Published:Updated:

‘பனை விதைப்பில் நூறுநாள் வேலைத்திட்ட பணியாளர்கள்’- வட்டார வளர்ச்சி அலுவலருக்குக் குவியும் பாராட்டுகள்

நூறுநாள் வேலைத்திட்டத் தொழிலாளர்களை ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு பயன்படுத்தப்படுவதில்லை என்ற ஒரு பொதுவான ஆதங்கம் பரவலாக நிலவுகிறது. இந்நிலையில்தான் தமிழ்நாட்டில் முதல்முறையாகப் பனை விதைப்பில் இவர்களை ஈடுபடுத்தி, சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பாரட்டுக்களை பெற்றுள்ளார் நீடாமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜூலியட் ஜெயசிந்தால். குறிப்பாக பி.டி.ஒ போன்ற பதவிகளில் இருப்பவர்கள் இதுபோன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டுவது மிகவும் அரிது. இதனால் இப்பகுதி மக்களிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது

‘பனை விதைப்பில் நூறுநாள் வேலைத்திட்ட பணியாளர்கள்’- வட்டார வளர்ச்சி அலுவலருக்குக் குவியும் பாராட்டுகள்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஒன்றாக இணைந்து கிரின்நீடா என்ற அமைப்பை உருவாக்கி, மரம் வளர்ப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். 2019-ம் ஆண்டினை குறிக்கும் வகையில் 2019 பனை விதைகள் விதைப்பு செய்யும் முயற்சியில் இறங்கினார்கள். நீடாமங்கலம் அருகே கானூரில் உள்ள வடிவழகி அம்மன் கோயிலில் இருந்து உடையாகுளம் வரை உள்ள மண் சாலையில் இரு ஆரங்களிலும் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு இவற்றை விதைப்பு செய்ய திட்டமிட்டார்கள். ஒரு அடி ஆழம், அரையடி சுற்றளவிற்குக் 2019 குழி எடுத்து தண்ணீர் ஊற்றுவதென்பது மிகவும் கடினமான பணி. இதற்கு அதிக எண்ணிக்கையிலான மனித உழைப்பு தேவைப்பட்ட நிலையில்தான்,நூறுநாள் வேலைத்திட்ட பணியாளர்களர்களை இதில் முழுமையாக ஈடுபடுத்தி இப்பகுதி மக்களின் பாராட்டுகளை பெற்றுள்ளார் பி.டி.ஒ. ஜூலியட் ஜெயசிந்தால்.

‘பனை விதைப்பில் நூறுநாள் வேலைத்திட்ட பணியாளர்கள்’- வட்டார வளர்ச்சி அலுவலருக்குக் குவியும் பாராட்டுகள்

இதுகுறித்து கிரீன் நீடா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜவேலுவிடம் பேசியபோது ‘’எங்கள் அமைப்பில் உள்ளவங்கள மட்டும் வச்சி, இவ்வளவு பெரிய பணியைச் செய்ய முடியாது என்பதால், பி.டி.ஒ ஜூலியட் ஜெயசிந்தால் மேடத்துக்கிட்ட உதவிக் கேட்டோம். பனை விதைப்புக்கு நூறுநாள் வேலைத்திட்ட பணியாளர்களை பயன்படுத்தினதாக இதற்கு முன்னாடி வேற எங்கயுமே கேள்விப்பட்டிருக்கமாட்டோம். ஒரு தயக்கத்தோடு அவங்கக்கிட்ட பேசினோம்.

நிறையவே ஆர்வம் காட்டினாங்க. ’’இது நல்ல யோசனையாக இருக்கு. பனை விதைப்பு மிகவும் அவசியம்’னு சொல்லி எங்களை பாரட்டினாங்க. முதல்நாள் 200 தொழிலாளர்களையும், இரண்டாம் நாள் 100 தொழிலாளர்களையும் இதற்கு அனுப்பினதோடு மட்டுமில்லாமல், வேலைச் சரியா நடக்கிறதா என்பதை நேரடியாகவே ஆய்வு செஞ்சாங்க. எங்கள் ஊர் மக்கள் எல்லாருக்குமே நிறைய சந்தோஷம். ஜூலியட் மேடத்தை, நெகிழ்ச்சியோடு பாராட்டிக்கிட்டு இருக்கிறார்கள்.” என்றார். ஜூலியட் ஜெயசிந்தால் அவர்களுக்கு நமது வாழ்த்துகள்