Published:Updated:

கடிதங்கள்: சிரித்து சிரித்து நெஞ்சு வலியே வந்துவிட்டது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கடிதங்கள்: சிரித்து சிரித்து நெஞ்சு வலியே வந்துவிட்டது!
கடிதங்கள்: சிரித்து சிரித்து நெஞ்சு வலியே வந்துவிட்டது!

கடிதங்கள்: சிரித்து சிரித்து நெஞ்சு வலியே வந்துவிட்டது!

பிரீமியம் ஸ்டோரி

`அப்பப்பா... அப்போலோ கணக்கு...’ வாசித்தபிறகு இதுவரை நாம் ‘காந்தி கணக்கு’ என்ற வழக்குச்சொல் ஒன்றுடன் ‘இட்லிக் கணக்கு’ என்ற சொல்லையும் ‘அகராதிகளில்’ சேர்த்துக்கொள்ளவேண்டும் போல...

- கிருஷ்ணமூர்த்தி வெங்கட்ராமன் -  விகடன்.காம்

கடிதங்கள்: சிரித்து சிரித்து நெஞ்சு வலியே வந்துவிட்டது!

டாப்டென்னில் இடம்பிடித்த அனைவருக்கும் வாழ்த்துகள். இப்படிப்பட்டவர்களைத் தேடிக்கண்டுபிடித்து அடையாளப்படுத்துவதில் விகடன் எப்போதுமே தனித்து நிற்கிறது!

- வி.ஸ்டெல்லா, கோவை

மிழகத்தின் டாப்டென் பிரச்னைகளைப் பட்டிய லிட்டிருந்தீர்கள். அதில் சினிமா சங்கங்களின் பிரச்னையைச் சேர்த்திருக்கத் தேவையில்லை. அது அவர்களுடைய தனிப்பட்ட விவகாரம்.

- இரா.பரிதி, குளித்தலை

டா
ப் 25 பரபராவைப் படித்து முடிக்க முடியவில்லை. சிரித்து சிரித்து நெஞ்சு வலியே வந்துவிட்டது. மரணகலாய்... வெச்சு செஞ்சுட்டீங்க!

- எஸ்.அறிவழகன், ஸ்ரீபெரும்புதூர்

கி
ரிக்கெட் ஒரு ஜென்டில்மேன்களின் விளையாட்டு, கோலி விளையாடுவது கிரிக்கெட்டே அல்ல. அவர் தன்னுடைய குணத்தைக் கொஞ்சமாவது மாற்றிக்கொள்ள வேண்டும்.

- அச்சுதன் - விகடன்.காம்

ண்டு இறுதியில் அன்பே தவத்தில் அடிகளார் சொன்ன அறிவுரைகள் அத்தனையும் பொக்கிஷங்கள். அதை அனைவரும் கட்டாயம் பின்பற்றினால் 2019 அருமையாக இருக்கும்.

- பி.கிருஷ்ணகுமார், மேட்டுப்பாளையம்

வி
வியன் ரிச்சர்ட்ஸ் ஒரு லெஜெண்ட். ஆட்டத்தின் போக்கையே மிகச் சுலபமாக மாற்றிவிடுவார். விராட் கோலியைப் பற்றிய விவியன் ரிச்சர்ட்ஸின் கருத்து எல்லா கிரிக்கெட் ரசிகர்களின் கருத்தையும் பிரதிபலிப்பதாகவே இருக்கிறது.

- விஸ்வநாதன் - விகடன்.காம்

ன்பே தவம் அருமை. உலகப் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கை... உலகத்தை, இயற்கையை, மக்களை அழிக்கிறது. அமைதியான வாழ்க்கைச் சூழலைச் சிதைத்து, பணம் சம்பாதிக்க ஓட வைக்கிறது. பணம்தான் வாழ்க்கையா? ஆனால் அதுதான் வாழ்க்கை என்று முட்டாள்தனமான கொள்கையை உருவாக்கியது மாபெரும் தவறு.

- பழனி - விகடன்.காம் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு