Published:Updated:

`வீரர்களின் மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்திவிட்டனர்!’ - ராகுல், பாண்ட்யாவைச் சாடும் ஹர்பஜன் சிங்

`வீரர்களின் மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்திவிட்டனர்!’ - ராகுல், பாண்ட்யாவைச் சாடும் ஹர்பஜன் சிங்
`வீரர்களின் மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்திவிட்டனர்!’ - ராகுல், பாண்ட்யாவைச் சாடும் ஹர்பஜன் சிங்

ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ஆகியோர் பயணிக்கும் பேருந்தில் என் மனைவி மற்றும் மகளுடன் பயணிக்க நான் ஒருபோதும் விரும்பமாட்டேன் என்று ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.

பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், தனியார் சேனல் ஒன்றில் `காஃபி வித் கரண்’ என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை நடத்திவருகிறார். இதில், பல்வேறு துறை பிரபலங்களும் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பது வழக்கம். இந்த நிகழ்ச்சியில், இந்திய வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் பாண்ட்யா ஆகியோர் கலந்துகொண்டனர். கிரிக்கெட் மட்டுமல்லாது, பெர்சனல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவர்கள் பகிர்ந்துகொண்டிருக்கின்றனர். அந்த நிகழ்ச்சியில், `சச்சினைவிட விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன் என்று இருவருமே கருத்து தெரிவித்திருந்தனர். , அந்த நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் இனவெறி குறித்து பாண்ட்யா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், யார் மனதையும் புண்படுத்தும் வகையில் பேசியிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக பாண்ட்யா தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாண்ட்யா, ``காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் நான் பேசிய கருத்துகள் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நிகழ்ச்சியின் இயல்பை கருத்தில் கொண்டே நான் பேசினேன். எந்த வகையிலும் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் நான் கருத்து தெரிவிக்கவில்லை’’ என்று பதிவிட்டிருக்கிறார். அவர் மன்னிப்பு கேட்டிருந்தபோதிலும் இது கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது, வீரர்களிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் அவர்கள் இருவருக்கும் பிசிசிஐ தரப்பிலிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. இது தொடர்பாக பிசிசிஐயின் நிர்வாகிகள் குழுத்தலைவர் வினோத் ராய் கூறுகையில், `தனியார் தொலைக்காட்சியில் சர்சைக்குரிய வகையில் பேசிய ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் இருவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் அளித்த பதிலில் எங்களுக்கு திருப்தி இல்லை. அவர்கள் இருவரும் 2 போட்டிகளில் விளையாட தடை செய்ய கோரி பரிந்துரைக்கபட்டுள்ளது’ என்றார்.

அதன்படி கிரிக்கெட் வீரர்கள் பாண்ட்யா, ராகுல் இருவரும் விளையாட தடைவிதித்து பிசிசிஐ உத்தரவிட்டது. இந்நிலையில்  அவர்களின் சர்சைக்குரிய வகையில் பேசிய  வீரர்கள் குறித்து ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், ``வீரர்களின் மரியாதையை இருவரும் பாழாக்கியுள்ளனர். நாங்கள் இதுபோன்ற கலாச்சாரத்தை நாங்கள் ஒருபோதும் அணியில் அனுமதிப்பதில்லை. உங்களுக்கான ஃப்ரீ டைமில் நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்துகொள்ளுங்கள்.ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ஆகியோர் பயணிக்கும் பேருந்தில் என் மனைவி மற்றும் மகளுடன் பயணிக்க நான் ஒருபோதும் விரும்பமாட்டேன். இந்த சர்ச்சை தொடர்பாக விராட் கோலி தெளிவுபடுத்தியுள்ளார். கோலி, இந்த இரண்டு வீரர்கள் அணிக்கு தேவையே இல்லை. அவர்கள் ஆஸ்திரேலியாவிலோ வேறு எங்கிருந்தாலும் சரி!’ இவ்வாறு ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.