Published:Updated:

கடிதங்கள்: பாரம்பர்ய நெல்களை மீட்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கடிதங்கள்: பாரம்பர்ய நெல்களை மீட்க வேண்டும்.
கடிதங்கள்: பாரம்பர்ய நெல்களை மீட்க வேண்டும்.

கடிதங்கள்: பாரம்பர்ய நெல்களை மீட்க வேண்டும்.

பிரீமியம் ஸ்டோரி

ணித்தரமான தலையங்கம். இது குறித்த ரவிசங்கரின் ஒரு பேட்டியைப் பார்த்துவிட்டு சிறிது குழப்பம் வந்தது. இந்தத் தலையங்கத்தைப் படித்ததும் தெளிவு பிறந்திருக்கிறது.

- என்.டி வெங்கட், விகடன்.காம்

கடிதங்கள்: பாரம்பர்ய நெல்களை மீட்க வேண்டும்.

நெல் ஜெயராமனின் சாதனைகளைப் படிக்கும்போது மிக நெகிழ்ச்சியாக இருந்தது. இப்படி ஒரு மனிதரை இறந்த பின்புதான் தெரிந்துகொண்டேன் என்பது வருத்தம் தந்தது.

க.புவனேஸ்வரி, தாம்பரம்.

வி
தைநெல் மூலம் புரட்சி செய்தவர் நெல் ஜெயராமன் அவர்கள். இந்த மண்ணுக்காக பாரம்பர்ய விவசாயத்திற்காகப் போராடிய இவரைப் போன்றவர்கள் நம்மை வழிநடத்த முடியாதபடி காற்றில் கரைந்து போனார்கள் என்று நினைக்கும்போது, எதிர்கால விவசாயமும் காற்றில் கரையுமோ என்ற பயம் ஏற்படுகிறது. நெல் ஜெயராமன் அவர்களின் பெயரில் விவசாயக் கல்லூரிகளை அரசு நிறுவி, பாரம்பர்ய நெல்களை மீட்க வேண்டும்.

- அசோக், விகடன்.காம்

மிழ் மொழி என்ற சிறிய வட்டத்துக்குள் தன்னை அடைத்துகொள்ளாத, நான் மிகவும் விரும்பிப் படிக்கும் ஓர் எழுத்தாளர் எஸ்.ரா. அவர்களின் சிறகுகள் இன்னும் விரியட்டும். இந்த விருது அவரது அர்ப்பணிப்புக்குக் கிடைத்த வெகுமதி. வாழ்த்துக்கள்!

- அருண்குமார், விகடம்.காம்

றையுதிர் காடு ஆரம்பமே அட்டகாசம். இத்தனை வாரம் வேள்பாரிக்காகக் காத்திருந்தோம். இனிமேல் இந்திரா சௌந்தர் ராஜனுக்காகக் காத்திருப்போம்...

ஸ்ரீராம், சேலையூர்

கூ
த்துக் கலை அழிவை கலைஞனின் அழிவோடு உருக்கமாக ஏக்கம் தொனிக்கச் சொல்லியுள்ளார் கவிப்பித்தன். பழையன கழிதல் சரி, அதற்கு மிஞ்சிய புதியன தோன்ற நாம் என்ன ஆதரவளித்தோம் என்ற சிந்தனையைக் கிளர்த்தியது அவரின் சிறுகதை.

- கர்ணன், சென்னை

ருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலினும் அவர் பாணியிலேயே கூட்டணிக் கணக்குகள் போடுகிறார் என்பதைக் கச்சிதமாகக் காட்டியிருந்தது கவர்ஸ்டோரி.

R.கார்த்திகேயன், நாகர்கோயில்

வா
ரந்தோறும் கலங்கடிக்கிறார் பாக்கியம் சங்கர். இனி மெஸ்ஸியைப் பார்த்தாலே ‘நான்காம் சுவர்’ மெஸ்ஸிதான் நினைவுக்கு வருவார்.

அமர்நாத், திண்டிவனம் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு