Published:Updated:

கடுதாசி: மாத்தியோசித்த விவசாயி!

கடுதாசி: மாத்தியோசித்த விவசாயி!
பிரீமியம் ஸ்டோரி
News
கடுதாசி: மாத்தியோசித்த விவசாயி!

வாசகர்கள்

ஜா புயலிலிருந்து, தென்னை மரங்களைக் காப்பாற்றிய திருவாரூர் மாவட்டம், இடும்பவம் விவசாயி சீனுவுக்கு வாழ்த்துகள். இயற்கையை வெல்ல முடியாது. ஆனால், இணைந்து வாழ முடியும் என்பதைச் செயலில் காட்டியுள்ளார், இந்த விவசாயி. மாத்தியோசிக்க வைத்த, இந்த இயற்கைப் பாடத்தை எங்களுக்காகச் சொல்லிய ஆசிரியருக்குப் பாரட்டுக்கள். 

கடுதாசி: மாத்தியோசித்த விவசாயி!

-எம்.சுப்புராஜ், புதுச்சேரி.

ங்கள் ஊரில், இளநீர் விற்பனைக்காகப் புதிய ரகத்தைச் சாகுபடி செய்தார். மஞ்சள் நிறத்தில் உள்ள, அந்த இளநீர் மிகவும் சுவையாக இருக்கும். இளநீருக்காகத் தென்னை வைத்தால், லாபம் கிடைக்காது என ஆரம்பத்தில் அவரைக் கேலிகூடச் செய்தனர். ஆனால், இப்போது, இளநீர் விற்பனை மூலம் நல்ல நிலையை அடைந்துள்ளார். அக்கம் பக்கத்து விவசாயிகளும் இப்போது இளநீர் தென்னை ரகத்தைச் சாகுபடி செய்யத் தொடங்கியுள்ளனர்.

-ஆர்.உதயகுமார், திருவலம்.

டந்த சில மாதங்களாக ‘வேஸ்ட் டீகம்போஸர்’ என்ற இயற்கை வளர்ச்சி ஊக்கியைப் பயன்படுத்தி வருகிறேன். என்னுடைய வயலில் உள்ள பயிர்களுக்கும் பக்கத்துத் தோட்டத்தில் உள்ள பயிர்களுக்கும் நிறையவே வித்தியாசம் தெரிகிறது. ஒருமுறை வாங்கிவிட்டால், வாழ்நாள் முழுவதும் பலன் கொடுக்கும். இந்த அற்புத உரம், அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும்.

-தி.நடராஜன், வயலூர்.

‘பசுமைப் பெண்’ சித்தம்மாவை வணங்குகிறேன். இயற்கையை மீட்டெடுக்க, பல தடைகளைத் தாண்டி பயணிக்கும் இந்தப் பெண்மணிக்கு சரியாகவே, விருது கொடுத்துள்ளீர்கள்.

-மு.சுதாதேவி, சென்னை.

தலைக்காயைக் காய்கறி கடையில் அடிக்கடிப் பார்த்துள்ளேன். ஆனால், அதன் அருமை தெரியாமல் கடந்து சென்றுவிட்டேன். அதலைக்காயை மோரில் ஊற வைத்து, வத்தல் செய்யும் நுட்பத்தையும் அதன் மருத்துவக் குணத்தையும் அருமையாகச் சொல்லியிருந்தார், சித்தமருத்துவர் மைக்கேல் செயராசு. இனி, அதலைக்காயைக் கண்டால், அள்ளிக் கொள்வேன். என் வீட்டுத்தோட்டத்திலும் கூட அதலைக்காயை பயிரிடப் போகிறேன்.

-எஸ்.சிவகாமி, சின்னியம்பாளையம்.

ந்
தல் சாகுபடி மூலம் நல்ல வருமானம் எடுத்து வரும், மருதமுத்து-வாசுகி தம்பதியரின், விவசாயப் பணி தொடரட்டும். பலருக்கும் முன்னுதாரணமாக உள்ள, இவர்களைப் போன்றவர்கள் பல்கி பெருக வேண்டும்.

-தே.ராகுல், தேனி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கடுதாசி: மாத்தியோசித்த விவசாயி!

ன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்பு கொள்ளும்போது உங்கள் செல்போன் எண்/ இ-மெயில் முகவரி குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும், ஒரு பிரதி எடுத்து வைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால் தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாத பட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடம் இருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்புத் தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.