Published:Updated:

டிராவல் என்பதே ஒரு சுகானுபவம்! - அனுராதா கோயல்

டிராவல் என்பதே ஒரு சுகானுபவம்! - அனுராதா கோயல்
பிரீமியம் ஸ்டோரி
டிராவல் என்பதே ஒரு சுகானுபவம்! - அனுராதா கோயல்

தனியே.... தன்னந்தனியே....

டிராவல் என்பதே ஒரு சுகானுபவம்! - அனுராதா கோயல்

தனியே.... தன்னந்தனியே....

Published:Updated:
டிராவல் என்பதே ஒரு சுகானுபவம்! - அனுராதா கோயல்
பிரீமியம் ஸ்டோரி
டிராவல் என்பதே ஒரு சுகானுபவம்! - அனுராதா கோயல்

ண்டிடேல்ஸ் (IndiTales) - பயண ஆர்வலர்களுக்கான முக்கியமான வலைதளம். இந்தியா மற்றும் உலக நாடுகளில் பயணப் பிரதேசங்களின் சிறப்புகளை அழகான புகைப்படங்களுடன் விளக்கும் இந்த வலைதளம் பல விருதுகளை வென்றிருக்கிறது. அத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரர் அனுராதா கோயல். பயணக் காதலி.

18 நாடுகள்.... இந்தியாவில் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குப் பயணம் செய்த அனுபவம் உள்ளவர்.

‘`இந்த எண்ணிக்கையில் எனக்கு உடன்பாடில்லை. சின்னச் சின்ன நகரங்களையெல்லாம் கணக்கெடுக் கிறதில்லை. பயணம்செய்கிற மூலை, முடுக்குகள் எல்லாமே எனக்கு முக்கியம்தான்’’ என்பவருக்குப் பூர்வீகம் பஞ்சாப்.

‘`அப்பா பாதுகாப்புத்துறையில்  வேலை பார்த்திட்டிருந்ததால இந்தியா முழுவதும் டிராவல் பண்ணியிருக்கோம், பல மாநிலங்களில் வாழ்ந்திருக்கோம். சண்டிகரில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மாஸ்டர்ஸ் முடிச்சேன். பெங்களூரில் ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்திட்டிருந்தபோதே ‘இண்டிடேல்ஸ்’ என்ற பெயர்ல டிராவல் பிளாக்  ஆரம்பிச்சுப் பயணக் கட்டுரைகள் எழுதத் தொடங்கினேன்.  நான் பயணம் செய்த இடங்களைப் பற்றியும் அங்கே எனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றியும் எழுத ஆரம்பிச்சபோது வாசகர்களுக்கு அது ரொம்ப உபயோகமானதா இருந்தது.  பதிவுக்காக ஆரம்பிச்ச வலைதளப் பணி, இன்னிக்கு அதுதான் என் பிரதானமான அடையாளமா மாறியிருக்கு...’’ - அறிமுகம் சொல்பவருக்கு நினைவுகளை நிறைத்திருப்பவை பயணங்களே...

டிராவல் என்பதே ஒரு சுகானுபவம்! - அனுராதா கோயல்

‘`ரெண்டு வயசுல அம்மாவும் அப்பாவும் என்னைத் தூக்கிட்டு நிறைய ஊர்களுக்கு டிராவல் பண்ணியிருக்காங்க. முதன்முதலா எப்போ தனியா பயணம் பண்ணினேன்னு யோசிச்சா என் ஏழு வயசுல  பக்கத்து ஊருக்குப் போனதுதான் ஞாபகத்துல இருக்கு. குறைவான தூரம் என்றாலும் அந்தத் தனிப் பயணம் மறக்க முடியாதது. அதன் பிறகு வளர்ந்து, வேலை பார்க்க ஆரம்பிச்ச பிறகுதான் என் சோலோ ட்ரிப் ஆர்வம் தீவிரமானது. பயணங்களைப் பற்றி எழுதற ஆர்வம் திடீர்னு ஆரம்பமானது. ஐ.டி துறை வேலையிலேருந்த டைம்... பிளாகிங் அப்போதான் அறிமுகமாகியிருந்தது.  எக்ஸ்பெரிமென்ட் முயற்சியாதான் எழுதத் தொடங்கினேன். என்னுடைய வலைதளம் இரண்டு விஷயங்களுக்கானது - என் பயண அனுபவங்களுக்கும் நான் வாசிக்கிற புத்தக விமர்சனங்களுக்கும்...’’ - அழகாகச் சொல்கிற அனுராதாவின் வலைப்பதிவுகள் ஒவ்வொன்றும் பயண ஆர்வத்தைத் தூண்டுகின்றன.

‘`தனியே பயணம் செய்யற அனுபவம் அலாதியானது. அந்தப் பயணம் உங்களுக்கொரு முழுமையைக் கொடுக்கும். உங்ககூட பயணம் செய்ய யாருமில்லாததால் அவங்களோடு எந்தத் தொடர்பும் இல்லாம 100 சதவிகிதம் உங்க பயணத்தை ரசிச்சு அனுபவிப்பீங்க. அந்தப் பயணத்தில் நீங்க என்ன செய்யணும்னு நினைக்கிறீங்களோ அதைச் செய்கிற பூரண சுதந்திரமும் உங்களுக்கு இருக்கும். உதாரணத்துக்கு ஒரு மியூசியத்துக்குள்ளே போறீங்கனு வெச்சுப்போம். அந்த இடம் உங்களுக்கு அவ்வளவு சுவாரஸ்யமா தெரியலைனா யாரையும் கேட்காம நீங்க அங்கேருந்து வெளியேறிடலாம். அல்லது அந்த இடம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப் போய் கூடுதலா சில மணி நேரம் அங்கேயே இருக் கணும்னு நினைச்சாலும் யாரையும் கேட்க வேண்டியிருக்காது.

சில நேரம் தனிமையை உணர்வோம். குறிப்பா மாலை நேரங்களில். தனியா பயணம் பண்ணும்போது சின்னச்சின்ன விஷயங்களில்கூட அதிக கவனத்தோடு இருக்கணும். உதாரணத்துக்கு வாஷ்ரூம் போகும்போது லக்கேஜை என்ன செய்வது? தனியா பயணம் பண்ணும்போது எடுத்துட்டுத் தானே போகணும். இந்த மாதிரி சின்னச்சின்ன அசௌகர்யங்கள் இருந்தாலும் சோலோ ட்ரிப்தான் சூப்பர்’’ - தனிமையின் இனிமை சொல்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டிராவல் என்பதே ஒரு சுகானுபவம்! - அனுராதா கோயல்

பயணம் செய்தவற்றில் அனுராதாவுக்குப் பிடித்த இடம் மற்றும் பாதுகாப்பான இடம்?

‘`பதிலே சொல்ல முடியாத கேள்வி இது. வெறும் அஞ்சு இடங்களுக்கு மட்டுமே போனவங்க வேணா இதுக்கான பதிலைச் சொல்லலாம். நான் 500-க்கும் மேலான இடங்களுக்குப் போயிருக்கேன். எந்த இடத்தையும் அப்படிக் குறிப்பிட்டுச் சொல்லவே முடியாது.

பாதுகாப்பான இடம் என்பது பயணம் பண்றவங்களைப் பொறுத்தது. நாம நல்லவிதமா நடந்துக்கிட்டோம்னா எல்லா இடங்களுமே பாதுகாப்பானவைதான். சில இடங்கள் உங்களைப் பாதுகாப்பில்லாதவையா உணரச் செய்யலாம். அதுவும் ராத்திரி வேளைகளில். சோலோ ட்ரிப் போகும்போது நான் நைட்டுல ஊர் சுத்த மாட்டேன். என் பாதுகாப்பு எனக்கு முக்கியம். ஸோ... பாதுகாப்பா இருக்கிறதுக்கான வழிகள் உங்ககிட்ட இருக்கிற வரைக்கும் எந்த இடமும் உங்களை பயமுறுத்தாது.

இந்தியாவுக்குள்ளே பயணம் செய்யும்போது எந்த இடத்துக்குப் போறதுக்கு முன்னாடியும் அந்த இடத்தைப் பற்றிய எல்லா தகவல்களையும் முழுமையா தெரிஞ்சுப்பேன். மனசளவுல நிறைய பிளான் பண்ணுவேன். அதேநேரம் எதிர்பாராத நிகழ்ச்சிகளைச் சந்திக்கவும் மனசுல ஓரிடத்தைத் தயார்ப்படுத்தி வெச்சிருப்பேன். வெளிநாடுகளுக்குப் போகும்போது அந்த இடங்கள் என்னை ஆச்சர்யப்படுத்தட்டும்னு விட்டுடுவேன்’’ - `மனித வாழ்க்கையில் தவிர்க்கப்படக் கூடாதவை பயணங்கள்' என்கிறார் அனுராதா.

‘`பயணங்கள் நம் வானத்தைத் திறக்கும் சாவிகள்.  ஒரே இடத்துலேயே வாழ்ந்திட்டிருக்கிற வரைக்கும் அதுதான் என் உலகம், மொத்த உலகமும் அப்படித்தான் இருக்கும்னு குறுகிய சிந்தனையோடுதான் இருப்போம். வெளியே போனா மட்டும்தான் உலகம் எவ்வளவு பரந்து விரிந்ததுனு புரியும். மக்களின் மொழி, உடை, கலாசாரம், உணவுன்னு ஒவ்வொன்றிலும் இருக்கிற வேறுபாடுகள் சுவாரஸ்யத்தைக் கொடுக்கும்.

பயணம் எனக்குப் பரந்த அறிவைக் கொடுக்குது. என் எண்ணங்களைப் பட்டை தீட்டுது. நான் இந்த உலகத்தைச் சேர்ந்தவள் என்ற எண்ணத்தைக் கொடுக்குது. எல்லாத்தையும்விட டிராவல் என்பதே ஒரு சுகானுபவம். அதை ஒவ்வொரு பெண்ணும் அனுபவிக்கணும்.

டிராவல் என்பதே ஒரு சுகானுபவம்! - அனுராதா கோயல்

காலங்காலமா பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருந்திருக்காங்க. கடந்த சில தலைமுறைகளா வேலைக்குப் போறாங்க. ஆனாலும், வேலையிடம், அதை விட்டால் வீடுனு அவங்க உலகம் ஒரு வட்டத்துக்குள்ளேயே சுருங்கிடுது. வீட்டுப் பொறுப்புகள் அதைத் தாண்டிய பயணத்தை அவங்களுக்கு அனுமதிக்கிறதில்லை. உங்களுக்காக மட்டுமே நீங்க டிராவல் பண்ணும்போதுதான் உங்களுக்கு முன்னாடி கொட்டிக்கிடக்கிற வாய்ப்புகளையும் பார்ப்பீங்க.

அதுக்காக உடனே லக்கேஜை எடுத்துக்கிட்டு நாடு விட்டு நாடு போறேன்னு கிளம்பிட வேண்டாம். முதன்முறை டிராவல் பண்றவங்க அவங்களுக்கு வசதியான, பழக்கமான ஓரிடத்தைத் தேர்ந்தெடுக்கலாம். முதல் முயற்சியிலேயே சாகசங்கள் வேண்டாம். டிராவல் பண்ற இடமும் அங்கே உள்ள மனிதர்களும் உங்களுக்குப் பரிச்சயமானவங்களானு பாருங்க. ரெண்டு நாள்கள் பயணமா தொடங்குங்க.

டிராவல் என்பது செல்ஃப் டிஸ்கவரி. டி.வி-யில் வரும் டிராவல் ஷோஸைப் பார்த்துட்டு, நீங்களா ஒரு கற்பனையை வளர்த்துக்கிட்டுக் கிளம்பிட வேண்டாம். நாம அந்த இடத்துக்குப் போகும்போது சந்திக்கிற அனுபவங்கள் வேற மாதிரியா இருக்கும்’’ - எதிர்பாராதவற்றை எதிர்கொள்ள ஆலோசனைகள் சொல்பவரின் எதிர்காலத் திட்டங்களையும் பயணங்களே ஆக்கிரமித்திருக்கின்றன.

அவை.... இந்தியாவின் பண்டைய நகரங்களுக்குப் பயணம் செய்வதும் அவற்றைப் பற்றி எழுதுவதும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism