Published:Updated:

URI படத்தை டவுண்லோடு செய்தவர்களுக்குக் காத்திருந்த ஷாக்!

URI படத்தை டவுண்லோடு செய்தவர்களுக்குக் காத்திருந்த ஷாக்!
URI படத்தை டவுண்லோடு செய்தவர்களுக்குக் காத்திருந்த ஷாக்!

 விக்கி கௌசல் மற்றும் யாமி கெளதம் நடிப்பில் வெளியான ஹிந்தி திரைப்படம், 'URI: The Surgical Strike'. 2016ல் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் நடத்திய Surgical Strike-ஐ மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் திருட்டு பிரின்ட்டை இணையத்திலிருந்து  டோரன்ட் பதிவிறக்கியவர்களுக்கு ஒரு ஷாக் காத்திருந்தது.

அது என்ன என்பதை இப்படிப் பதிவிறக்கிய ஒருவர் பதிவிட்டிருந்தார். 3.8 GB-க்கு படத்தைத் திருட்டுத்தனமாக பதிவிறக்கிய அவருக்கு படம் தொடங்குவதுபோல தொடங்கி, படத்தின் நட்சத்திரங்கள்  விக்கி கௌசல் மற்றும் யாமி கெளதம் இப்படி திருட்டுத்தனமாக பதிவிறக்கியவரை கலாய்த்துள்ளனர். இப்படி இவர்கள் செய்த prank 2 நிமிடம் ஓட, மீதி 2 மணிநேரத்திற்கு மேல் இப்படத்தின் டிரெய்லர்தான் மீண்டும் மீண்டும் ஓடியுள்ளது.

URI படக் குழுவினர்களின் இந்த prank முயற்சி பலரையும் கவர்ந்துள்ளது. இதற்காக, உண்மையில் திருட்டு பிரின்ட்டுகள் எந்த தரத்தில் இருக்குமோ, அதே தரத்தில் இந்த ப்ராங் (prank) வீடியோவையும் எடுத்துள்ளனர். என்னதான் இதனால் இதைப்போன்ற திருட்டு பிரின்ட்டுகள் வருவதைத் தடுக்க முடியாது என்றாலும், இதன்மூலம் எப்படி இந்தத் தளங்கள் உழைப்பைத் திருடுகின்றன என்ற விழிப்பு உணர்வு ஏற்படுத்த முயற்சிசெய்துள்ளனர். ஏற்கெனவே, ஹிந்தி மட்டுமல்லாமல் மொத்த திரையுலகமே இந்தத் தளங்களால் பாதிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.