Published:Updated:

ரயில் பயணம்... கைகொடுக்கும் டிராவல் இன்ஷூரன்ஸ்!

ரயில் பயணம்... கைகொடுக்கும் டிராவல் இன்ஷூரன்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
ரயில் பயணம்... கைகொடுக்கும் டிராவல் இன்ஷூரன்ஸ்!

முனைவர் நெல்லை க.பாலசந்தர்

ந்தியாவின் முதல் ரயில் போக்குவரத்து 16 ஏப்ரல்  1853-ல் மும்பைக்கும் தானேக்கும்  இடையே நடந்தது.  தற்போதைய நிலவரப்படி, நம் நாட்டில் தினமும் 12,617 ரயில் விடப்பட்டு, சராசரியாக 2.30 கோடி பயணிகள் அவற்றில் பயணம் செய்கிறார்கள்.

இப்படிப் பயணம் செய்ய விரும்புகிற பயணிகள்  ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று டிக்கெட் வாங்க வேண்டும். இதில்  சில சிரமங்களை மக்கள் எதிர்கொள்கிறார்கள். இதனால் ஆன்லைனிலேயே டிக்கெட்களை வாங்கும் நடைமுறையைப் பல ஆண்டுகளுக்குமுன்பே கொண்டுவந்தது இந்திய ரயில்வே. அதிநவீன சாஃப்ட்வேர், டிஜிட்டல்  தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ஐ.ஆர்.சி.டி.சி. (IRCTC) என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது. அந்த இணையதளம் மூலம் பிரயாண டிக்கெட்டை வீட்டில் உட்கார்ந்தே நினைத்த நேரத்தில் கம்ப்யூட்டர், மொபைல் போன் உதவியுடன்  வாங்கிவிடலாம்.

ரயில் பயணம்... கைகொடுக்கும் டிராவல் இன்ஷூரன்ஸ்!

   புதிய மாற்றங்களுடன் மலிவு விலை டிராவல் பாலிசி

ஆனாலும், ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட்  வாங்குபவர் களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இன்னும்கூட பலர் நேரில் சென்று, வரிசையில் கால் கடுக்க நின்று ரயில் டிக்கெட் வாங்கி வருகிறார்கள்.இந்த நிலையை மாற்றி,  அதிகமான மக்கள்  ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தின் மூலம் ரயில் டிக்கெட் வாங்க வேண்டும் என நினைத்த ரயில்வே நிர்வாகம், ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தின் மூலம் டிக்கெட் வாங்குபவர்களுக்குக் கடந்த 2017 டிசம்பர் முதல் இலவச இன்ஷூரன்ஸ் திட்டத்தை அறிமுகம் செய்தது. இதனால் இணையதளத்தின் மூலம் டிக்கெட் வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த இலவச இன்ஷூரன்ஸ் திட்டத்தில் இப்போது சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி, ரயில் பயண டிக்கெட் வாங்கும்போது இன்ஷூரன்ஸ் பிரீமியம் தொகையையும் சேர்த்துக் கட்டிவிட வேண்டும். இதற்காகப் பயனாளிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை வெறும் 0.68  பைசா மட்டுமே. இது மிகக் குறைந்த தொகை. ஆனால், ரயிலில் பயணம் செய்யும் பயணிக்கு  ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால், கிடைக்கும் இழப்பீட்டுத் தொகை அதிகம்.

பிரயாணிகளுக்கு இந்த இன்ஷூரன்ஸ் பாலிசியை வழங்குவதற்கு ரயில்வே   நிர்வாகம், சில இன்ஷூரன்ஸ்  கம்பெனிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இவ்வளவு பயன் இருக்கிற இந்த இன்ஷூரன்ஸ் திட்டத்தை வாங்குவதும், வாங்காமல் இருப்பதும் பயணம் செய்பவரது விருப்பம். இன்ஷூரன்ஸ் எடுக்க விரும்பும்  முடிவை பயணியிடமே ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம்  விட்டுவிடுகிறது.

ரயில் பயணம்... கைகொடுக்கும் டிராவல் இன்ஷூரன்ஸ்!

   பாலிசி செயல்படும் விதம் 

ரயில் முதல் ஸ்டேஷனிலிருந்து கிளம்புவதில் ஆரம்பித்து கடைசி ஸ்டேஷனுக்கு ரயில் போய்ச்சேரும் வரை, பயணியானவர் விபத்தையோ அல்லது இடர்பாட்டையோ சந்தித்து அவருக்கு இழப்பு ஏற்பட்டால், டிராவல் பாலிசி மூலம் க்ளெய்ம் பெறலாம். பயணம் செய்கிறவர் ரயிலில் ஏறும்போதோ, இறங்கும்போதோ பிரச்னைகளைச் சந்தித்தாலும் க்ளெய்ம் பெறலாம்.

இந்த இன்ஷூரன்ஸ் பாலிசியை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்த, பயணியின் இ-மெயிலுக்கு பாலிசி டாக்குமென்ட் அனுப்பி வைக்கப்படும். இதன்பின், நாமினி, பற்றிய தகவலைப் பயணம் செய்தவர் சம்பந்தப் பட்ட இன்ஷூரன்ஸ் கம்பெனிக்குத் தெரிவிக்க வேண்டும். அப்படித் தெரிவித்தால், ரயிலில் பயணம் செய்பவர் விபத்தினால் பாதிக்கப்படும்பட்சத்தில், அவரது சட்டரீதியான வாரிசுதாரருக்கு இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்படும்.

   பாலிசி வாங்கும்முன் கவனிக்க வேண்டியவை 
 
டிராவல் இன்ஷூரன்ஸ் பாலிசியை வழங்க, இந்தியன் ரயில்வே நிறுவனத்துடன் சில இன்ஷூரன்ஸ் கம்பெனிகள்  புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் ரயிலில் பயணம் செய்பவர்களையும்,  இன்ஷூரன்ஸ் கம்பெனியையும் இணைக்கும் பாலமாகச் செயல்படுகிறது. க்ளெய்ம் கோருவதற்கு பயணியோ அல்லது நாமினியோ,   பாலிசியை வழங்கிய இன்ஷூரன்ஸ் கம்பெனியைத் தொடர்புகொள்ள வேண்டும். ஐ.ஆர்.சி.டி.சி-யை அணுக வேண்டியதில்லை.

மிகக் குறைவான பிரீமியம் தொகையில்   கிடைக்கும் இந்த பாலிசியை ஆன்லைனில் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மூலம் மட்டுமே வாங்க முடியும். ரயில்வே ஸ்டேஷன் சென்று பயண டிக்கெட் வாங்கும்போது, இந்த பாலிசியை வாங்க முடியாது.

ரயில் பயணம்... கைகொடுக்கும் டிராவல் இன்ஷூரன்ஸ்!

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த இன்ஷூரன்ஸ் பாலிசியின் மூலம் கவரேஜ் கிடையாது. ஆன்லைனில்  டிக்கெட் முன்பதிவு செய்யும் அனைத்துப் பிரிவு -  ஸ்லீப்பர் கோச், ஏ.சி கோச், நாற்காலிப் பிரிவு (Chair Car) பயணிகளும் பாலிசியை வாங்கலாம்.

பாலிசி வாங்கியபிறகு அதனை ரத்து செய்ய முடியாது. மேலும், பாலிசி பிரீமியம் தொகை திரும்பக் கிடைக்காது. ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் இந்தியர்களுக்கு மட்டும் இன்ஷூரன்ஸ் கவரேஜ்  வழங்கப்படும். வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு கவரேஜ் கிடையாது.

இவ்வளவு மலிவான பிரீமியத்தில் கிடைக்கும் ரயில் பயண டிராவல் பாலிசி பல்வேறு நிதிப் பாதுகாப்பு மற்றும் பயன்களை உள்ளடக்கியது.  மேலும், இந்த பாலிசியை பயணிகள் மிக எளிதாக  ஆன்லைனில் வாங்க முடியும். எனவே, இதனை வாங்கி, குடும்பத்திற்கு அதிக பாதுகாப்பைக் கொடுக்கலாம்.