Published:Updated:

பாரிமுனையில் பேனா முனை!

பாரிமுனையில் பேனா முனை!

'நான் சென்னை பாரிமுனையில் உள்ள 80 ஆண்டுகள் பழமையான, ஜெம் அண்ட் கோ பேனா விற்பனையகத்தின் 50 ஆண்டு கால வாடிக்கையாளர். கலைஞர் தொடங்கி இந்தக் கடைக்கு நூற்றுக்கணக்கான வி.ஐ.பி. வாடிக்கையாளர்கள் உள்ளனர்’ - திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வாசகர் கே.பாலசுப்ரமணியன் தந்த தகவலைத் தொடர்ந்து, ஜெம் அண்ட் கோ-வுக்குச் சென்றோம். அதன் உரிமையாளர் பிரதாப்குமார், தங்கள் கடையின் சிறப்பைச் சொல்கிறார்.  

பாரிமுனையில் பேனா முனை!
##~##

''1930-ல் என் தாத்தா எம்.சி.கண்ணனால் தொடங்கப்பட்ட இந்தக் கடையை, என் தந்தைக்குப் பிறகு நான் பராமரிக்கிறேன். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள் என எங்களின் வாடிக்கையாளர் பட்டியல் மிகப் பெரியது. பழைய பேனாக்கள் சேகரிப்பவர்கள், விற்பவர்கள் என, எங்களுடன் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்கள் தொடர்பில் உள்ளனர். அவர்களுக்கு வாங்கித் தருவதோடு மட்டும் அல்லாமல் பழைய பேனாக்களை சர்வீஸ் செய்தும் கொடுக்கிறோம். சமீபத்தில் சென்னை வந்திருந்த அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நிருபமா ராவ், ப்ளாக்பேர்ட் எனும் 60 ஆண்டு பழமையான இங்கிலாந்து தயாரிப்பு பேனா உட்பட 15 ஆயிரம் ரூபாய்க்கு பேனாக்களை வாங்கிச் சென்றார்.  எங்களிடம் முழுவதும் தங்கத்தால் ஆன பேனா, இரண்டு லட்சம் ரூபாய் விலை உள்ள பேனாக்களும் உள்ளன. கலைஞர் உபயோகிக்கும் 'வேலிட்டி’ என்ற பேனாவை முதல்முதலில் சென்னையில் அறிமுகப்படுத்தியது நாங்கள்தான்'' எனும் பிரதாப்குமார், தன் சட்டைப் பையில் பேனாக்களை வைப்பது இல்லையாம். கேட்டால், ''நண்பர்கள் 'நீதான் பேனாக் கடை வெச்சிருக்கியே, உனக்கெதுக்கு பேனா?’னு சொல்லி, பிடுங்கிக்கிறாங்க. அதனால்தான்!'' எனச் சொல்லிச் சிரிக்கிறார்!

பாரிமுனையில் பேனா முனை!

பொ.ச.கீதன்,
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

அடுத்த கட்டுரைக்கு