தமிழ் காத்த ஸ்ரீ அகத்திய மகா முனிவரின் கமண்டலத்திலிருந்து நதியாகப் பாய்ந்தோடிய காவிரி அன்னையை, மலையிலிருந்து கீழே இறங்க வேண்டாம் என குடகு மலையில் வாழ்ந்த பெண்கள் வேண்டினராம். ஆனால், அதற்கு இசையாத காவிரித் தாய், `தமிழ் தேசத்தை வளப்படுத்திய பிறகு கடலில் கலப்பதே என் லட்சியம்' எனக்கூறி அவசர கதியில் மலையிலிருந்து கீழே இறங்கினாளாம். அப்போது காவிரித் தாயின் முந்தானை மயில் தோகையைப் போல விரிந்து தோள்களை அலங்கரித்ததாம்.

அதை நினைவுபடுத்தும் வகையில், குடகு தேசத்துப் பெண்கள் இந்த வகை புடவையை அணிவதாகப் புராணக் கதை ஒன்று சொல்லப்படுகிறது. இப்படி, கடவுளுக்கு நிகராக காவிரி நதியை வழிபடுவது கூர்க் இன மக்களின் குருதியில் கலந்துள்ளது.

பரந்து விரிந்த கர்நாடகத்தின் இயற்கை எழில் கொஞ்சும் இடம், குடகு மலை என்கிற கூர்க். பேராச்சர்யங்களைச் சந்தித்துப் புத்துணர்வு பெற விரும்புகிறவர்களின் சொர்க்க பூமி இது.

கூர்க்கில் விளையும் காபியில்தான் நம்மில் பலர் காலையில் கண் விழிக்கிறோம்.

தைரியமும் வீரமும் கொண்ட குடகு தேசத்தைச் சேர்ந்த பலர் இந்திய ராணுவத்தில் பெரிய பதவிகளை அலங்கரித்திருக்கிறார்கள். இனம், மொழி, கலாசாரம் எனத் தங்களின் தனித்தன்மையை இன்றுவரை பேணி காப்பவர்கள் குடகு மக்கள். கன்னடம், மலையாளம், தமிழ் என மூன்று மொழிகளின் சங்கமமாக விளங்கும் இவர்களது மொழி உச்சரிப்பு, கேட்பவர்களை மதிமயங்கச் செய்கிறது. இங்கு, ஆண்கள் `கொடவாஸ்' (கொட - குடகு, வாஸ் - வசிப்பவர்கள்) என்றும், பெண்கள் `கொடவதி' என்றும் அழைக்கப்படுகிறார்கள். பூஜையறையில் பயன்படுத்தும் வித்தியாசமான விளக்கு, குடகுப் பெண்களின் கலை ரசனையின் எடுத்துக்காட்டு.

உறுதியான உடலும் வியக்கத்தக்க பணிவும் கொண்ட குடகு இனப் பெண்கள், முற்றிலும் வித்தியாசமாகப் புடவை அணிகிறார்கள். கலைநயத்துடன் நெசவு செய்த முந்தானைக்கு முக்கியத்துவம்கொடுத்து இவர்கள் புடவை அணிவது காண்பவர்களை வசியம் செய்யும். இரு கைகளையும் எளிதில் உபயோகிக்க முடியும் என்பது இந்தப் புடவைகளின் இன்னொரு சிறப்பு. புடவை முந்தானையைத் தோளில் விரித்து, வேலைப்பாடு அமைந்த ஊசி(brooch)யைச் செருகி, கழுத்துக்குக் கீழே மறைக்கின்றனர். இதனால் புடவையின் பார்டர் மற்றும் முந்தானையின் டிசைன் எடுப்பாகத் தெரிகிறது.

இந்தவித புடவை மடிப்பில் ஹைநெக் காலர், ஸ்லீவ் லெஸ், ஃபுல் ஸ்லீவ், ஹாஃப் ஸ்லீவ் என எந்த வகை பிளவுஸையும் விருப்பப்படி அணிய முடியும். மலை முகடுகளில் புடவை தடுக்கி, கீழே விழுந்துவிடாமல் இருக்கவும் காபி கொட்டைகளைப் பறிப்பதற்கு ஏதுவாக இருப்பதாகவும் பல பெண்கள் கூறுகின்றனர்.

- மாடல்: திவ்யா பொனப்பா, மடிக்கேரி

போட்டோ உதவி: தேவிகா ராமரத்னம் (ithyadee.com)

ஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்