Published:Updated:

100 கஸ்டமரில் ஒருவர் குறை சொன்னார்! - ஒரு டம்ளரில் ஏழு லேயர்கள்; ஆச்சர்யப்படவைக்கும் டீக்கடைக்காரர் மாணிக்கம்

கோவையின் குளு குளு வெதரில் மலைக்குன்றுகளினூடே நீங்கள் பைக்கில்  சென்றிருக்கிறீர்களா... பனிக்காற்று காதுகளில், மூக்கின் உள்ளே ஏறி இறங்க, 'ராசாளி...' பிஜிஎம்-மில் உங்களை கற்பனை செய்துகொள்ளுங்கள். ஒவ்வொருவர் மனதும், எண்ண ஓட்டங்களும் ராசாளிகளாய்ப்  பறந்துகொண்டிருக்கும். ஆங்... இங்க ஒண்ணு மட்டும் மிஸ்ஸிங்.., சூடா ஒரு கப் டீ!

100 கஸ்டமரில் ஒருவர் குறை சொன்னார்! - ஒரு டம்ளரில் ஏழு லேயர்கள்; ஆச்சர்யப்படவைக்கும் டீக்கடைக்காரர் மாணிக்கம்

அப்படி ஒரு ரம்மியமான இடத்தில்தான் அமைந்திருக்கிறது மாணிக்கத்தின் வீடு. கோவை-கேரளா எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் ஆனைகட்டிக்குச் செல்லும் வழியில், கணுவாய் அருகில் ஒரு குன்றுக்கு மேல் அமைந்துள்ளது மாணிக்கத்தின் வீடு. வீட்டின் முன்பகுதியில் சிறிய டீ கடை வைத்து நடத்துவதுடன்,  அருகிலிருக்கும் கம்பெனிகளுக்கு டீ சப்ளை செய்கிறார். இதிலென்ன புதுமை என்கிறீர்களா... காஸ்ட்லியான கடைகளில் கிடைக்கும் கேப்புச்சினோக்களைத் தூக்கி சாப்பிடுகிறது இவரின் லேயர் டீ.

டீ மட்டுமில்லாமல், ஒரு கப்பில் ஏழு லேயர்களில் டீ, காபி, ஹார்லிக்ஸ், பூஸ்ட் என அடுக்கி புதுமை செய்கிறார். அப்படி இவர் லேயர்களை உருவாக்கும்போது, புது யுக்தியைக் கையாள்வது மட்டுமல்லாமல், அடுக்கிவைத்த லேயர்கள் ஒன்றோடு ஒன்று கலந்துவிடுவதில்லை! டீ-க்குப் பிறகு பால், பிறகு காபி, பிறகு பூஸ்ட் என தனித்தனி சுவையைப் பருகமுடிகிறது என்பதுதான் ஹைலைட்!

100 கஸ்டமரில் ஒருவர் குறை சொன்னார்! - ஒரு டம்ளரில் ஏழு லேயர்கள்; ஆச்சர்யப்படவைக்கும் டீக்கடைக்காரர் மாணிக்கம்

'இந்த ஐடியா எப்படி உங்களுக்கு வந்தது' எனக் கேட்டவுடன், ஒரு நினைவு புதைந்து சிரிப்புடன் கூறினார். "20 வருஷத்துக்கு முன்னாடி ஒரு கடையில வேலை செஞ்சுட்டு இருந்தேன். தினமும் நூறுக்கும் மேற்பட்ட கஸ்டமர் வந்து போவாங்க. ஆனா, ஒரே ஒருத்தரை மட்டும் எப்படி டீ போட்டு கொடுத்தாலும் திருப்திபடுத்தவே முடியலை. ஏதோ ஒருகுறை சொல்லிக்கிட்டே இருப்பாரு. ஸ்ட்ராங்கா போட்டா லைட், லைட்டா போட்டா ஸ்ட்ராங். இப்படி ஏதாவது ஒரு கம்ப்ளைன்ட் வந்துட்டே இருக்கும். ஒருநாள் கோவம் வந்து, லைட், ஸ்ட்ராங், பால், கடுங்காப்பின்னு எல்லாத்தையும் லேயரா அடுக்கி லேயர் டீ போட்டுக் கொடுத்தேன். மனுஷன் அப்டியே ஆஃப் ஆகிட்டாரு. அதுக்குப் பிறகு எந்தக் குறையும் சொல்றது இல்லை. அப்படியே நிறைய லேயர் டீ தயார் பண்றதையும் தினமும் பழக்கப்படுத்திக்கிட்டேன். அது, புது டெக்னாலஜி ஆகிருச்சு. அந்த மனுஷன எந்தக் காலத்திலும் மறக்க முடியாது. எங்களுக்காக நாலு லேயர் டீ தயார் செய்துகொண்டே, "நான் டிரே டம்ளர்ல, பால், டிக்காக்ஷன், காப்பி, டீ, பூஸ்ட், ஹார்லிக்ஸ்னு ஏழு அயிட்டத்த வச்சு, செவன் லேயர் டீ போடுவேன்" என்றார் பெருமையாக.

100 கஸ்டமரில் ஒருவர் குறை சொன்னார்! - ஒரு டம்ளரில் ஏழு லேயர்கள்; ஆச்சர்யப்படவைக்கும் டீக்கடைக்காரர் மாணிக்கம்

இப்படி ஒரு சூழ்நிலையிலும் மனைவியின் பேச்சை கேட்பதோடு மட்டுமில்லாமல், "அவ பாவம், என்கூட இப்படியே வாழ்க்கையை ஓட்டிட்டா! இத வேற லெவலுக்கு பெரிசா கொண்டு போகலாமே என்றதும், “ கடை ஆரம்பிக்கிறதுலாம் பெரிய வேல. யாருமா நமக்கு உதவுவா, வயசும் ஆகிடுச்சு. இனி நானும் அவளும் ரிஸ்க் எடுத்து புதுசா கடை திறந்து ஓடியாடி வேலை செய்ய தெம்பு இல்ல. மகனுக்கு இந்த டீ கடை வைப்பதில் விருப்பமும் இல்லை. இப்படியே கம்பனிகளுக்கு சப்ளை செஞ்சுக்கலாம்னு இருக்கோம்" என்றார் வருத்தம் கலந்த தொனியில்.

100 கஸ்டமரில் ஒருவர் குறை சொன்னார்! - ஒரு டம்ளரில் ஏழு லேயர்கள்; ஆச்சர்யப்படவைக்கும் டீக்கடைக்காரர் மாணிக்கம்

ஆர்வமிருந்தும் தொழில் இருந்தும் விரும்பியதைச் செய்ய முடியாமல் வாழ்க்கை ஓட்டத்தின் தேவைகளுக்காக இந்த வயதிலும் பம்பரமாய்ச் சுழன்று, நம்பிக்கை நாயகனாய்த் திகழ்கிறார் மாணிக்கம். 

அடுத்த கட்டுரைக்கு