Published:Updated:

மதுரையில் சங்கமம்... தமிழால் இணைந்த தொழில் அதிபர்கள்!

மதுரையில் சங்கமம்... தமிழால் இணைந்த தொழில் அதிபர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
மதுரையில் சங்கமம்... தமிழால் இணைந்த தொழில் அதிபர்கள்!

மதுரையில் சங்கமம்... தமிழால் இணைந்த தொழில் அதிபர்கள்!

மதுரையில் சங்கமம்... தமிழால் இணைந்த தொழில் அதிபர்கள்!

மதுரையில் சங்கமம்... தமிழால் இணைந்த தொழில் அதிபர்கள்!

Published:Updated:
மதுரையில் சங்கமம்... தமிழால் இணைந்த தொழில் அதிபர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
மதுரையில் சங்கமம்... தமிழால் இணைந்த தொழில் அதிபர்கள்!

மிழகத்தைச் சேர்ந்த பல ஜாம்பவான்கள், வெளிநாடுகளில் பெரும்பதவிகளை வகித்தும், வெற்றிகரமாகத் தொழில் செய்தும் வருகிறார்கள். தாய்நாட்டுக்குத் தங்கள் நன்றிக்கடனை எப்படிச் செலுத்தப் போகிறோம் என்கிற சிந்தனை இவர்களுக்கு அடிக்கடி வந்துசெல்வதுண்டு. இந்த எண்ணத்தைப் பூர்த்திசெய்யும்விதமாக, மதுரையில் அனைத்துலகத் தமிழ்த் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு கடந்த டிசம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் நடந்தது. ‘எழுமின்’ (The Rise) என்கிற பெயரில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டுக்கு நானூறுக்கும் அதிகமானவர்கள் வந்திருந்தனர்.

தொழில் துறையில் இருப்பவர்கள் தங்களின் தொழிலை வலுப்படுத்தவும், புதிய உத்திகளைக் கற்றுக்கொள்ளவும், வெற்றியின் ரகசியங்களைக் கற்றுக்கொள்ளவும் இந்த மாநாடு மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியது. வெளிநாடுகளில் உள்ள சிறந்த தொழில்களைத்  தமிழகத்துக்குக் கொண்டுவரவும், தமிழகத்தில் சிறந்துவிளங்கும்  தொழிலை வெளிநாடுகளுக்குக் கொண்டுசெல்வது குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

இந்த மாநாட்டுக் குழுவின் தலைவரும் ஹரியானா மாநில தலைமைச் செயலாளருமான தேவசகாயம் ஐ.ஏ.எஸ் இந்த மாநாடு குறித்துப் பேசுகையில், ``உலகப் பொருளாதாரச் சூழல் வேகமாக மாறி வருகிறது. படித்த இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அவர்களுக்கு  நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்க வேண்டுமெனில், தொழில்முனைதலைத் தமிழரிடையே ஊக்கப்படுத்தி விரைவாக வளர்க்க வேண்டும்’’ என்றார்.

மதுரையில் சங்கமம்... தமிழால் இணைந்த தொழில் அதிபர்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாநாட்டுக் குழுவின் இணை தலைவரும், முதன்மை வழிகாட்டியுமான மேற்குவங்க மாநிலக் கூடுதல் தலைமைச் செயலாளர் பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ், ``வேலை தேடும் வேலையை விட்டுவிட்டு, பலருக்கும் வேலை தரும் தொழில்முனைதலை உருவாக்குவதே இந்த மாநாட்டின் அடிப்படை நோக்கம். பல்வேறு  நாடுகளிலிருந்து வந்திருக்கும் வெற்றித் தமிழர் களையும், தொழில் தொடங்கும் ஆர்வமும், ஆனால், முதலீட்டு வசதி இல்லாத லட்சியத் தமிழர்களையும் இந்த மாநாடு இணைக்கும். பல தொழில், வணிக ஒப்பந்தங்கள் மாநாட்டின்போதே நடந்தேற அதிக வாய்ப்புகள் உள்ளன’’ என்றார்.

இந்த மாநாட்டின் இரண்டாம் நாள் காலை முக்கியமான அமர்வு நடந்தது. இந்த அமர்வினை அமர்க்களமாக நடத்தித் தந்தார் ‘எழுமின்’ மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினரான லதா பாண்டியராஜன். இந்த அமர்வில் பேசிய ஐக்கிய அரபு நாடுகளில் டெக்டான் குரூப் நிறுவனத்தை நடத்திவரும் தொழிலதிபர்            எஸ்.லட்சுமணனின் பேச்சு பங்கேற்பாளர்கள் பலரது பாராட்டையும் பெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியில் பிறந்த லட்சுமணன், புளியங்குடியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, மதுரை தியாகராஜர் கல்லூரியில் இன்ஜினீயரிங் படித்தார். முதலில் லிபியாவுக்கு வேலைக்குப் போனவர், பிற்பாடு ஐக்கிய அரசு நாடுகளில் தனது டெக்டான் நிறுவனத்தைத் தொடங்கினார். கடல் நீரைக் குடிநீராக்கும் தொழிலில் இவரது நிறுவனம் உலக அளவில் முதல் பத்து இடங்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது நிறுவனத்தில்  சுமார் 30,000 பேர் வேலை பார்க்கின்றனர். இதில் 27,000 பேர் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தைச் சேர்ந்த 9,000 பேர் இவரது நிறுவனத்தில் வேலை பார்க்கின்றனர்.

``என்னை வளர்த்த தமிழகத்துக்கு என்னால் முடிந்த தொழில் உதவிகளை செய்யத் தயாராக இருக்கிறேன். தண்ணீர் தொடர்பான தொழில் பற்றி நல்ல தொழில் ஐடியாவை வைத்திருப்பவர் களுக்கு நான் வழிகாட்டத் தயாராக இருக்கிறேன்’’ என்றவர், தான் வெற்றி பெற்ற கதையை  அருமையாக எடுத்துச் சொன்னார்.

‘‘எந்த நிறுவனத்தில் வேலை பார்த்தாலும், அந்த வேலையை எப்போதும் பொறுப்புடன் கையாளவேண்டும். நிறுவனத்தின் பணியாளராக இருந்தாலும் அதைத் தங்களுடைய சொந்த வேலை போல செய்ய வேண்டும். கர்வம் என்ற ஒன்று நமக்கு எப்போதும் வரக்கூடாது. அப்போதுதான் தொடர்ந்து வெற்றி காண முடியும்’’ என்று அவர் தந்த டிப்ஸ்களை  நம்முடைய இளைஞர்கள் அவசியம் பின்பற்ற வேண்டும்.

இந்த மாநாட்டில் பேசியவர்களின் குறிப்பிடத் தக்க இன்னொருவர் ஜப்பானில் ஐ.டி தொழில் நிறுவனத்தை நடத்திவரும் எஸ்.நடராஜன். லால்குடியைச் சேர்ந்த இவர் 1993-ம் ஆண்டிலேயே ஜப்பானில்  இன்ஃபோவியூ என்னும் தனது ஐ.டி நிறுவனத்தைத் தொடங்கினார். இன்றைக்கு அந்த நிறுவனம் ஆண்டுக்கு 450 மில்லியன் டாலர் டேர்ன்ஓவரைக் கொண்டு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

மதுரையில் சங்கமம்... தமிழால் இணைந்த தொழில் அதிபர்கள்!

‘‘ஐப்பானில் இருக்கும் பல்வேறு தொழில் வாய்ப்புகள் நம்முடைய இளைஞர்களுக்கு இன்னும் தெரியவில்லை. இந்திய இளைஞர்கள் புத்திசாலிகள், கஷ்டப்பட்டு உழைப்பதில் மிகச் சிறந்தவர்கள் என்று ஜப்பானியர்கள் நினைக்கிறார்கள். ஆனால், ஜப்பானுக்குச் சென்று வேலை பார்க்க வேண்டும் என்றாலோ அல்லது பிசினஸ் செய்ய வேண்டும் என்றாலோ, ஐப்பானிய மொழியை அவசியம் படிக்க வேண்டும். சில மாதங்களிலேயே ஜப்பான் மொழியைப் படிக்கக் கற்றுக்கொண்டுவிடலாம்.

விவசாயத் துறைக்கு ஐப்பானிய அரசாங்கம் மிகவும் முக்கியத்துவம் தருகிறது. தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் ஜப்பானுக்குச் சென்று நவீன விவசாய உத்திகளைப் படித்துத் தெரிந்துகொண்டு, இங்கு விவசாயப் பண்ணைகளைத் தொடங்கினால், நல்ல லாபம் பார்க்கலாம்’’ என்றார் அவர். 

ஆச்சி மசாலா குரூப்பின் சேர்மன் பத்மசிங் ஐசக் இந்த அமர்வில் சிறப்புரை ஆற்றினார். ``வாழ்க்கையில் தேடல் என்பது அவசியம். அதுதான் வெற்றியை நமக்குத் தரும். அதுதான் தற்போது என்னை இந்தியாவில் `நம்பர் ஒன்’ கம்பெனியாக நிறுத்தி யுள்ளது. உலக நாடுகள் வரிசை யில் நம்பர் ஒன்-ஆக வர வேண்டும் என்பதே எனது லட்சியம். வாழ்க்கையில் எளிய பாதையைத் தேர்வு செய்வதை விடக் கடினமான பாதையைத் தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான் நம்மை நாம் வளர்த்துக்கொள்ள முடியும்’’ என்றார்.

முடிவாகப் பேசினார் தமிழகத்  தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.

``தமிழகத்தில் ஐ போன், ஆப்பிள் கம்ப்யூட்டர் உள்ளிட்ட 16 நிறுவனங்கள் தொழில் தொடங்க முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளார். வரும் ஜனவரி மாதம் தொடங்க உள்ள உலக முதலீட்டாளர்கள் கருத்தரங்கில், சென்ற ஆண்டைவிட அதிகமான முதலீட்டாளர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.  அதிகப்படி யான வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் தொடங்க இது போன்ற மாநாடு உரிய வழிகளைக் காட்டும். சீனாவைப்போல, வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் மீண்டும் தாயகம் வந்து தொழில் தொடங்கவேண்டும். இதன்மூலம் மிகப்பெரிய தொழில் புரட்சி தமிழகத்தில் மலரும் என்ற நம்பிக்கை உள்ளது.

வெளிநாட்டில் உள்ள தமிழ் தொழிலதிபர்கள், தமிழகத்தில் தொழில் தொடங்க அறிவுறுத்தப் பட்டுள்ளனர். இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் உள்ள மாநிலம் தமிழகம்தான். புதிய தொழில்முனைவர்கள் தொழில் தொடங்குவதற்கு உதவி செய்யும் நீட்ஸ் (NEEDS) திட்டம் குறித்து பல இளைஞர்களுக்குத் தெரியவில்லை. தமிழகம் முழுக்க 600 இளைஞர் களே இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்’’ என்றார்.

இந்த மாநாட்டில், தமிழ்நாடு வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், கெர்ரி இன்டெவ் லாஜிஸ்ட்டிக்ஸ் நெட்வொர்க் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் விமலா பிரிட்டோ,  முகம்மது ஈகியா, ஏ.என்.சொக்கலிங்கம், கிரகரி,  மலேசியத் தொழிலதிபர் டத்தோ ஏ.பி.சிவம், கத்தார் நாட்டுத் தொழிலதிபர் ஆல்ஃபிரட் பெர்க்மன்ஸ், ஓமான் நாட்டுத் தொழிலதிபர் ஜோஸ் மைக்கில் ராபின், தென் ஆப்பிரிக்கத் தொழிலதிபர் பிரகி பிள்ளை, ஆப்பிரிக்கக் கண்டத்தின் கானா நாட்டுத் தொழிலதிபர் எழிலரசன், முருகேசன் உள்ளிட்ட பலரும் இந்த மாநாட்டில் பேசினார்கள்.

மதுரையில் சங்கமம்... தமிழால் இணைந்த தொழில் அதிபர்கள்!

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மிகப்பெரிய தொழிலதிபர்கள்  40 பேரும், குறுந்தொழில்புரிவோர் சுமார் 200 பேரும், பெரியதாக வளர வாய்ப்புள்ள தொடக்கநிலைத் தொழில்முனைவர் சுமார் 170 பேர் என, 410 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் ஐ.டி மற்றும் மீடியா, ஏற்றுமதி உள்ளிட்ட எட்டு தலைப்பின்கீழ் எட்டு அரங்கு களில் தனித்தனி கருத்தரங்குகளும் நடந்தன. பெண்களுக்கான தொழில்முனையும் வாய்ப்புகள் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. பெண் தொழில்முனைவருக்கும், இளம் தொடக்கநிலைத் தொழில்முனைவருக்கும் சிறப்பு அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்த மாநாட்டுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு இருந்தது என ‘எழுமின்’ இணை நிர்வாக இயக்குநரும், கிஸ்ஃப்ளோ நிறுவனத்தின் சி.இ.ஓ-வுமான சுரேஷ் சம்பந்தத்திடம் கேட்டோம். ‘‘நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. 400-க்கும் மேற்பட்டவர்கள் 10,000 ரூபாய் பணம் கட்டி, இதில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. பொதுவாக, முன்பின் பழகாத ஒருவருடன் பிசினஸ் செய்ய வேண்டும் எனில் அவரைப் பற்றி பல சந்தேகங்கள் வருவது இயற்கை. ஆனால், இந்த மாநாட்டுக்கு வந்திருந்தவர்கள் தமிழால் இணைந்ததால், இதுமாதிரியான சந்தேகத்துக்கு இடமில்லாமல் போனது. இதன்மூலம் பல புதிய தொழில் முயற்சிகள் தமிழகத்துக்கு வரப்போகிறது. இங்கிருப்பவர்கள் தங்கள் தொழிலை வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லவும் வாய்ப்புக் கிடைத்துள்ளது’’ என்றார்.

சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு இன்னும் சில நாள்களில் நடக்கவுள்ள நிலையில், இந்த மாநாடு அதற்குக் கட்டியம் கூறும்விதமாக அமைந்திருந்தது!

அருண் சின்னதுரை, படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்