Published:Updated:

`கார்ப்பரேட் நிறுவனங்களின் பிளாஸ்டிக் கவர்களுக்கு மட்டும் அனுமதியா?’ - கொதிக்கும் தொழிலாளர்கள்

`கார்ப்பரேட் நிறுவனங்களின் பிளாஸ்டிக் கவர்களுக்கு மட்டும் அனுமதியா?’ - கொதிக்கும் தொழிலாளர்கள்
`கார்ப்பரேட் நிறுவனங்களின் பிளாஸ்டிக் கவர்களுக்கு மட்டும் அனுமதியா?’ - கொதிக்கும் தொழிலாளர்கள்

கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிக்கும் மறுசுழற்சி செய்ய முடியாத கடினமான கவர்களுக்கு அனுமதி உள்ள போது மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு ஏன் தடை விதிக்க வேண்டும் என தொழிலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

`கார்ப்பரேட் நிறுவனங்களின் பிளாஸ்டிக் கவர்களுக்கு மட்டும் அனுமதியா?’ - கொதிக்கும் தொழிலாளர்கள்

ஜனவரி 1-ம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்தது. இந்த அறிவிப்புக்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களின் தயாரிப்புப் பொருட்கள் அனைத்து கடைகளிலும் அமோகமாக புழக்கத்தில் உள்ளன. இதற்கு மட்டும் ஏன் தடை விதிக்கவில்லை என்பது மக்களின் கேள்வியாக உள்ளது. 

இந்நிலையில் தொழிலை வரைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பிளாஸ்டிக் மறுசுழற்சி நிறுவன உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மற்றும் பை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தர்ணாப் போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர் கூறும்போது, ``விருதுநகர் மாவட்டத்தில் 80 ஆயிரம் பேர் உட்பட தமிழ்நாடு முழுவதும் 20 லட்சம் பேர் பிளாஸ்டிக் தொழிலை நம்பியுள்ளனர். மத்திய அரசு 2022-ம் ஆண்டுக்கு மேல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடைவிதித்துள்ள நிலையில் தமிழக அரசு அவசர அவசரமாக தடை விதித்தது ஏன்?.

`கார்ப்பரேட் நிறுவனங்களின் பிளாஸ்டிக் கவர்களுக்கு மட்டும் அனுமதியா?’ - கொதிக்கும் தொழிலாளர்கள்

பிற மாநிலங்களில் தடை இல்லாதபோது தமிழ்நாட்டில் மட்டும் தடை என்பது சாத்தியமில்லை. அரசு தடை விதித்துள்ள 14 வகையான பொருட்களையும் மறுசுழற்சி செய்து பயன்படுத்த முடியும் என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம். ஆனாலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் கவர்களை மறுசுழற்சி செய்யவே முடியாது என்பது தெரிந்திருந்தும் அந்த பிளாஸ்டிக் பயன்படுத்த ஏன் தடை விதிக்கவில்லை.இந்த தடை என்பது சிறுதொழில்களை அழிக்கும் வேலை தான். தமிழக அரசின் இந்த திட்டம் தோல்வியில்தான் முடியும். எனவே, தடையை அரசு திரும்ப பெற வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.