Published:Updated:

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!

Published:Updated:
ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
ஐடியா அய்யனாரு!

து சங்கீத சீஸன் மட்டுமல்ல, சண்டை சீஸனும்கூட! கூட்டணிக் கட்சிகளுக்குள் சண்டை, ஒரே கட்சிக்குள் சண்டை என எங்கு பார்த்தாலும் அமளிதுமளி. ஊடகங்களிலும் இந்த மல்லுக்கட்டுகள்தான் முக்கியச் செய்திகளாக இடம்பிடிக்கின்றன. ஆனால், இவை ஒன்றும் அவ்வளவு பெரிய பிரச்னை இல்லை. ஒவ்வொரு சண்டையையும் முடிவுக்குக் கொண்டுவரச் சின்னச் சின்ன விஷயங்கள் செய்தால் போதும்.

வைகோ - வி.சி.க:

முந்தாநாள்வரை தி.மு.க-வுடன் முறுக்கிக் கொண்டிருந்தார் வைகோ. பின்பு சைடு மிரர்ரைத் திருப்பி, கூடவந்த வி.சி.க-வுடன் ‘கா’ விட்டு திரும்ப பழம் கொடுத்திருக்கிறார். ஆனாலும் எதிர்காலத்தில்  வைகோவுடன் பஞ்சாயத்து என்றால் சமாதானப்              படுத்துவது சப்பை மேட்டர்!

தேவைப்படுவன: ரோம சாம்ராஜ்ஜியம் பற்றி பாண்டி பஜாரில் கிடைக்கும் பழைய புத்தகங்கள் சில, ஆர்.கே.சண்முகம், அன்னக்கிளி செல்வராஜ் போன்றோரின் சென்டின்மென்ட் வசனங்கள் அடங்கிய தொகுப்பு, ஒரு பாட்டில் கிளிசரின்.

பின்குறிப்பு: என்ன பரிசு கொடுத்து தாஜா செய்தாலும், வைகோ கடைசி நேரத்தில் என்ன முடிவெடுப்பார் என அவருக்கே தெரியாது. ஆகவே, எதற்கும் தயாராக இருக்கவும்.

ஐடியா அய்யனாரு!

அ.தி.மு.க - பிஜே.பி:

ஒருதாய்ப் பிள்ளைகள். யார் கண்பட்டதோ, ஆளுக்கொரு திசையில் பறக்கத் துடிக்கிறார்கள். தேசநலன் கருதி இவர்கள் கரம் கோப்பதே அவர்களுக்கு நல்லது. அவர்களுக்கு மட்டுமே நல்லது.

தேவைப்படுவன: அடுத்த கட்ட ஐ.டி ரெய்டு எங்கெங்கே என்ற பட்டியல், அடுத்த மே வரை அ.தி.மு.க-வினர் என்னவெல்லாம் பேச வேண்டும் என டெல்லியில் இருந்து வரும் ஸ்கிரிப்ட் பேப்பர், சுப்ரமணியன் சுவாமி, ஹெச்.ராஜா போன்றோரின் மவுன விரதம்.

திருநாவுக்கரசர் - இளங்கோவன்:

முன்னாள் பி.ஜே.பி-காரருக்கும் முன்னாள் திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கும் நடக்கும் சண்டையால், டெல்லிவரை அதிர்கிறது. ஸ்டாலின் உட்பட எல்லோரும் இதற்கு எண்ட் கார்டு போடத் துடிக்கிறார்கள்.

தேவைப்படுவன: இதை ஈஸியாக முடிவுக்குக் கொண்டுவர முடியாதுதான். காரணம், விதை... சிவாஜி கணேசன் காலத்திலேயே போடப்பட்டது. வேண்டுமென்றால், நிவாரணமாகக் கதர் வேட்டிச் சட்டைகள் லோடு லோடாக அனுப்பலாம்.

தமிழிசை - காயத்ரி ரகுராம்:

தமிழகத்தின் இரு பெரும் ஆளுமைகளுக்குள்(!) நடக்கும் சண்டை. குடித்துவிட்டுப் போடும் சண்டையைத்தானே பார்த்திருக்கிறோம். குடித்தாரா இல்லையா எனச் சண்டை போடப்படுவது இதுவே முதல்முறை!

தேவைப்படுவன: இந்தச் சண்டையால் தமிழக அரசியலுக்கோ, மக்களுக்கோ பைசா பிரயோஜனம் கிடையாது. இருவரிடமும் இருக்கும் மைக், நெட் பேக் இரண்டையும் பிடுங்கி விட்டாலே போதும்!