Published:Updated:

சீனாவில் பிரபலமடையும் `ஆங்கர் ரூம்' - தனி அறையில் நடப்பது என்ன?

சீனாவில் பிரபலமடையும் `ஆங்கர் ரூம்' - தனி அறையில் நடப்பது என்ன?
சீனாவில் பிரபலமடையும் `ஆங்கர் ரூம்' - தனி அறையில் நடப்பது என்ன?

நமக்கு இருக்கும் உணர்வுகளில் கோபமும் முக்கியமான ஒன்று. சில சமயங்களில் நமக்குக் கோபம் அதிகரிக்கும்போது நாம் என்ன செய்கிறோம் என்றே தெரியாத அளவுக்கு வேறு ஒரு நபராக மாறி இருப்போம். கோபத்தில், அதிக அழுத்தத்தில் நாம் செய்யும் செயல்களால் சில நேரங்கள் பொருள்களை இழக்க நேரிடும். சில நேரங்களில் உறவுகளைக்கூட இழக்க நேரிடும்.

சீனாவில் பிரபலமடையும் `ஆங்கர் ரூம்' - தனி அறையில் நடப்பது என்ன?


சீனாவில் இப்படி கோபத்தில் இருப்பவர்களும், அழுத்தத்தில் இருப்பவர்களும் அதில் இருந்து வெளியேற `ஆங்கர் ரூம்’ என்னும் டெக்னிக்கைப் பயன்படுத்துகிறார்கள். 

ஆங்கர் ரூம் என்றால் என்ன?

ஆங்கர் ரூம் (Anger Room) என்பது ஒரு பூட்டிய அறையில் தனியாக விட்டுவிடுவார்கள். மன அழுத்தத்தில் இருந்து வெளிப்பட விரும்புபவர்கள், அங்கு இருக்கும் பொருள்களைக் கையில் இருக்கும் பேட், சுத்தியல் முதலிய ஆயுதங்களைக் கொண்டு அடித்து நொறுக்கலாம். அப்போது நமக்கு விருப்பப்பட்ட பாடல் அல்லது இசை பின்னணியில் ஒளிபரப்பப்படும். சிதறும் பொருள்கள், அவர்களைத் தாக்கி விடாமல் இருக்க அவர்களுக்குப் பாதுகாப்பு உடையும் வழங்கப்படுகிறது. 

சீனாவில் பிரபலமடையும் `ஆங்கர் ரூம்' - தனி அறையில் நடப்பது என்ன?

இதன் மூலம், நமது கோபம் கட்டுக்குள் இருக்கும் என்கிறார்கள். மேலும் மன அழுத்தம் இருப்பவர்கள், ரிலாக்ஸ் ஆகிவிடுவார்கள் என்கிறார்கள். இது அமெரிக்காவில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. சீனாவில் கடந்த செப்டம்பர் மாதம் இந்த அறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

சீனாவில் இருக்கும் ஆங்கர் ரூமுக்கு வந்த 16 வயது மாணவி, தனது பள்ளியின் மீது கடும் கோபத்தில் இருந்ததாகவும், அடித்து நொறுக்கியதில் சிதறிய பொருள்களைப் பார்த்த பிறகு ரிலாக்ஸாக உணர்வதாகவும் தெரிவித்தார். 

சீனாவில் பிரபலமடையும் `ஆங்கர் ரூம்' - தனி அறையில் நடப்பது என்ன?

ஆங்கர் ரூம் தொடர்பாக அதன் உரிமையாளர் ஜின் மெங் கூறுகையில், ``இது வன்முறையை வளர்க்கும் திட்டம் கிடையாது. இதன் நோக்கம் வன்முறையைக் குறைப்பதுதான். கடந்த செப்டம்பர் மாதம் இது தொடங்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 15,000 பாட்டில்கள் உடைக்கப்படுகின்றன. இங்கு 20 வயதிலிருந்து 35 வயதுக்குட்பட்டவர்கள்தான் அதிகம் வருகிறார்கள். 

சிலர் தொலைக்காட்சிப் பெட்டிகளை உடைப்பார்கள், சிலர் கணினிகளை உடைப்பார்கள். சிலர் மது பாட்டில்கள், ஃபர்னிச்சர் எனப் பல்வேறு பொருள்களை உடைப்பார்கள். பணம் இருந்தால் இங்கு எதையும் உடைக்கலாம். உயிரினங்களைத் தவிர” என்றார். மேலும், மாதம் சராசரியாக 600 பேர் இங்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

சீனாவில் பிரபலமடையும் `ஆங்கர் ரூம்' - தனி அறையில் நடப்பது என்ன?


 

``ஒரு பெண் தனது திருமண ஆல்பத்தை எடுத்துக்கொண்டு இங்கு வைத்து நொறுக்கினார். மக்கள் தங்கள் வீட்டிலிருந்து பொருள்களை எடுத்து வந்து உடைப்பதையும் நாங்கள் வரவேற்கிறோம். தங்களைச் சுற்றி இருக்கும் நெகட்டிவ் எனர்ஜியை விட்டு விலக இது சிறந்த இடமாக மக்கள் கருதுகிறார்கள்” என்ற ஜின், தனது அடுத்த திட்டமாக விரைவில் மால்களில் இது போன்ற ஆங்கர் ரூம்களைத் திறக்க இருப்பதாகத் தெரிவித்தார். மக்கள் தங்களின் ஷாப்பிங் பணிகளுக்கு நடுவில் தங்களது அழுத்தத்தைக் குறைத்துக்கொள்ளலாம்'' என்கிறார்.