Published:Updated:

கோட்டா காட்டன் டஸர் சில்க், கைத்தறி சேலைகள் - பொங்கல் ஸ்பெஷல் புடவைகள்

பொங்கல் திருநாளில் நீங்கள் அழகில் ஜொலிக்கத் தேவையான ஃபேஷன் டிப்ஸ்கள்

கோட்டா காட்டன் டஸர் சில்க், கைத்தறி சேலைகள் - பொங்கல் ஸ்பெஷல் புடவைகள்
கோட்டா காட்டன் டஸர் சில்க், கைத்தறி சேலைகள் - பொங்கல் ஸ்பெஷல் புடவைகள்

தமிழர்களின் பாரம்பர்ய பண்டிகையான பொங்கல் திருநாளுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், இந்தப் பொங்கலுக்கு என்ன டிரெண்ட் என்கிற தகவலை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் ஜோத்ஸனா.

``தைப் பொங்கல் சமயத்தில் எல்லாரும் டிரெடிஷனல் லுக்கைதான் விரும்புவார்கள். எப்போதும் கேஷுவல் லுக், டிரெண்டி லுக்கில் இருந்தவர்கள் உங்கள் உடல்வாகுக்கு ஏற்றப் புடவைகளை தேர்வு செய்து அணிந்தால் டிரெடிஷனல் லுக்கில் மாஸ் காட்டலாம். ஆக்ஸிடைஸ்டு ஜூவல்லரி இப்போது டிரென்டில் இருப்பதால், அதற்குப் பொருத்தமான சில்வர் நிற ஜரிகைகள் கொண்ட புடவைகள்தான் இப்போது லேட்டஸ்ட் டிரெண்ட்.

மெட்டீரியலைப் பொறுத்தவரை முன்பே டிரெண்டில் இருந்த, கோட்டா காட்டன், சில்க் காட்டன், கைத்தறி டஸர் சில்க், ஜூட் சில்க், லினன் சில்க் போன்றவை இந்தப் பொங்கலுக்குக் களமிறங்கியிருக்கிறது. ஒல்லி - பெல்லி பெண்கள், மீடியம் சைஸ் உடல்வாகு கொண்டவர்கள், உடல் பருமனான பெண்கள் என எல்லோருக்குமே இவ்வகை மெட்டீரியல் பொருத்தமான தேர்வாக இருக்கும். ஆனால், அதை எப்படி மிக்ஸ் மேட்ச் செய்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது உங்களின் பியூட்டி சீக்ரெட்.

ஒல்லி - பெல்லி பெண்கள் :

                                                                                                                                                      மல்டி கலரில் பெரிய பெரிய கட்டங்கள் கொண்ட புடவைகள் இப்போது லேட்டஸ்ட் டிரெண்ட் இந்த வகை டிசைன்கள் ஒல்லியான உடல்வாகு கொண்ட பெண்களை கூடுதல் அழகோடு காட்டும். புடவையில் உள்ள பார்டர்கள் பிரதானமாகத் தெரியும்படி அதிக ப்ளீட்டுகள் வைத்து புடவை கட்டலாம். கட்டங்கள் நிறைந்த புடவை எனில் பிளைன் மெட்டீரியலில் ஹை - நெக், எல்போ ஸ்லீவில் வடிவமைக்கப்பட்ட ப்ளவுஸ்களை மிக்ஸ் மேட்ச் செய்யலாம். கைத்தறி அல்லது ஜுட் சில்க் புடவைகளை தேர்வு செய்கிறீர்கள் எனில் புரோகேட் மெட்டீரியலில் ஹை நெக், பஃப் ஸ்லீவ் அணிந்து சிம்பிளான போல்கி டைப் அணிகலன்களை அணிந்து கொள்ளலாம்.

பட்டுப்புடவைகள்தான் உங்கள் தேர்வு எனில் ஹை - நெக், ஜர்தோஸி வேலைப்பாடுகள் நிறைந்த எல்போ ஸ்லீவ் பிளவுஸ், ஃபேன்ஸி கற்கள் பதித்த சிம்பிளான அக்ஸசரீஸ் என மிக்ஸ் மேட்ச் செய்தால் புடவையிலும் டிரெண்டியாக வலம் வரலாம். ஒல்லியான உடல் வாகு கொண்ட பெண்கள் சிந்தடிக் புடவைகளைத் தவிர்ப்பது நல்லது.

மீடியம் சைஸ் உடல்வாகு கொண்ட பெண்கள் :


மீடியம் சைஸ் உடல்வாகு கொண்ட பெண்களுக்கு டஸர் சில்க், கோட்டா காட்டன் போன்ற புடவைகள் அசத்தலாக இருக்கும். இவ்வகை புடவைளுக்கு போட் நெக் எல்போ ஸ்லீவ்வீல் பிளவுஸ் வடிவமைத்து, நகாஸ் டைப் நகைகளைத் தேர்வு செய்து அணிந்தால் கிளாசிக் லுக்கில் கலக்கலாம். ஜுட் சில்க், பனராஸி சில்க், டிஸ்யூ மெட்டீரியல்களைத் தேர்வு செய்கிறீர்கள் எனில் ரஃப்வில் ஸ்லீவ், ஆக்ஸிடைஸ்டு நகைகள் பொருத்தமாக இருக்கும். பட்டுச் சேலை உங்கள் தேர்வு எனில் கோல்டு ஷோல்டர் பேட்டர்ன் ஒர்க் பிளவுஸ்களை மிக்ஸ் மேட்ச் செய்து அசத்தலாம். 

உடல் பருமனான பெண்கள் : 
உடல் பருமனா பெண்கள் ஜுட் சில்க் தேர்வு நீட் லுக் தரும். நீங்கள் எந்த வகையான புடவையைத் தேர்வு செய்தாலும் சிங்கிள் ப்ளீட்  வடிவமைப்புதான் உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும். டீப் நெக், ஷார்ட் ஸ்லீவ் வகையில் பிளவுஸ்களை வடிவமைத்து புடவையின் நிறத்துக்கு ஏற்ற சிம்பிளான நெக்லஸ், ஜிமிக்கி கம்மல் போன்ற நகைகளைத் தேர்வு செய்து அணிந்தால் ஸ்மார்டாக இருக்கும். உடல் பருமனான பெண்கள் டிஸ்யூ புடவைகளை கூடுமானவரைத் தவிர்க்கலாம்.