பெருந்தமிழர் விருது - இந்திரா பார்த்தசாரதி

55 ஆண்டுகளாகத் தன் படைப்புப் பயணத்தைத் தொய்வின்றித் தொடர்பவர் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி. நாவல், சிறுகதை, நாடகம், கட்டுரை எனப் படைப்பிலக்கியத்தின் எல்லா வெளிகளிலும் இயங்கும் இவர் எழுதிய முதல் சிறுகதையே, ஆனந்த விகடனில் ‘முத்திரைச் சிறுகதை’யாக வெளியானது.

`வெறும் ஏமாற்றமும் விரக்தியும் தோல்வி மனப்பான்மையும் மட்டுமே இலக்கியமாகிவிடக் கூடாது’ என்று தனது எழுத்துக்கான வரையறையை வகுத்துக்கொண்டு இடைவிடாது இயங்குபவர்.
தந்திரபூமி, குருதிப்புனல், சுதந்திரபூமி, வேதபுரத்து வியாபாரிகள், ஆகாசத்தாமரை, மாயமான் வேட்டை, திரைகளுக்கு அப்பால் போன்ற நாவல்களும், மழை, போர்வை போர்த்திய உடல்கள், கால எந்திரம், நந்தன் கதை, ஒளரங்கசீப், ராமானுஜர், கொங்கைத் தீ, பசி போன்ற நாடகங்களும் இந்திரா பார்த்தசாரதி தமிழுக்குக் கொடுத்த கொடைகள். சிறுவயது முதலே தமிழ், ஆங்கில இலக்கியங்களில் ஆழக்கால் பதித்தவர் இந்திரா பார்த்தசாரதி. கூர்மையான அரசியல் பார்வையும், அங்கதமும் கொண்டு உளவியல்பூர்வமாக எழுதக்கூடிய தமிழின் தனித்துவப் படைப்பாளி. டெல்லி பல்கலைக்கழகம், போலந்து நாட்டு வார்ஷா பல்கலைக்கழகங்களில் தமிழ் இலக்கியம், தத்துவம் பண்பாட்டுப் பாடப்பிரிவுகளில் பேராசிரியராகப் பணியாற்றியவர். பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்தின் நிகழ்த்து கலைத்துறைத் தலைவராக இருந்தவர். மத்திய தர வர்க்கத்தின் உள்மன உறுத்தல்களையும் மனக் குழப்பங்களையும் நுணுக்கமான புனைவுகளோடு எழுத்தாக்கும் இந்த மாபெரும் எழுத்துக்கலைஞன் 88 வயதிலும் சிறிதும் சுணக்கமின்றி இயங்கிக் கொண்டிருக்கிறார். `சாகித்ய அகாடமி’, `பாரதிய பாஷா பரிஷத்’, `சரஸ்வதி சம்மான்’ எனச் சிறந்த அங்கீகாரங்களைக் குவித்துள்ள இந்தத் தீவிரப் படைப்பாளிக்கு விகடன் சூட்டும் மகுடம், பெருந்தமிழர் விருது!

சிறந்த நாவல் - வீரயுக நாயகன் வேள்பாரி - சு.வெங்கடேசன்

வெளியீடு : விகடன் பிரசுரம்

மிகச் சொற்பமாகக் கிடைத்த இலக்கிய ஆதாரங்களைக்கொண்டு பாரியை, அவன் ஆண்ட பறம்பு மலையை, அதன் வளத்தை, அதைக் கைப்பற்ற மூவேந்தர்கள் தொடுத்த போரை, காதலிலும் வீரத்திலும் குழைத்தெடுத்த கவிமொழியால் சு.வெங்கடேசன் உயிர்ப்பித்த நாவல். இயற்கை அறிவு, அறவுணர்வு, அழகியல் நாட்டம், வீர சாகசம், பண்பாட்டு விழுமியங்கள் எனத் தமிழரின் வாழ்வியல் எவ்வளவு நாகரிக வளர்ச்சி பெற்றிருந்தது என்பதையும் மொழி, கலை, மெய்யியல், வானியல் எனச் சிந்தனைத் தளத்தில் எவ்வளவு நுட்பமாக விளங்கினார்கள் எனவும் சித்திரிக்கும் மிக முக்கியமான வரலாற்றுப் படைப்பு இது.

சிறந்த சிறுகதைத் தொகுப்பு - மாயக்குதிரை - தமிழ்நதி

வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்

அரசியல் ஆழமிக்க படைப்புகளில் ஒரு துளியும் கலையம்சம் குன்றிவிடாமல் எழுதுவது தமிழ்நதியின் பெரும்பலம். தமிழ்நதியின் வழக்கமான மொழிநடை இத்தொகுப்புக் கதைகளில் இன்னும் செழுமையேறி, கதை பயணிக்கும் தளங்களுக்கே வாசகர்களைக் கைபிடித்து அழைத்துச் செல்கிறது. தவிர்க்க முடியாத சூழலில் வெளிநாடுகளில் அகதியாகத் தஞ்சம் புகுந்தவர்களின் வாழ்நிலையும் அங்கு வாழ நேர்கையில் அறிமுகமாகும் புதிய பழக்கங்களும் எப்படி வாழ்க்கையின் பகுதியாகின்றன, ஈழப்போருக்கு முன் குடியிருந்தவர்களைத் தேடி அலையும் அவலப் பயணம் என்று வெவ்வேறு கருப்பொருள்களைக்கொண்ட கதைகள் இவை. ஈழத்தமிழ் இலக்கியத்தில் போராட்டத்தின் வரலாற்றை, துயரத்தின் வடுக்களை, வாழ்க்கையின் பல்வேறு நிலைகளை வலிமையாய் முன்வைக்கும் மிகமுக்கியமானதொரு சிறுகதைத் தொகுப்பு இது.

சிறந்த கவிதைத் தொகுப்பு

ழ என்ற பாதையில் நடப்பவன் - பெரு.விஷ்ணுகுமார்

வெளியீடு: மணல்வீடு பதிப்பகம்

நவீன வாழ்வின் போலித்தனங்களை, சிடுக்குகளை, நுட்பமான அன்றாடத் தருணங்களை விநோதங்களின் காட்சி மொழியில் கவிதையாக்கியுள்ள ஆழமான தொகுப்பு. மனிதர்களாகிய நம்மோடு இந்த உலகில் வாழ்ந்திருக்கும் அஃறிணைகளின், பொருள்களின் வாழ்வை அதன் உயிர்ப்புள்ள இருப்பை மிகக் கவனமாகப் பதிவுசெய்கிறார் பெரு.விஷ்ணுகுமார். தனது அனுபவம், அறிந்த வாழ்வு மற்றும் நிலப்பரப்பு என்றில்லாமல், உலகளாவிய நடப்புகளின் அவதானிப்போடு அறிவார்த்தமான வகையில் தனது கவிதையின் பேசுவெளியை விரித்துச் செல்வது இக்கவிதைகளின் தனிச்சிறப்பு.

சிறந்த கட்டுரைத் தொகுப்பு - எதிர்ப்பும் வெறுப்பும் - பா.பிரபாகரன்

வெளியீடு: உயிர்மை பதிப்பகம்

உயர்கல்வி கற்கச் செல்லும் தமிழக மாணவர்கள் சந்திக்கும் உளவியல் சிக்கல்கள், பாபர் மசூதி இடிப்பு என்னும் வரலாற்று வன்முறையின் 25வது ஆண்டு, மதம் அறமா உளவியலா என்ற பரிசீலனை, லியனார் ஜெலியட் என்னும் அம்பேத்கரிய ஆய்வாளர் குறித்த ஆச்சர்ய அறிமுகம், சமூக உளவியல் சார்ந்த கட்டுரைகள் என்று வாழ்க்கையின் பல்வேறு பக்கங்களையும் பரிமாணங்களையும் குறித்துத் தீவிர உரையாடலை முன்வைக்கிறது இந்தக் கட்டுரைத் தொகுப்பு. அதிகாரத்தின் பிறப்பும் இருப்பும் சமூகத்தில் என்னமாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதுதான் இந்தக் கட்டுரைகளின் மையச்சரடு. சமூகம் குறித்த ஆழமான பார்வைகளைப் பெறவும் விரிவான சிந்தனைகளுக்கு நகரவும் வாசிக்கவேண்டிய கட்டுரைத் தொகுப்பு.

சிறந்த சிறுவர் இலக்கியம் - மரப்பாச்சி சொன்ன ரகசியம்

யெஸ்.பாலபாரதி

வானம் பதிப்பகம்

‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ சமகாலத்தில் குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால் மிக்க ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுகிறது. பெண்குழந்தைகள்மீது காலந்தோறும் பாலியல் வன்முறை நடத்தப்பட்டே வருகிறது. பல வீடுகளில், நெருங்கிய உறவினர்களாலேயே இந்தக் கொடுமை நிகழ்த்தப்படுவதால், குழந்தைகளை வளர்ப்பது இன்னும் சிக்கலாகிப் போய்விட்டது. இந்தச் சூழலில், குழந்தைகளிடம் பாதுகாப்பான தொடுதல் தொடங்கி பல்வேறு விஷயங்களைப் புரிய வைக்கவேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. அந்தக் கடமையை அழகான ஒரு கதையாகச் சொல்கிறது இச்சிறார் நாவல்.

சிறந்த மொழிபெயர்ப்பு நாவல்

முன்பின் தெரியாத ஒருவனின் வாழ்க்கை - ஆந்திரேயி மக்கீன்

தமிழாக்கம்: எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி

காலச்சுவடு பதிப்பகம்

காதலும் மனித நேயமும் இந்த நாவல் முழுக்க விரவிக்கிடக்கின்றன. நாவலின் மற்றுமொரு கதாபாத்திரமாகவே வருகிறார் ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செக்கோவ். சிறுகதைகளின் ஆதியையும் அந்தத்தையும் வெட்டிவிட்டால், உண்மை புலப்படுமாம். இந்நாவலின் பல இடங்களில் ஆந்திரேயி மக்கீனின் வாழ்க்கை அவ்வாறாகவே நமக்குக் கண்முன் விரிகிறது. பிரெஞ்சு அரசின் `செவாலியே’, `ஒஃபீசியே’ விருதுகளைப் பெற்ற; புதுவைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பிரெஞ்சுத் துறைத் தலைவர் எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி இந்நூலினை நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ஆந்திரேயி மக்கீனின் பிற நாவல்களும் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டும் என ஆர்வத்தைத் தூண்டும் மிக முக்கியமானதொரு மொழிபெயர்ப்பு நாவல்.

சிறந்த மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பு

உன் கழுத்தைச் சுற்றிக் கொண்டு இருப்பது

சிமாமண்டா என்கோஜி அடிச்சீ; தமிழாக்கம்: வடகரை ரவிச்சந்திரன்

பாரதி புத்தகாலயம் பதிப்பகம்

நைஜீரியர்களின் அரசியல் போராட்டம், இளைஞர்களின் வேட்கை, குழுமோதல்கள், உறவுகளை அணுகும் விதம், அரசின் மீதான விமர்சனம், நம்பிக்கைகள், புலம்பெயர்ச் சிக்கல்கள் என நைஜீரிய மக்களின் வாழ்க்கைச் சூழலை அனைத்துப் பரிமாணங்களுடன் இதிலுள்ள ஒவ்வொரு சிறுகதையும் அதற்குரிய சட்டகத்தில் நின்று வெளிப்படுத்துகின்றன. உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட கதைகளோ என்று யோசிக்கும் அளவுக்கு இக்கதைகளிலுள்ள நேரடித்தன்மைகள் நம்மை அலைக்கழிக்கின்றன. இக்கதைகளின் சிறப்பியல்பே இவற்றை எழுதிய சிமாமண்டா என்கோஜி அடிச்சீயின் மொழியிலுள்ள அங்கதம்தான். அதேசமயம் கதைக்களனாக ஆசிரியர் தேர்ந்தெடுக்கும் விஷயங்களும் அது ஏற்படுத்திய தாக்கமும் வாசக மனப்பரப்பில் ஊடாட்டம் செய்யக்கூடியவை. இவ்வளவு செறிவும் நுட்பமும் கொண்ட கதைகளை உள்வாங்கி மொழிமீதான மிகுந்த அக்கறையுடன் மொழிபெயர்த்திருக்கிறார் வடகரை ரவிச்சந்திரன்.

சிறந்த மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்பு - அன்னா ஸ்விர் கவிதைகள்

தமிழில்: சமயவேல் தமிழ்வெளி பதிப்பகம்

போலந்துக் கவிஞர் அன்னா ஸ்விர் பெண்ணியம், போர், உடல், வாதை, காமம், கொண்டாட்டம் என வாழ்வின் அர்த்தத்தையும் அர்த்தமின்மையையும் கவிதைகளாக்குகிறார். தீவிரவாதமும் போர்ச்சூழலும் பெரும் சிக்கலாக உருவாகிக்கொண்டிருக்கும் தற்காலச் சூழலில், போரின் அபத்தங்களையும் கோரங்களையும் அவல நகைச்சுவைச் சித்திரங்களாக முன்வைக்கும் அன்னா ஸ்விரின் கவிதைகள் நமக்கு அவசியமானவை. இரண்டாம் உலகப்போரில் வார்ஸா நகரமும் அதன் ஒரு மில்லியன் மக்களும் மொத்தமாக அழிந்துபோனதன் வலி மிகுந்த நினைவு, அவருடைய கவிதைகள் முழுக்க இழையோடி விம்முகின்றன. தமிழின் மிக முக்கியமான கவிஞரும் மொழிபெயர்ப்பாளரும் விமர்சகருமான சமயவேல் இக்கவிதைத் தொகுப்பினைத் தமிழாக்கம் செய்துள்ளார். அழகியலும் பண்பாடு சார்ந்த நுண்ணுணர்வும் ஆழமான அரசியல் பார்வையும் கொண்ட சமயவேலின் ஆளுமை மொழிபெயர்ப்பில் வெளிப்படுகிறது.

சிறந்த சிற்றிதழ் - இடைவெளி

பொருளாதார பலம் இன்றி, வணிக ரீதியான ஆதரவின்றி, தீவிரமாகத் தொடர்ந்து இயங்கும் சிற்றிதழ் உலகின் புதிய வரவு ‘இடைவெளி.’ மிக விரிவான நேர்காணல்கள், விவாதங்கள், விமர்சனங்கள், படைப்புகள், மொழிபெயர்ப்புகள், இலக்கியம், சினிமா, பண்பாடு, அரசியல், நுண்கலைகள் சார்ந்த கட்டுரைகள் என ஆழமும் நுட்பமும்கொண்ட தன்மையில் வெளியாகிறது இடைவெளி. நேர்த்தியான வடிவமைப்பு, புதியவர்களின் பங்களிப்பு, தொடர்ச்சியான வருகை என நம்பிக்கையூட்டுகிறது. காத்திரமான கட்டுரைகளையும் படைப்புகளையும் தாங்கி வெளிவரும் ‘இடைவெளி’ இதழ், தமிழ் அறிவுச்சூழல் செழுமை பெற உதவும்.

சிறந்த வெளியீடு - பிரமிள் படைப்புகள் - கால சுப்ரமணியம்
பிரமிள் அறக்கட்டளை & லயம்

கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம், ஓவியம், மொழிபெயர்ப்பு என விரிவான தளங்களில் தமிழில் செயல்பட்ட ஒப்புமையற்ற ஆளுமை, பிரமிள். அவர் தனது வாழ்நாளில் எழுதிய மொத்தப் படைப்புகளில் ஒற்றைச் சொல்லும் தவறிடாது, தொகுத்து ஆவணப்படுத்தியிருக்கிறார் அவரின் நண்பரும் ஆய்வாளருமான கால சுப்ரமணியம். ‘யாழ் என்ற கையெழுத்துப் பத்திரிகையில் 1957-ல் எழுதிய கவிதை முதல், தனது மரணத்துக்கு முந்தைய காலம் வரை பிரமிள் எழுதிய எழுத்துகள் கால வரிசைப்படி, வகைமை சார்ந்து பகுக்கப்பட்டுள்ளன. 3,400க்கும் மேலான பக்கங்கள், 6 தொகுப்புகளாகத் தரமாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. நூல்களின் முகப்புகள் பிரமிளின் ஓவியங்களைக்கொண்டே அலங்கரிக்கப்பட்டிருப்பது கூடுதல் நெருக்கத்தைத் தருகிறது. பத்தாண்டுகள் இடைவிடாத முயற்சியால் இதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார் கால சுப்ரமணியம்.