கும்.

அ. சரி
ஆ. அப்படி இருக்க அதிக வாய்ப்பில்லை

6.    பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில், முதலீட்டுக்கான பங்குகளை முதலீட்டாளர்கள் தேவுசெய்ய முடியும்.

அ. சரி    ஆ. தவறு

7.     இந்தியாவில் இப்போது தனிநபர் வருமான வரி இந்த விகிதாச்சாரத்தில் உள்ளது

அ. 10%, 20% மற்றும் 30%     
ஆ. 5%, 20% மற்றும் 30%
இ.  10%, 15% மற்றும் 30%

8.     புதிய ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டப்படி புரோக்கர்களும் பதிவுசெய்வது அவசியம்

அ. சரி    ஆ. தவறு

9.      மனைவி வேலை பார்க்கும்பட்சத்தில் அவருடன் சேர்ந்து வீட்டுக் கடன் வாங்கும்போது பெண்களுக்கான வீட்டுக் கடன் வட்டிச் சலுகை கிடைக்கும்

அ. சரி    ஆ. தவறு

10.    ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசியில் யாரையெல்லாம் சேர்க்க முடியும்?

அ. பிள்ளைகள்    ஆ. கணவன்/மனைவி
இ. பெற்றோர்கள் 
ஈ. மேற்கண்ட அனைவரையும்

- சி.சரவணன்

விடைகள்

1.     அ. தலைகீழ்

2.     அ. இடர்பாடு (ரிஸ்க்)

3    இ. பொது வருவாய்

4.     அ.சரி

5.     ஆ. அப்படி இருக்க அதிக வாய்ப்பில்லை

6.     ஆ. தவறு

7.     ஆ. 5%, 20% மற்றும் 30%

8.     அ. சரி

9.     அ. சரி

10.     ஈ. மேற்கண்ட அனைவரையும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு