Published:Updated:

பண இழப்பை ஈடுகட்டும் திருமணக் காப்பீடு!

பண இழப்பை ஈடுகட்டும் திருமணக் காப்பீடு!
பிரீமியம் ஸ்டோரி
பண இழப்பை ஈடுகட்டும் திருமணக் காப்பீடு!

பண இழப்பை ஈடுகட்டும் திருமணக் காப்பீடு!

பண இழப்பை ஈடுகட்டும் திருமணக் காப்பீடு!

பண இழப்பை ஈடுகட்டும் திருமணக் காப்பீடு!

Published:Updated:
பண இழப்பை ஈடுகட்டும் திருமணக் காப்பீடு!
பிரீமியம் ஸ்டோரி
பண இழப்பை ஈடுகட்டும் திருமணக் காப்பீடு!

வீட்டைக் கட்டிப் பார், கல்யாணத்தை முடித்துப் பார் என்ற பழமொழியை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. இதற்குக் காரணம், வீடு கட்டுவது, திருமணம் செய்வது ஆகிய இரண்டுமே ஒருவரின் வாழ்வில் மிக முக்கியமான விஷயங்கள்.

பண இழப்பை ஈடுகட்டும் திருமணக் காப்பீடு!

   அதிகரிக்கும் திருமணச் செலவுகள்

முன்பு மிகச் சிக்கனமாக நெருங்கிய உறவினர் களை மட்டும் அழைத்து வீட்டில் வைத்து திருமணத்தை முடித்துவிடுவார்கள். கல்வி, இளவயதிலேயே அதிக சம்பளத்தில் கார்ப்பரேட் கம்பெனியில் வேலை, குடும்ப அந்தஸ்த்தை வெளிக்காட்டும் பாங்கு, புதிய கலாசார வருகை போன்ற காரணங்களால் தற்போது திருமணங்கள் விமர்சையாக நடக்கின்றன.

உதாரணமாக, சமீபத்தில் சினிமா நட்சத்திரங் கள் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம் இத்தாலியில் அதிக நண்பர்கள் முன்னிலையில் ஆடம்பரமாக நடந்தது. மேலும், அதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி – ஆனந்த் பிரமல் திருமணம் ஒட்டுமொத்த இந்தியாவே வியக்கும் அளவுக்கு ஆடம்பரமாக நடந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பண இழப்பை ஈடுகட்டும் திருமணக் காப்பீடு!

சினிமா நட்சத்திரங்கள், பெரிய தொழில் அதிபர்கள் மட்டுமல்ல, சராசரி சம்பளம் வாங்கும் நிலையில் உள்ளவர்கள்கூட லட்சக் கணக்கில் செலவு செய்து திருமணத்தை நடத்துகிறார்கள்.

மேட்ரிமோனி டாட்காம் நடத்திய ஆய்வு, 20 சதவிகிதத்துக்கு அதிகமான பெண்கள் தங்கள் திருமணத்திற்கு ரூ.10 லட்சம் - ரூ.20 லட்சம் வரை செலவு செய்யத் தயாராக இருப்பதாகவும், 6% பெண்கள் ரூ.20 லட்சம் - ரூ.40 லட்சம் வரை செலவு செய்ய விரும்புவதாகவும் சொல்கிறது.

சிலர் தங்கள் சக்திக்கு அப்பாற்பட்டுக் கடனை வாங்கி, சொத்தினை விற்று திருமணத்தை சிறப்பாக நடத்த முயற்சி செய்கிறார்கள். ஹப்போஸ்ட்(HuffPost) ஆய்வறிக்கையின்படி, இந்திய குடும்பங்கள், சராசரியாக தங்களது ஆண்டு வருமானத்தைவிட அதிகமான பணத்தைத் திருமண நிகழ்விற்காகச் செலவு செய்கின்றன. ஒருவரின் வாழ்வில் திருமணம் புதிய அத்தியாயத்தின் ஆரம்பமாக அமைகிறது என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த திருமண நிகழ்வில் எதிர்பாராத அசம்பாவிதம் ஏதும் நடந்து, திருமணம் தள்ளிப்போகவோ அல்லது  தடைபடவோ வாய்ப்பிருக்கிறது. அப்படி நடந்தால், இது மிகப்பெரிய வருத்தத்தைத் தருவதுடன், பொருளாதார ரீதியான இழப்பையும் தரும். எதிர்பாராத இந்த நிகழ்வை யாராலும் தடுக்க முடியாது. ஆனால், அந்த நிகழ்வின் விளைவாக உருவெடுக்கும் பொருளாதார இழப்பை வெட்டிங் இன்ஷூரன்ஸ் திட்டம் (wedding Insurance) மூலம் ஈடுகட்டலாம்.

   காப்பீட்டுத் தொகை மற்றும் பிரீமியம்

வெட்டிங் இன்ஷூரன்ஸ் திட்டம் இந்தியாவின் குறிப்பிட்ட சில ஜெனரல் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளில் மட்டும் கிடைக்கிறது. திருமணத்திற்கு ஆகும் செலவைப் பொறுத்து, திருமணம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் உள்ளடக்கி, ரூ.25 லட்சத்திலிருந்து ரூ.1 கோடி வரை காப்பீடு செய்யப்படுகிறது.

கல்யாண மண்டபம் இருக்கிற ஊர், காப்பீட்டுத் தொகை, காப்பீட்டுக் காலம், கல்யாணச் செலவு போன்றவைகளைப் பொறுத்து பிரீமியம் செலுத்த வேண்டி யிருக்கும். தோராயமாகக் கணக்கிடும்போது, காப்பீட்டுத் தொகையில் 0.75% - 1.5% வரை  பிரீமியம் இருக்கும். இது ஒவ்வொரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கும் வித்தியாசப் படுகிறது.

   எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்கும்? 

பூகம்பம், தீ விபத்து, சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவினால் கல்யாண மண்டபம் பாதிப்பு அடைந்து திருமணம் தள்ளிப் போனாலோ, நின்றுபோனாலோ இதில் க்ளெய்ம் செய்ய முடியும். திருமணம் நடைபெறுவதற்கு மிகவும் தேவையான பொருள்களைக் கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்களில் பாலிசிதாரர் பறிகொடுத்து திருமணம் தள்ளிப்போனலோ, நின்றுபோனாலோ க்ளெய்ம் கிடைக்கும்.

பாலிசிக் காலத்திற்குள் மணமகன், மணமகள்  பெற்றோர்கள் எதிர்பாராத விபத்தை எதிர்கொண்டு இறக்க நேரிட்டு, அதனால் திருமணம் தடைபட்டாலும் க்ளெய்ம் கிடைக்கும். அவர்களுக்கு  விபத்தின் காரணமாக முழு நிரந்தர ஊனம், பகுதி நிரந்தர ஊனம் ஏற்பட்டால் க்ளெய்ம் கிடைக்கும்.

கல்யாண நிகழ்விற்கு வருகை புரிந்த எவரேனும் ஒருவருக்கு மண்டபத்தில் இருக்கும்போது விபத்தினால் காயம், உயிரிழப்பு ஏற்பட்டால், அதற்கும் க்ளெய்ம் கிடைக்கும்.

மேலும், திருமணத்தை நிறுத்தும், தள்ளி வைக்கும் சந்தர்ப்பம் உருவாகும்போது, அதற்கு முன்பே முன்தொகையாக (Advance Amount) கல்யாண மண்டப வாடகை, புரோகிதர்களுக்கு ஆகும் செலவு, போட்டோ, வீடியோ செலவு, இசைக் கச்சேரி, சமையல்காரர், அழகுக்கலை நிபுணர், மலர்மாலை செலவு, மணமகன், மணமகள் மற்றும் விருந்தினர்களுக்குப் பயண கட்டணம் மற்றும் தங்குவதற்கு அறை வாடகை போன்றவைகளைச் செலுத்தியிருந்தால், அவற்றுக்கு க்ளெய்ம் கிடைக்கும்.

பண இழப்பை ஈடுகட்டும் திருமணக் காப்பீடு!

   எப்போது க்ளெய்ம் கிடைக்காது?

திருமணத்தை உறுதிசெய்து பாலிசி வாங்கியபிறகு, கருத்து வேறுபாடு ஏற்பட்டு மணமகனோ, மணமகளோ திருமணத்தை நிறுத்தினால், க்ளெய்ம் கிடையாது.  இன்ஷூரன்ஸ் பாலிசி கவரேஜ் இருக்கிற நபர்கள் கடத்தப்பட்டு திருமணம் தடைப் பட்டால் க்ளெய்ம் கிடையாது. மணமகன் அல்லது மணமகள் வேண்டும் என்றே தற்கொலை செய்யும்போது, க்ளெய்ம் கிடையாது. போர், கலவரங்கள் போன்ற சம்பவங் களால், திருமணம் நிறுத்தப்படும் போது க்ளெய்ம் கிடைக்க வாய்ப்பில்லை.

   மனமாற்றம் தேவை

மாறிவரும் வாழ்க்கைச் சூழல், கலாசாரம் அதிகரித்துவரும் வருமானம், அதிக செலவு செய்யத் தயங்காத மனோபாவம் போன்றவைகள் அதிகச் செலவு செய்து திருமணத்தை முடிக்க தூண்டுகின்றன. திருமணம் உறுதியாகிவிட்டால், அது நடந்தே தீரும் என்ற நம்பிக்கையில் இந்தியர்கள் உறுதியாக இருக்கின்றனர். அதனால் சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த வெட்டிங் இன்ஷூரன்ஸ் பாலிசி அதிகம் எடுக்கப்படவில்லை. முன்பு நிறைய பேருக்கு இந்தத் திட்டம் குறித்த தெளிவு இல்லை. ஆனால், தற்போது சமுக வலைதளம், இணையதளம் போன்றவைகளால் வெட்டிங் இன்ஷூரன்ஸ் குறித்த விழிப்பு உணர்வு ஏற்பட்டு வருகிறது.

- முனைவர் க.பாலசந்தர்