Published:Updated:

குளிருக்கு இதமாக இலவச சுக்குமல்லி காபி, இஞ்சி டீ!- அசத்தும் மதுரை அ.தி.மு.க பிரமுகர்

குளிருக்கு இதமாக இலவச சுக்குமல்லி காபி, இஞ்சி டீ!- அசத்தும் மதுரை அ.தி.மு.க பிரமுகர்
குளிருக்கு இதமாக இலவச சுக்குமல்லி காபி, இஞ்சி டீ!- அசத்தும் மதுரை அ.தி.மு.க பிரமுகர்

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் கடும் பனியும் குளிரும் மக்களை வாட்டி வருகிறது. இதை எதிர்கொள்ள முடியாமல் கடும் குளிரில் வாடி வரும் மதுரை மக்களுக்கு உதவும் வகையில் சுடச்சுட சுக்குமல்லி காபி, இஞ்சி டீ ஆகியவற்றை இலவசமாகக் கொடுத்து வருகிறார் அ.தி.மு.க பிரமுகரான கிரம்மர் சுரேஷ்.

வித்தியாசமான முறையில் போஸ்டர் போடுவதில் பிரபலமானவரான எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணைச் செயலாளர் கிரம்மர் சுரேஷ், தொழிலாளர்களும், எளிய மக்களும் அதிகம் வசிக்கும் அரசரடி, கரிமேடு, கிரம்மர்புரம் பகுதியினர் பயன்பெறும் வகையில் டீ, காபி வழங்கும் இந்த மையத்தை தொடங்கியுள்ளார்.


``காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 9 மணி வரையிலும் இங்கு சூடாக சுக்குமல்லி காபி, இஞ்சி டீ வழங்கப்பட்டு வருகிறது. விலைவாசி உயர்வால் கடைகளில் டீ, காபி வாங்கிப் பருக சாதாரண மக்கள் தயங்கி வரும் நிலையில், கடுமையான குளிரிலும், பனியிலும் உடல் உழைக்கும் அவர்களுக்குச் சின்ன உதவியாக இதைத் தொடங்கினேன்'' சொல்லுகிறார் கிரம்மர் சுரேஷ்.

தான் சார்ந்த கட்சி அடையாளமில்லாமல் தன் தாயார் எலிசபெத் ஜெயசீலி பெயரில் நடத்திவரும் அறக்கட்டளை மூலம் இந்தச் சேவையைத் தொடங்கியுள்ளதால் அனைத்து மக்களும் இங்கு வந்து டீ, காப்பி அருந்துகிறார்கள். இந்த வழியாகச் செல்லும் பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளும், சபரிமலை, பழனி மலைக்குச் செல்லும் பக்தர்களும் உபசரிக்கப்படுகிறார்கள். தண்ணீர்ப் பந்தல், மோர் பந்தல் போல டீ, காபி பந்தல்....!