Published:Updated:

`சாதனையாளர்களுக்கான அங்கீகாரம்!' - ஆனந்த விகடனின் நம்பிக்கை விருதுகள் - 2018

`சாதனையாளர்களுக்கான அங்கீகாரம்!' - ஆனந்த விகடனின் நம்பிக்கை விருதுகள் - 2018
`சாதனையாளர்களுக்கான அங்கீகாரம்!' - ஆனந்த விகடனின் நம்பிக்கை விருதுகள் - 2018

பல்வேறு துறைகளில் சாதனைபுரிந்த மனிதர்களைக் கொண்டாடும் விதமாக, 'ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள்' என்ற பெயரில் விருதுகள் வழங்கி கௌரவித்துவருகிறது. 

அதன்படி, 2018-ம் ஆண்டுக்கான நம்பிக்கை விருதுகள் வழங்கும் விழா, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.

அந்த வகையில் சிறந்த நாவலுக்கான விருது,  வீரயுக நாயகன் வேள்பாரி நாவலுக்காக சு.வெங்கடேசனுக்கு வழங்கி கௌரவிக்கப்படுகிறது. பெருந்தமிழர் விருது  இந்திரா பார்த்தசாரதிக்கும், சிறந்த சிறுகதைத் தொகுப்புக்காக மாயக்குதிரை எழுதிய தமிழ்நதிக்கும், சிறந்த கவிதை தொகுப்புக்கான விருது, ழ என்ற பாதையில் நடப்பவன் என்ற கவிதை தொகுப்பை எழுதிய பெரு.விஷ்ணுகுமாருக்கும் வழங்கப்படுகிறது. 

மேலும் விருதுகள் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்