Published:Updated:

ஓல்ட் இஸ் கோல்ட்: கோவையில் ஜோரா ஒரு கார் திருவிழா!

ஓல்ட் இஸ் கோல்ட்: கோவையில் ஜோரா ஒரு கார் திருவிழா!
ஓல்ட் இஸ் கோல்ட்: கோவையில் ஜோரா ஒரு கார் திருவிழா!

ஓல்ட் இஸ் கோல்ட்: கோவையில் ஜோரா ஒரு கார் திருவிழா!

``என் அப்பா நிறைய கார்கள் வைத்திருந்தார். அதன் தொடர்ச்சியாக இப்போது பிளைமௌவுத், போர்ட், ஜீப், மெர்சிடிஷ், கான்டஸா என ஐந்து கார்கள் வைத்திருக்கிறோம். கார்களை மெயின்டைன் பண்ணுவது ஒரு கலை, அது கிரேஸ்! மைலேஜ் குறைவாகத் தந்தாலும், இந்தக் கார்களை ரோட்டில் ஓட்டிச் செல்லும்போது திரும்பி பார்க்காத ஆளே கிடையாது.’’ 

ஓல்ட் இஸ் கோல்ட்: கோவையில் ஜோரா ஒரு கார் திருவிழா!

நடந்துகொண்டிருக்கும் கோவை விழா 2019-ன் ஒரு பகுதியாக நேற்று, `ஹெரிடேஜ் கார் விழா’ நடைபெற்றது. இது மியூசியமில் சேகரிக்கப்பட்ட கார்கள் இல்லை. இவை இன்றவிலும் கோவை மாவட்டக் கார் பிரியர்கள் பயன்படுத்தும் அந்தக் காலத்து ஸ்பெஷல் கார்கள்! செவர்லட், மோரிஸ், பியட், போர்ட், மஸ்தா, மூன்று வீல் ஜெர்மன் கார் போன்ற விதவிதமான வெளிநாட்டு கார்கள் வரிசையில் நின்று மக்களை வியக்க வைத்துகொண்டிருந்தன. 

ஓல்ட் இஸ் கோல்ட்: கோவையில் ஜோரா ஒரு கார் திருவிழா!

நிகழ்வு குறித்து கார் விழா ஒருங்கிணைப்பாளர் பிரதீப்பிடம் கேட்டபோது " கோவை மாவட்டம் ஆட்டோ மொபைல்ஸ்க்கு பெயர் போன ஊர். நம்ம ஊரை சுற்றியிருக்கும் அன்னூர், பல்லடம், திருப்பூர் போன்ற ஏரியாக்களில் உள்ள மக்கள் இது போன்ற கார்களை வைத்திருப்பதில் பெருமை கொள்கிறார்கள். சுதந்திரத்திற்கு முன் வந்த கார்கள் முதல் 1980 வரை கார்கள் வைத்திருப்பவர்கள் அதிசயம் . அது தான் "கார் எரா", இப்போது எல்லாம் கார்கள் கமர்ஸியலாகிவிட்டது. கார் வைத்திருப்பதும் ஒரு நாகரிகமாக அப்போது இருந்தது , ஓல்ட் மாடல் கார்களின் ஒரிஜினாலிட்டியை பாதுகாப்பது பெரும் கஷ்டம். அப்படிப்பட்ட பழைய கார் மாடல்களைக் காட்சிப்படுத்தவே கோவை விழாவில் இதை ஓர் அங்கமாக்கியுள்ளம்" என்றார்.

ஓல்ட் இஸ் கோல்ட்: கோவையில் ஜோரா ஒரு கார் திருவிழா!

அப்படி என்னதான் இந்த ஓல்ட் மாடல் கார்களுக்கு மவுசு என ஐந்து ஹெரிடேஜ் கார்களைச் சொந்தமாக வைத்திருக்கும் லக்ஷ்மி நாராயணபதியிடம் கேட்டபோது, ``சின்ன வயசுல இருந்தே கார் கூடதான் வளர்ந்தேன், 10 வயதிலிருந்தே கார் ஓட்டத் தெரியும். என் அப்பா நிறைய கார்கள் வைத்திருந்தார். அதன் தொடர்ச்சியாக இப்போது பிளைமௌவுத் , போர்ட், ஜீப், மெர்சிடிஷ், கான்டஸா என ஐந்து கார்கள் வைத்திருகிறோம். கார்களை மெயின்டைன் பண்ணுவது ஒரு கலை, அது கிரேஸ் ! மைலேஜ் குறைவாகத் தந்தாலும், இந்தக் கார்களை ரோட்டில் ஓட்டிச் செல்லும்போது திரும்பிப் பார்க்காத ஆளே கிடையாது. 50 லட்சம் ரூபாய் கார்களைவிட மக்கள் பழைய மாடல் கார்களை வியந்து பார்த்து போட்டோ எடுத்துக்கொள்கிறார்கள். அப்படி அவர்கள் இந்தக் கார்களை பார்த்து மகிழ்ச்சி கொள்வதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி" என பூரிப்புடன் சிரிக்கிறார். 

ஓல்ட் இஸ் கோல்ட்: கோவையில் ஜோரா ஒரு கார் திருவிழா!

நேரம் கூடிக்கொண்டிருக்க பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டிருந்தது. ஒரு ஜெர்மன் பீட்டில் வகை காரை ரசித்து கொண்டிருந்த பார்வையாளர் ஸ்பர்ஜின் விழா குறித்து பகிர்கையில், ``இங்க இருக்கும் எல்லா கார்களும் ரொம்ப ரசிக்கக் கூடியது. என்கிட்ட ஒரு மோரிஸ் கார் இருக்கு. அந்தக் காலத்து கார்கள் ஹெவி மெட்டலால் ஆனது. காரின் மேல் ஏறி நின்றால்கூட தாங்கும். இப்போது இருக்கும் கார்களுக்கு அவ்வளவு கெப்பாசிட்டி கிடையாது. புது டெக்னாலஜி கார்கள் எத்தனை வந்தாலும் பழைய கார்கள்போல கம்பீரமாக இருக்கிறது இல்லை... பழைய கார்களை உரிமை கொள்வது ஒரு போதை!’’ எனக் கூலாகச் சொல்லி சிரித்தார் ஸ்பர்ஜின் !

மெயின்டைன் பண்ணுவது சிரமமாக இருந்தாலும் பழைய கார்களுக்கான மவுசு கொஞ்சமும் குறைவதில்லை. 80-களில் வந்த திரைப்படங்களில் கார் வைத்திருக்கும் கேரக்டர் எப்படி கெத்தாகப் பார்க்கப்பட்டனரோ அதே கெத்துடன் இன்றளவும் நிற்கின்றன"அந்தக் காலத்து கார்கள்!’’  

அடுத்த கட்டுரைக்கு