அ.தி.மு.க - அ.ம.மு.க இணைப்பு வேலைகள் வேகமெடுத்துள்ளன. இந்த விவகாரத்தில் தினகரன் ஒத்துழைக்கவில்லையென்றால், அவரைத் தவிர்க்கவும் சசிகலா தரப்பு முடிவுசெய்துள்ளதாகத் தகவல்கள் கசியத் தொடங்கியிருக்கின்றன. இதுதொடர்பாக 06.01.2019 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழின் மிஸ்டர் கழுகு பகுதியில், ‘அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க இணைப்பில் பி.ஜே.பி-யை விரும்பாத ஒரே நபர் தினகரன் மட்டுமே. தினகரன் தரப்பை சசிகலா தரப்பு எந்நேரமும் கழற்றிவிடலாம் என்று அரசியல் ஆருடம் சொல்கிறார்கள்’ என்று குறிப்பிட்டிருந்தோம். இந்த நிலையில், இதுகுறித்து விரிவாகப் பேசினார்கள் திவாகரன் ஆதரவாளர்கள்.

“புத்தாண்டுக்கு முந்தைய தினமே பி.ஜே.பி தரப்புடன் இணைப்பு விஷயங்கள் குறித்துப் பேசுவதற்காக திவாகரன் டெல்லிக்குச் சென்றுவிட்டார். திவாகரனுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தொடர்பில் இருந்துவருகின்றனர்.

பி.ஜே.பி தரப்பும் திவாகரனுடன் தொடர்ந்து பேசிவருகிறது. ஜனவரி முதல் வாரத்தில், டெல்லியில் பி.ஜே.பி முக்கியப் புள்ளிகள் சிலரை அவர் சந்தித்துப் பேசுகிறார். ஏற்கெனவே அ.தி.மு.க தரப்பில் ‘நாங்கள் சின்னம்மாவை ஏற்றுக் கொண்டா லும் தினகரனை ஏற்றுக்கொள்ள மாட்டோம்’ என்று கூறி வருகின்றனர். அதை நிரூபிப்பதுபோல அமைச்சர் ஜெயக்குமாரைத் தவிர மற்றவர்கள் சசிகலாவை விமர்சிப்பது இல்லை.

இளவரசி, கடந்த தீபாவளி சமயத்தில் பரோலில் வந்தபோது, திவாகரன் தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் இளவரசியிடம் பேசினார். அப்போது, ‘தினகரன் தொடர்ந்து கட்சியில் இருந்தால் அ.ம.மு.க சிதறும். சசிகலாவுக்குப் பின்னடைவு ஏற்படும். அ.தி.மு.க-வில் இணைவதற்கு தினகரன் விடமாட்டார். இணைப்பை நான் பார்த்துக்கொள்கிறேன். அக்காவை மட்டும் தினகரனை ஒதுக்கிவைக்கச் சொல்லுங்கள்’ என்று கூறியிருக்கிறார். அப்போது, இதை சசிகலாவிடம் இளவரசி சொன்னபோது சசிகலா ஏற்றுக்கொள்ளவில்லை” என்றவர்கள், பின்னர் சசிகலா மனம் மாறியது பற்றியும் சொன்னார்கள்.

“தினகரன் முகாமில் இருந்து செந்தில்பாலாஜி வெளியேறியது தான் சசிகலாவை யோசிக்க வைத்தது. குடும்பத்தில் ஒருவர்போல இருந்த அவர் வெளியேறியதைத் தடுக்கத் தவறிவிட்டார் என்று தினகரன் மீது அதிருப்தியில் இருந்தார் சசி. அப்போது, திவாகரன் தரப்பிலிருந்து சசிகலா தரப்பில் மீண்டும் பேசியிருக்கிறார்கள். ‘முன்னாள் எம்.எல்.ஏ-வான வெற்றிவேலுக்கு தினகரன் அதிக முக்கியத்துவம் தருகிறார். ஆர்.கே நகர் தேர்தல் சமயத்தில் ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் வீடியோவை வெற்றிவேலை வைத்து வெளியிட்டு, சங்கடத்தை ஏற்படுத்தினார்.

செந்தில்பாலாஜிக்குப் பிறகு தங்க.தமிழ் செல்வனையும் இழுக்க தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் தூதுவிட்டுக் கொண்டிருக் கின்றன. தினகரனின் மற்ற ஆதரவாளர்களை இழுக்கும் வேலைகளை தி.மு.க செய்துவருகிறது. இன்னொரு பக்கம், அ.தி.மு.க - அ.ம.மு.க இணைப்பை விரைந்து செய்யுமாறு பி.ஜே.பி அழுத்தம் கொடுக்கிறது. இதற்கு சரி என்றால் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கும் சட்ட ரீதியாக சில சாதகங்களைச் செய்துதர டெல்லியின் முக்கியப் புள்ளிகள் சம்மதித்துள்ளனர்’ என்று சசிகலாவிடம் எடுத்துச்சொல்லப்பட்டது. இதையெல்லாம் கேட்ட சசிகலா, சிலர் மூலம் தினகரன் தரப்பிலும் பேசியிருக்கிறார். அப்போது ‘பி.ஜே.பி-யை ஏற்றுக்கொள்ளவே முடியாது’ என்று தினகரன் திட்டவட்டமாகச் சொல்லி விட்டாராம். இதனால், தங்கள் பக்கம் உள்ள ஆதரவாளர்களைத் தக்க வைத்துக்கொள்ளவும், பிரிந்துகிடக்கும் அ.தி.மு.க மீண்டும் சேர்வதற் கும் இதைவிட்டால் சரியான சந்தர்ப்பம் கிடைக்காது என்று முடிவுக்கு வந்து விட்டார் சசிகலா. எனவே திவாகரன் தரப்பிடம், ‘விரைவில் நல்ல தகவல் சொல்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். எந்த நேரமும் தினகரனை சசிகலா கழற்றிவிடலாம்” என்றார்கள்.

தினகரன் ஆதரவாளர்களிடம் பேசியபோது, “பி.ஜே.பி-யுடனான கூட்டணி என்பது தற்கொலைக்குச் சமம் என்று தினகரன் நினைக்கிறார். திவாகரன், சசிகலாவால் ஒதுக்கிவைக்கப்பட்டவர். அதனால்தான், அவர் தனியாகப்போய் புதிய கட்சி ஆரம்பித்தார். இப்போது என்னவோ அவருக்கு மேலிடத்துத் தொடர்பு இருப்பதைப்போல தவறான செய்திகளைக் கசியவிட்டுவருகிறார். திவாகரன் தலைகீழாக நின்றாலும் சசிகலாவையும் தினகரனையும் பிரிக்க முடியாது” என்றனர் உறுதியுடன்.

- கே.குணசீலன்