Published:Updated:

"சாதித்துக் காட்டுவேன்... சம்பாதித்துக் காட்டுவேன்!"

"சாதித்துக் காட்டுவேன்... சம்பாதித்துக் காட்டுவேன்!"

''சாதனை பண்ண உடம்பைவிட உறுதியான மனசுதாங்க தேவை!'' - நூர்தீனின் வார்த் தைகளுக்கு நம்பிக்கைதான் பலம் சேர்க்கிறது. சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த இவர், கடந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசியப் போட்டிகளில் வீல்சேர் வாள் சண்டையில் வெண்கலப் பதக்கம் பெற்றவர். 2012 பாரா ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகிக்கொண்டு இருப்பவரைச் சந்தித்தேன்.

"சாதித்துக் காட்டுவேன்... சம்பாதித்துக் காட்டுவேன்!"
##~##

''போலியோவால் சின்ன வயசுலயே ரெண்டு காலும் ஊனமாயிடுச்சுங்க. இந்த உடம்பை வெச்சுக்கிட்டு, என்ன பண்றதுனு புரியாம அங்கேயும் இங்கேயுமா தவழ்ந்துட்டு இருந்த எனக்கு, நண்பனோட ஜிம்தான் சாதனைக்கான அஸ்திவாரத்தை அமைச்சுத் தந்தது. முதல்முறை அங்கே போயிருந்தப்ப ஒரு பாடி பில்டர், 'தம்பி நீங்க எல்லாம் இந்தப் பக்கம் வரக்கூடாது. எதையாச்சும் எடுத்து மேல போட்டுக்கப்போறீங்க. கிளம்புங்க... கிளம்புங்க’னு கிண்டல் செய்தார். எனக்கு அப்ப வந்த கோபத்துக்கு அளவேஇல்லை. 10 கிலோ வெயிட்டைக் கூட தூக்க முடியாத நான், ஆறு மாசம் ஜிம்மே  கதியாக்கிடந்தேன். இப்ப 100 கிலோவா இருந்தாலும் சர்வசாதாரணமாத் தூக்குறேன். கொஞ்சம் கொஞ்சமாப் பளு தூக்கும் போட்டிகள்ல கலந்துக்க ஆரம்பிச்சு, மாற்றுத்திறனாளிகளுக்கான‌ 'மிஸ்டர் தமிழ்நாடு’ பட்டத்தையும் தட்டினேன். இப்ப பொதுப்பிரிவு ஆட்களோடவும் போட்டி போட்டு பதக்கம் வாங்கிட்டு வர்றேன்.

நண்பர்கள் ஆலோசனைப்படி வாள்சண்டைப் பயிற்சி பண்ண ஆரம்பிச்சேன். ஆசியப்போட்டி வாள் சண்டைப் பிரிவில் பதக்கம் வெல்லவும், வரப்போற பாரா ஒலிம்பிக்கில் கலந்துக்கிறதுக்கும் வெங்கடேஷ்ங்கிற நண்பர்தான் காரணம். இந்தப் போட்டியின்போது பிரத்யேக உடையை அணியணும். அது லட்சத்துக்கும் மேல விலை இருக்கும். சொந்த உடை இருந்தா மட்டுமே இதில் கலந்துக்க முடியுங்கிற நிலையில வெங்க டேஷ்தான் தன் உடைகளைக் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தினார். அவர் நினைச்சுஇருந்தா அந்தப் போட்டியில் அவரே கலந்திருக்க முடியும். ஆனா, எனக்காக விட்டுக் கொடுத்தார்.

"சாதித்துக் காட்டுவேன்... சம்பாதித்துக் காட்டுவேன்!"

ஆசியப் போட்டியில் வெண்கலம் பெற்றதுக்காக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் எனக்கு முறைப்படி தரவேண்டிய 10 லட்ச ரூபாயை ஒரு வருஷமாகி யும் இன்னும் தரலை. நேர்ல போயிருந்தப்ப, 'உன்னை சர்வ தேசப் போட்டியாளர் பட்டி யல்ல சேர்த்தாச்சு. 20 ஆயிரம் தான் தருவோம்’னாங்க. மற்ற பொதுப் போட்டியாளர்கள் எல்லாருக்கும் ஒட்டுமொத்தத் தொகையையும் கொடுத்துட்டு, ஒரு மாற்றுத்திறனாளியோட பணத்தை அபகரிக்க முயற்சி பண்றது எந்த வகையில் நியாயம்ங்க? க‌ன‌டா, இத்தாலி, ஹ‌ங்கேரினு வெளிநாடுகள்ல ந‌ட‌ந்த‌ போட்டிகளுக்குப் போக முடியாமப் போனதுக்கும் இதுதான் காரணம். அரசு தர்ற அந்தப் பணத்தை வெச்சுதான் லண்டன்ல நடக்கப்போற பாரா ஒலிம்பிக்ல கலந்துக்கணும். இப்ப என் வாழ்க்கை அரசாங்கத்தோட கையிலதாங்க இருக்கு!

"சாதித்துக் காட்டுவேன்... சம்பாதித்துக் காட்டுவேன்!"

போலியோனு தெரிஞ்சு உதறித் தள்ளாம அர வணைச்ச என் அம்மாவையும் ஐந்து சகோதரி களையும் காப்பாத்த வேண்டிய நிலையில நான் இருக்கேன். மின்சார வாரியத்தில் வேலைசெஞ்சு  ஓய்வுபெற்ற அப்பாவோட பென்ஷன்லதான் குடும்பம் ஓடுது. என‌க்குத் திரும‌ண‌ம் ஆகி ஒரு குழந்தையும் பிறந்துடுச்சு. இப்ப வ‌ரைக்கும் அப்பாவோட  ச‌ம்பாத்தியத்தில்தான் சாப்பி டுறேன். ஆனா, என் குழ‌ந்தை என் ச‌ம்பாத்தி ய‌த்தில்தான் சார் சாப்பிடணும்!'' - உறுதியாகச் சொல்கிறார் நூர்தீன்.

"சாதித்துக் காட்டுவேன்... சம்பாதித்துக் காட்டுவேன்!"
"சாதித்துக் காட்டுவேன்... சம்பாதித்துக் காட்டுவேன்!"

- பா.பற்குணன்
படங்கள்: ப.சரவணகுமார்

அடுத்த கட்டுரைக்கு