Published:Updated:

`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி

`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி
`தேங்காய் ஓட்டின் விலை ரூ.3,000; ஆஃபரில் ரூ.1,300’ - அமேசான் இணையதளம் கொடுத்த அதிர்ச்சி

ஆன்லைன் இணையதளத்தில் விற்கப்படும் தேங்காய் ஓட்டின் விலை பிரமிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. `தேங்காய் ஓட்டின் விலையா இது!' என்று வாய்பிளக்க வைக்கிறது.


நீங்கள் பயன்படுத்தி தூக்கி எறியும் தேங்காய் மூடியை ஆன்லைனில் வாங்கும் வாய்ப்பு கிடைத்தால் எப்படியிருக்கும்? அதன் விலை உங்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தலாம். அதில் உங்களுக்கு சலுகைகள்கூட உண்டு. அதான் இ.எம்.ஐ ஆப்ஷன். இப்படியொரு அறிவிப்புதான் அமேசான் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேங்காய் ஓட்டின் விலை 3,000 ரூபாய் மட்டுமேயாம். யாரோ ஒருவர் போட்டோஷாப்பில் செய்த வேலை என்று நினைத்து பலரும் இதைக் கடந்துசெல்கின்றனர். ஆனால், உண்மையில் `natural coconut shell cup' என்று அமேசானில் தேடினால் தேங்காய்க்கு வெளிப்புறமுள்ள அதன் மூடியை, பாதியாக வெட்டி விற்பனைக்கு வைத்துள்ளனர். குறிப்பாக ப்ளீஸ் நோட் என்று கூறி, `குறைந்த பொருள்கள் மட்டுமே உண்டு' எனப் பதிவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், `இது உண்மையான தேங்காய் மூடி. இதில் விரிசல் மற்றும் குறைபாடுகள் இருக்கும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இதற்கு ரேட்டிங் கொடுத்து, ``இயற்கையான தேங்காய் மூடி.. பல்வேறு தேவைகளுக்குப் பயன்படும். 3,000 ரூபாய் இருக்கும் இதை என் நண்பன் ஆஃபரில் 1,300 ரூபாய்க்கு வாங்கியிருக்கிறான். க்ரேட் அமேசான்'' என்று பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த இந்தியர்கள், `இப்படி தெரிந்திருந்தால், தேங்காய் மூடிகளை சேமித்து வைத்து கோடீஸ்வரன் ஆகியிருப்பேன்' என்று கலாய்த்து வருகின்றனர்.