Published:Updated:

கடிதங்கள்

கடிதங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கடிதங்கள்

கடிதங்கள்

ட்டையே  செம ஷாக். புரியலையா? கரன்ட் தலைப்பு கொடுத்து ஷாக்கை ஏற்றிவிட்டது எர்டிகா 2.0 Re-Loaded. எந்திரன் 2.0 மாதிரி எர்டிகா 2.0-ம் வெற்றி பெறட்டும்!

- தீபக், திருச்சி

கடிதங்கள்

டாடாவின் ‘வ்வ்ர்ர்ரூம்’ அண்ணன் - தம்பிகள், பார்க்கவே படு ஸ்போர்ட்டியாக இருந்தார்கள். ஆனால் உருவம்தான் வேறு; உயிர் ஒன்று. டிகோர் இன்ஜினில் இன்னும் கொஞ்சம் சக்தியைக் கூட்டியிருக்கலாம்.

- சங்கர்தாஸ், கோவை

ற்கெனவே அட்வென்ச்சர் விரும்பிகளுக்கு எக்கச்சக்க பைக்குகள் இருக்கின்றன. புதிய வரவான SWM சூப்பர் டூயல் பைக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. ஹஸ்க்வர்னாவின் அடிப்படை மாடல் எனும்போது ஆர்வம் மேலும் அதிகமாகிறது.

- அபிஜித் குமார், தேனி

ட்கார்ந்து போகும் டாய் லெட்டில்கூட டிசைன் கோட்பாடு இருக்கிறது என்பது வியக்க வைத்தது. அவர் சொல்வதுபோல், சாய்வான தளம் இருந்தால் எழுந்து அமர ஈஸியாகத்தான் இருக்கும்.

- மிதிலேஷ், பெங்களூரு

ஜா
வா எனும் புயல், நிச்சயம் புல்லட்டைப் புரட்டிப்போடும் என்கிறான் என் நண்பன். சர்வீஸில் உஷாராக இருந்தால் ஜாவா தூள் கிளப்ப முடியும். 105 டீலர்கள் என்பது, RE நிறுவனத்தின் 800 டீலர்களை ஒப்பிடும்போது மிகவும் குறைவுதான். விரைந்து வா ஜாவா!

- ஜெய்ராம், திருவனந்தபுரம்

கத்புரியில் உள்ள மஹிந்திராவின் ஆஃப்ரோடிங் பயிற்சிப் பள்ளி, சாகசக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி

பை
க்கர் பாலாஜியின் பயணம் மிரட்டிவிட்டது. தனி ஒருவனாக இந்தியா முழுக்கச் சுற்றுவதற்கு ஒரு தில் வேண்டும். உலகம் முழுதும் பாலாஜி சுற்றி வர வாழ்த்துகள்!

- ரவீந்திரகுமார், மதுரை 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz