Published:Updated:

ஆனந்த விகடன் ஊடக விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

ஆனந்த விகடன் ஊடக விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை
பிரீமியம் ஸ்டோரி
ஆனந்த விகடன் ஊடக விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

ஆனந்த விகடன் ஊடக விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

ஆனந்த விகடன் ஊடக விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

ஆனந்த விகடன் ஊடக விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

Published:Updated:
ஆனந்த விகடன் ஊடக விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை
பிரீமியம் ஸ்டோரி
ஆனந்த விகடன் ஊடக விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை
ஆனந்த விகடன் ஊடக விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த டிவி சேனல் -  டிஸ்கவரி கிட்ஸ் தமிழ்!

ஆனந்த விகடன் ஊடக விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டிவி தொடங்கி யூட்யூப் வரை குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் குவிந்துகொண்டிருக்கும் நிலையில் குழந்தைகள் என்ன பார்க்கிறார்கள், எதைப் பார்க்கிறார்கள் எனக் கண்காணிப்பது அவசியம். பெற்றோரையே குழந்தைகள் அவமானப்படுத்துவதுபோலக் காட்சிகள் அமைப்பது, கறுப்புநிறக் குழந்தைகளை வில்லனாக்குவது, சென்னை மொழி பேசுபவர்களைத் திருடர்களாக்குவது எனக் குழந்தைகளுக்கான சேனல்களில் புகுத்தப்படும் கருத்தியல் வன்முறைகள் ஏராளம். இதற்கு மாறாக, குழந்தைகளுக்கான நல்ல கதைகளை, எதிர்காலச் சந்ததிக்கு நம்பிக்கை அளிக்கிற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து ஒளிபரப்பிவருகிறது ‘டிஸ்கவரி கிட்ஸ்.’ இந்தச் சேனலில் ஒளிபரப்பாகும் ‘லிட்டில் சிங்கம்’ குழந்தைகளிடையே வைரல் ஹிட். அழகுத்தமிழில் உலகத்தரமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிவரும் டிஸ்கவரி கிட்ஸுக்குக் குழந்தைகள் சார்பில் அன்பின் ஸ்மைலிகள்!  

ஆனந்த விகடன் ஊடக விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த டிவி நிகழ்ச்சி  - சூப்பர் சிங்கர் 6 - விஜய் டிவி

ல இசை ஜாம்பவான்கள் கலந்துகொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்திய, ‘சூப்பர் சிங்கர்-6’வது சீஸனும் திறமையாளர்கள் பலரை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. இசைப் பின்புலமில்லாத, கிராமத்துப் பின்னணியைக் கொண்ட ஜெயந்தி, அவரது பிரியத்துக்குரிய பாடகியான எஸ்.ஜானகியின் பாடல்களைப் பாடியதோடு அவரையே நேரிலும் சந்திக்கவைத்து, நெகிழ்ச்சி நிமிடங்களை ஜெயந்திக்குப் பரிசாக்கியது சூப்பர் சிங்கர். ஆறாவது சீஸனின் இன்னோர் அசத்தலான சாதனை, ‘மக்களிசை’ என்கிற வார்த்தை. இளம் கிராமிய இசைத் தம்பதியான செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி இணையர் ஒவ்வொரு எபிசோடிலும் தெறிக்க விட்டார்கள். செந்தில் கணேஷ் டைட்டில் வென்ற போது, உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள். இன்னொரு வின்னரான ராஜலட்சுமி, தனக்குக் கிடைத்த பரிசுத் தொகையை நெசவாளர் குழந்தைகளின் கல்விச் செலவுக்குப் பயன்படுத்தப்போவதாக அறிவித்து நிகழ்ச்சிக்கு மேலும் அர்த்தம்கூட்டினார்.

ஆனந்த விகடன் ஊடக விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த நெடுந்தொடர் - செம்பருத்தி

ஜீ தமிழ் தொலைக்காட்சி


ங்க மொழியில் ஹிட் அடித்து, தெலுங்குக்குத் தாவிய கதை. அதை ஜீ தமிழ் டிவி, இங்கேயும் இறக்குமதி செய்ய... மக்கள் வரவேற்பில் மெகாஹிட் அடித்தது இந்த `செம்பருத்தி.’  பணக்கார அம்மா, மகன், அந்தக் குடும்பத்துக்குக் காலங்காலமாக உழைத்துக் கொட்டும் ஏழை அப்பா, அவரின் மகள்... இவர்களுக்கு இடையே சுழலும் கதைப்பின்னல், பணக்காரப் பையனுக்கும் ஏழைப் பெண்ணுக்கும் மலரும் காதல், அதனால் உண்டாகும் பிரச்னைகள் என சராசரி கதைக்களத்தையும், பரபரப்புத் திரைக்கதையோடு பக்காவாகத் தந்ததில் வெற்றிபெற்றது இந்தத்தொடர். சினிமாக்களைப்போல தமிழ் நெடுந்தொடர்களும் வெளிப்புறப் படப்பிடிப்புக்கு மாறிவிட்ட நிலையில், பிரமாண்ட `செட்'கள் அமைத்து, அதற்குள்ளேயே சுழலும் சம்பவங்கள் என்று கதையமைத்ததில், `செம்பருத்தி’க்கு கிடைத்தது தொலைக்காட்சி ரசிகர்களின் அமோக வரவேற்பு.

ஆனந்த விகடன் ஊடக விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளர்

மாகாபா ஆனந்த் - விஜய் டிவி


‘சி
னிமா காரம் காபி’ மூலம் விஜய் டிவியின் கதவு இவருக்காகத் திறந்தபிறகு தன் திறமையின் வெவ்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தினார் மாகாபா ஆனந்த். பாடல் சிடி விற்பனை செய்யும் கடையில் வேலை செய்த மாகாபாவுக்கு, அந்தப் பாடகர்களின் ஷோவையே தொகுத்து வழங்கும் வாய்ப்பை அவருடைய உழைப்பும் தன்னம்பிக்கையும் பெற்றுத்தந்தன. சூப்பர் சிங்கருக்குள் இவர் தொகுப்பாளராக வந்தபிறகு பாடல்களுக்காக மட்டுமன்றி இவருடைய பகடிகளுக்காகவும் ஷோ களைகட்டியது. நடுவர்களையும், சக தொகுப்பாளரையும் தன் டைமிங் காமெடிகளால் கவர்ந்தார். எந்த நட்சத்திரம் வந்தாலும் அவர்களோடு உரையாடும்போது நெருக்கத்தோடு மரியாதையும் கலந்து இவர் தொகுத்து அளிக்கும் பாணிக்கு ஆடியன்ஸ் அப்ளாஸ் எப்போதுமே அள்ளும்.

ஆனந்த விகடன் ஊடக விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளினி 

அர்ச்சனா-  ஜீ தமிழ் தொலைக்காட்சி


‘கா
மெடி டைம்’ அர்ச்சனாவாகத் தன் பயணத்தைத் தொடங்கி இன்று ‘சூப்பர் மாம்’ அர்ச்சனாவாக வீடுதோறும் நம்மில் ஒருவராய் மாறிவிட்டவர். பல ஆண்டுகளாக மீடியாத் துறையில் தடம்பதித்து வருபவர். ஒரு சின்ன இடைவெளிக்குப் பின்னர் அட்டகாசமாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘அதிர்ஷ்டலட்சுமி’ நிகழ்ச்சி மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். 120க்கும் மேற்பட்ட எபிசோடுகளை அவருக்கே உரித்தான கலகலப்புடன் வெற்றிகரமாகத் தொகுத்து வழங்கி மறுபடியும் அவருக்கென ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார். இப்போது அவருடைய மகள் ஜாராவுடன் இணைந்து ‘சூப்பர் மாம்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறார். என்ட்ரி கொடுத்தாலே எப்படிப்பட்ட நிகழ்ச்சிகளையும் கலகலப்பாக்கும் அர்ச்சனா, இன்றைய தொலைக்காட்சிப் பார்வையாளர்களின் விருப்பப்பட்டியலில் முதன்மையானவர்.

ஆனந்த விகடன் ஊடக விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த பண்பலை - ரெயின்போ எஃப்எம்

பா
டல்கள் ஒளிபரப்புவதற்கு மட்டுமல்ல பண்பலைகள், பயனுள்ள தகவல்களை பரப்புவத்றகும்தான் என்பதற்கான முன்னுதாரணமாகத் திகழ்கிறது ரெயின்போ எஃப்எம். கடந்த 25 வருடங்களாக அதே நோக்கத்துடன் சென்னை மக்களிடையே ஒலித்துக்கொண்டிருக்கிறது ரெயின்போ. கல்வி, விளையாட்டு, பொது அறிவு, போக்குவரத்து, அறிவியல், அரசியல் என்று பலதுறைகளைப் பற்றிய விழிப்பு உணர்வுடன் இவர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளில் சமூக அக்கறையையும் காற்றினில் கலக்கிறார்கள். ஆபாச வரிகள் கொண்ட பாடல்களை ஒளிபரப்பாமல் இருப்பது, முந்தித் தர வேண்டுமென உறுதியாகாத செய்திகளை அறிவிக்காமல் தவிர்ப்பது என்று இந்தப் பண்பலை பின்பற்றுகிற அறம் வியக்கவைக்கிறது. சினிமாவுக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் ரெயின்போ இந்தியா, வண்ணக் கோலங்கள், தமிழகத்தின் மாஸ்டர் மைண்ட், மரபுக்கு மாறுவோம், மாற்றத்தை நோக்கி எனப் பல்சுவை நிகழ்ச்சிகளில் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பல விஷயங்களையும் அள்ளித்தரும் ரெயின்போ, பண்பலைகளில் ஒரு தனியலை.

ஆனந்த விகடன் ஊடக விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த பண்பலைத் தொகுப்பாளர் - கார்த்திக் பாலா  - ரேடியோ சிட்டி

‘க்
ரைம் டைரி வித் கார்த்திக்’ - சென்னை, கோவை, மதுரை வட்டார மக்கள் சண்டே மதியம் வெறித்தனமாக வெயிட் செய்வது இவரின் இந்த ஷோவைக் கேட்கத்தான். டைட்டிலுக்கேற்ப, வாரம் ஒரு க்ரைம் கதை. கொலை, திருட்டு எனப் பல தளங்களில் பயணிக்கும் அந்தக் கதைகள் எல்லாமே கார்த்திக் பாலாவின் சிந்தனையில் உதிப்பவை. அதை எக்கச்சக்க த்ரில் சேர்த்து வழங்குகிறது அவரின் குரல். இதற்குக் கைகொடுக்கிறது அவரின் 12 ஆண்டுக்கால ஆர்.ஜே அனுபவம். ஆர்.ஜேக்கள் படபடவெனப் பேசவேண்டும், ஆனால், குறைவாகத்தான் பேசவேண்டும் என்ற விதிகளை உடைத்துத் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கியிருக்கிறார் கார்த்திக்.  சண்டே மேட்னி நேரத்தில் டிவி பக்கம் ஒதுங்கவே சோம்பல் முறிக்கும் மக்களை ரேடியோ பக்கம் கும்பல் கும்பலாக இழுத்து வந்து, அவர்களுக்கு ‘ரேடியோ டிராமா’ வழியே கதை சொல்லும் உத்தியில் அனைவரையும் கவர்கிறார் இந்த ஆர்.ஜே கதைசொல்லி!

ஆனந்த விகடன் ஊடக விருதுகள் 2018 - திறமைக்கு மரியாதை

சிறந்த பண்பலைத் தொகுப்பாளினி - சாரு - ரேடியோ மிர்ச்சி

கொ
ங்கு மண்டலத்தைத் தன் மாயக்குரலால் கட்டிப்போட்டிருக்கும் வித்தைக்காரர். கன்வென்ஷனல் கட்டங்களுக்குள் அடங்காத கலாட்டா குரலி. இவரின் `மோர் மொளகா' முன் மதிய நேரத்தில் வீட்டில் இருப்பவர்களுக்குப் பக்காவான பேச்சுத்துணை, வேலை பார்ப்பவர்களுக்கு பிரேக்கில் சந்திக்கும் `டீ'மேட்! சாருவின் ஷோவில் எதுவும் பேசலாம், எல்லாமே பேசலாம்! முதல்நாள் காதலைக் கொண்டாடும் ஜாலி கேடியாய் ஒலிக்கிறார்; அடுத்தநாளே பாலியல் சீண்டல்களை சமாளிப்பது பற்றிப் பாடமெடுக்கிறார். `ஓ இது லேடீஸ் ஒன்லி ஷோ போல’ என யோசிக்கும் ஆண்களிடம் `வாட்ஸப் டூட்.. காலா FDFS அனுபவம் எப்படி?’ எனக் கைகுலுக்குகிறார். இந்த வெரைட்டி விருந்தும் ப்ரெண்ட்லி குரலும்தான் சாரு ஸ்பெஷல். இதனாலேயே காலேஜ் போகும் டீனேஜ் குரூப் தொடங்கி வேலைக்குப்போகும் அங்கிள் ஆன்டிகள் வரை எல்லாரும் இவர் ரசிகர்கள். `ஏன்னு கேக்குற கேள்வியும் அதுக்கு பதில் தேடுற விவாதமும்தான் இப்போ அவசியத் தேவை. வாங்க பேசுவோம்!’ எனக் குரலில் நம்பிக்கை பொதிந்து புன்னகைக்கிறார் சாரு.