Published:Updated:

பணிக்குச் செல்லும் பெண்களுக்கான பிரத்யேக ஆடைகள்! - ஆயுஷி குட்வானி

பணிக்குச் செல்லும் பெண்களுக்கான பிரத்யேக ஆடைகள்! - ஆயுஷி குட்வானி
பிரீமியம் ஸ்டோரி
பணிக்குச் செல்லும் பெண்களுக்கான பிரத்யேக ஆடைகள்! - ஆயுஷி குட்வானி

மாத்தி யோசி

பணிக்குச் செல்லும் பெண்களுக்கான பிரத்யேக ஆடைகள்! - ஆயுஷி குட்வானி

மாத்தி யோசி

Published:Updated:
பணிக்குச் செல்லும் பெண்களுக்கான பிரத்யேக ஆடைகள்! - ஆயுஷி குட்வானி
பிரீமியம் ஸ்டோரி
பணிக்குச் செல்லும் பெண்களுக்கான பிரத்யேக ஆடைகள்! - ஆயுஷி குட்வானி

வொர்க்கிங் வுமன்களுக்கான `ப்ரீமியம் வொர்க்வேர்' (Premium Workwear) ஆயத்த ஆடைகளைத் தயாரித்து விற்பனைசெய்யும் ஆயுஷி குட்வானி, மிகக் குறுகிய காலத்தில் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளார்.

பணிக்குச் செல்லும் பெண்களுக்கான பிரத்யேக ஆடைகள்! - ஆயுஷி குட்வானி

`வொர்க்கிங் இண்டியன் வுமன்’களுக்கான ஆடைகள் உலகின் ட்ரெண்ட் செட்டர் எனப் பாராட்டப்படுபவரை டெல்லியில் சந்தித்தோம். ஒரு டிசைனர் தயாரித்த ஆயத்த ஆடையைப் பரிசோதித்து, சில மாற்றங்களைப் பரிந்துரைத்த பின்னர், நம்மிடம் பேச ஆரம்பித்தார்.

‘`இன்ஜினீயரிங் முடித்த பின் கொல்கத்தா ஐஐஎம்-மில் எம்.பி.ஏ பயின்றேன். பன்னாட்டு நிறுவனத்தில் உயரதிகாரியாகப் பல ஆண்டுகள் பணிபுரிந்தேன். அப்போது, பெண்களின் உடலில் இயற்கையாக நிகழும் மாற்றங்களான மாதவிடாய், கர்ப்ப காலம் முதல் பிரசவத்துக்குப் பிறகான எடை அதிகரிப்பு வரை எல்லாவற்றையும் மனரீதியாக வெற்றியுடன் எதிர்கொண்டேன். ஆனால், இவை என் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்களுக்கு ஈடு கொடுத்து, என் உயர் பதவிக்கான கண்ணியத்துக்குக் கைகொடுக்கும் பொருத்தமான ஆடைகள் கிடைக்காமல் அவதிப்பட்டேன். அயல்நாடுகளுக்கு அலுவலக வேலையாகப் பயணித்தபோது, பெண்களின் உடல்ரீதியான மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையிலான பொருத்தமான உடைகள் ஆயத்த ஆடைகளாகக் கிடைப்பது என் கவனத்தை ஈர்த்தது. இந்தியாவிலும் ஒரு சில சிறு நிறுவனங்கள் உள்ளூரில் இருக்கும் தையல் கலைஞர்களைப் பணிக்கு அமர்த்தி சிறிய அளவில் பெரிய முதலீடு இன்றி, அதைச் செய்து வருவதை அறிந்தேன். ஆனாலும் சர்வதேசத் தரத்துக்கு இணையாக இந்தியத் தயாரிப்புகள் இல்லாததை உணர்ந்தேன். இந்த செக்மென்ட்டில் பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர், கைநிறைய சம்பளம் வந்த பன்னாட்டு நிறுவன உயரதிகாரி பணியிலிருந்து விலகினேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பணிக்குச் செல்லும் பெண்களுக்கான பிரத்யேக ஆடைகள்! - ஆயுஷி குட்வானி

ஓராண்டுக்கும் மேலாக ஏற்றுமதி ஆடைகளைத் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து, வேலைக்குச் செல்லும் பெண்களின் கம்பீரத்தைப் பிரதிபலிக்கும் ஆடைகளை வடிவமைக்கும் நேர்த்தியைக் கற்றேன். பெண் பணியாளர்களின்  அழகு மற்றும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் விதத்தில், அவர்களுக்கான ஆடை களைத் தயாரிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினேன். விருப்பமான டிசைன், வசதியாக உணரவைக்கும் சைஸ், ஸ்டைல்... இந்தத் தாரக மந்திரமே என் தொழிலின் வெற்றி ரகசியம் என உணர்ந்தேன். இந்தியப் பெண்களின் உடல்வாகுகளை சாமுத்திரிகா லட்சணத்தின்படி வகைப்படுத்தி, அதற்கேற்ப அலுவலக ஆடைகளை வடிவமைக்க நினைத்தேன். துணிகளின் தரம், தைக்கும் நேர்த்தி எனப் பல ஆராய்ச்சிகள் செய்து, 2015-ம் ஆண்டு www.fablestreet.com என்ற இணையதளத்தின் மூலம் விற்பனையை ஆரம்பித்தேன். பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தபோது அறிமுகமான நண்பர்கள் மற்றும் தொடர்புகளைப் பயன்படுத்தி, `ஏஞ்சல் இன்வெஸ்டர்' நிறுவனங்களிடமிருந்து நிதியுதவி பெற்று தொழிலைத் தொடங்கினேன்.

23 வயதிலிருந்து 40 வயதுக்குட்பட்ட அலுவலகம் செல்லும் பெண்கள்தான் என் இலக்கு. இந்தியப் பெருநகரங்கள், இரண்டாம்நிலை நகரங்களில் எளிதில் வாடிக்கையாளர்களைக் கவர முடிந்தது. வெளிநாட்டில் பணிபுரியும் பெண்களும் எங்கள் தயாரிப்புகளை வாங்கி உடுத்தும் வகையில் சர்வதேச அளவில் கவனம்ஈர்த்தது எங்கள் பிராண்டு. எங்கள் இணையதளத்தின் மூலமாக ஆடைகளை வாங்கியவர்கள், மற்றவர்களிடம் வாய் வார்த்தையாக எங்களைப் பற்றிய குட் ரிமார்க்ஸ் சொன்னதனால் மட்டுமே இந்த நிலைக்கு உயர்ந்துள்ளோம்.

பணிக்குச் செல்லும் பெண்களுக்கான பிரத்யேக ஆடைகள்! - ஆயுஷி குட்வானி

அடுத்தகட்டமாக இப்போது ஆன்லைன் விளம்பரங்கள், வணிக இணையதளங்கள், சமூக வலைதளப் பக்கங்கள் எனக் களமிறங்கியுள்ளோம். வாடிக்கையாளர்களுடனான இந்த நேரடித் தொடர்பு எங்களுடைய மிகப்பெரிய பலம். வீட்டில் இருக்கும்போது அணியும் ஆடைகளையும் தயாரித்து விற்கச் சொல்லி பலரும் வேண்டுகோள் விடுத்தது உற்சாகத்தை அளித்தது. அதன் அடிப்படையில், அலுவலகப் பணி முடிந்தபின் உடையைத் தளர்த்திக்கொண்டு ஷாப்பிங் மற்றும் வெளியிடங்களுக்கு சௌகரியமாகச் சென்றுவரும் வகையிலான டூ இன் ஒன் ஆடைகளை அறிமுகப்படுத்தியது, மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இப்படி, எல்லா வகையிலும் மற்ற முன்னணி நிறுவனங்களின் பிசினஸ் மாடலில் இருந்து வேறுபடுத்தி, எங்கள் பிசினஸ் மாடலை வடிவமைத்துள்ளோம். எங்கள் டிசைனர்கள் தற்கால ட்ரெண்ட்டுக்கு ஏற்ப அப்டேட் செய்துகொண்டு ஆடைகளைத் தயாரிப்பதில் வல்லவர்கள். ஸ்டாண்டர்ட் சைஸ் என்பதிலிருந்து கஸ்டம் சைஸ் என்ற கான்செப்ட்டில் கவனம் செலுத்தியதே என் வெற்றிக்குக் காரணம்” என்று புன்னகைக்கிறார் ஆயுஷி குட்வானி.

மாற்றி யோசித்து சாதித்த வெற்றியின் அணிகலன் அந்தப் புன்னகை!

- ஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism