Published:Updated:

நாணயம் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்... பங்குச் சந்தை... நீங்கள் வணிகரா, முதலீட்டாளரா, சூதாட்டக்காரரா?

நாணயம் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்... பங்குச் சந்தை... நீங்கள் வணிகரா, முதலீட்டாளரா, சூதாட்டக்காரரா?
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்... பங்குச் சந்தை... நீங்கள் வணிகரா, முதலீட்டாளரா, சூதாட்டக்காரரா?

நாணயம் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்... பங்குச் சந்தை... நீங்கள் வணிகரா, முதலீட்டாளரா, சூதாட்டக்காரரா?

நாணயம் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்... பங்குச் சந்தை... நீங்கள் வணிகரா, முதலீட்டாளரா, சூதாட்டக்காரரா?

நாணயம் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்... பங்குச் சந்தை... நீங்கள் வணிகரா, முதலீட்டாளரா, சூதாட்டக்காரரா?

Published:Updated:
நாணயம் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்... பங்குச் சந்தை... நீங்கள் வணிகரா, முதலீட்டாளரா, சூதாட்டக்காரரா?
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்... பங்குச் சந்தை... நீங்கள் வணிகரா, முதலீட்டாளரா, சூதாட்டக்காரரா?

காலையில் வாக்கிங் செல்பவர்கள், தாங்கள் பிரியத்துடன் வளர்க்கும் நாயை அழைத்துக் கொண்டு செல்வார்கள். அது ஏன் என்பதற்கு அருமையான விளக்கம் தந்தார் யூனிஃபை கேப்பிட்டல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் ஜி.மாறன். கடந்த டிசம்பர் 15, 16-ம் தேதிகளில் `நாணயம் விகடன்’ சார்பில்  சென்னையில் நடந்த ஃபைனான்ஸ் கான்க்ளேவ் நிகழ்ச்சியில்  ‘கொந்தளிப்பான சந்தையில் முதலீட்டாளர்கள் எப்படி வருமானம் ஈட்ட முடியும்?’ என்ற பேசினார் அவர்.

நாணயம் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்... பங்குச் சந்தை... நீங்கள் வணிகரா, முதலீட்டாளரா, சூதாட்டக்காரரா?

“இங்கு நான் பேசப்போவதற்கும் இதற்கு முன்பாக பல நிபுணர்கள் பேசியதற்கும் முரண்பாடுகள் இருக்கலாம். ஏனெனில், ஒவ்வொருவருக்கும் தனித்துவமான பார்வைகள், செயல்முறைகள் இருக்கக்கூடும். அதன்படி அவர்களின் கருத்துகள் அமையும். எனவே, நீங்கள் அதுகுறித்து குழப்பம் அடையாமல், நான் பேசியவற்றை ஓய்வுநேரத்தில் சிந்தித்துப் பார்த்து அதன்பின் உங்களுக்குச் சரியென்றுபட்டால்  செயல்படுத்துங்கள்” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொடர்ந்து பேசியவர் அவர், “எவ்விதப் புரிந்துகொள்ளலும் இல்லாமல் முதலீட்டில் ஈடுபடுவது தவறு. என்ன, ஏன், எதற்கு, யாருக்கானது எனப் பல்வேறு கேள்விகளை எழுப்பி, அதற்கான விடைகளைத் தேடுங்கள். தெளிவான பதில் கிடைக்கா விட்டால் பங்குச் சந்தை மட்டுமல்லாமல், எந்தத் தொழிலிலும் முதலீடு செய்யாதீர்கள். நம்பிக்கையில்லாமல் முதலீட்டைத் தொடங்குவதுதான் வருமான இழப்பிற்கு முக்கியக் காரணம். 

பங்குச் சந்தையின் போக்குக் குறித்துத் தெரிந்துகொள்ள உலக அளவில் சூழல், அரசியல், பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கம் போன்றவற்றைக் கணக்கீடு செய்து முடிவெடுப்பார்கள். ஆனால், நிறுவனங் களின் செயல்பாடுகளை மட்டுமே நான்  கணக்கில்கொள்வேன். எந்த நிறுவனத்தில் முதலீடு செய்வது என்பதை நிறுவனங்களின் தொடர் செயல்பாடுகளை வைத்து முடிவெடுப்பதே சரியானதாக இருக்கும்.

நாணயம் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்... பங்குச் சந்தை... நீங்கள் வணிகரா, முதலீட்டாளரா, சூதாட்டக்காரரா?

இதை விளக்க ஓர் உதாரணத்தைச் சொல்கிறேன். வாக்கிங் செல்லும் சிலர், தாங்கள் வளர்க்கும் நாயையும் அழைத்துச் செல்வார்கள். அந்த நாய் ஒரு நிலையாக நடந்து செல்லாது. அங்குமிங்குமாக இழுக்கும்; திடீரென நிற்கும்; பிறகு ஓடும். நாமும் வாக்கிங் செல்பவரைக் கவனிக்காமல், அவர் இழுத்துச்செல்லும் நாயைத்தான் பார்ப்போம்.

இதேபோலத்தான் பலரும் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கம், உலகச்சூழல் போன்ற புறக்காரணி களையே பார்ப்பார்கள். ஆனால், அவற்றைக் கவனிப்பதைவிட பங்குச் சந்தையில் பட்டியலிடப் படும் நிறுவனங்கள் குறித்துப் பார்ப்பதும், ஆய்வு செய்வதும்தான் சரியான பார்வையாக இருக்கும். பல நிறுவனங்கள் சந்தை சரிவிலிருக்கும் காலத்தி லும் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும்.

அதேபோல, சந்தை ஏற்ற இறக்கத்திலிருந்தாலும் ஒரே சீரான வருமானத்தைத் தரும் நிறுவனங்களும் உண்டு. இவ்வாறாக நமது ஆய்வு நிறுவனங்களின் கடந்தகால செயல்பாடுகள், நிர்வாகத்தில் இருப்பவர்கள் குறித்த தகவல்கள், அவர்கள் எடுக்கும் முடிவுகள், அந்த நிறுவனத்திற்கு இருக்கும் எதிர்காலம் போன்றவற்றை ஆய்வு செய்து முடிவெடுப்பதே சரியான கணிப்பாக இருக்க முடியும்” என்றார்.

   கமாடிட்டி வர்த்தகத்தின் சூட்சுமம்

‘தங்கம் உலோகம், மற்றும் எரிசக்தித் துறையில் லாபத்துக்கான வாய்ப்புகள்’ என்ற தலைப்பில், காம்ட்ரென்ட்ஸ் ரிஸ்க் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குநர் ஞானசேகர் தியாகராஜன் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது...

“விலைவாசி ஏற்ற இறக்கங்களைத் தீவிரமாகக் கண்காணிக்கும் ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள், முதலீட்டை விரிவுபடுத்த விரும்பினால் கமாடிட்டியில் முதலீடு செய்யலாம். அதேசமயம்,  சிறிய அளவிலான சில்லறை முதலீட்டாளர்கள் கமாடிட்டியில் முதலீடு செய்யும்போது மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும். சந்தையைச் சரியாகக் கணிக்கத் தவறினால், பெரிய இழப்புகளைச் சந்திக்க நேரிடும்.

கமாடிட்டியில் முதலீடு என்பது, சர்வதேச அளவில் வளர்ச்சிக்குரிய சந்தையில் முதலீடு செய்வதாகும். இந்த முதலீட்டின்மூலம்  பணவீக்கத்தைவிட கூடுதலான லாபத்தை ஈட்ட வாய்ப்புள்ளது.

கமாடிட்டி வர்த்தகத்தில் டிரேடிங் செய்வது எளிது. ஏனெனில், இந்தச் சந்தை தேவை மற்றும் விநியோகம் இரண்டின் அடிப்படையிலானதாகும்.ஒவ்வொரு கமாடிட்டிக்கும் விலை ஏறுவது, இறங்குவது ஒரு குறிப்பிட்ட சீசனில் இருக்கும். அந்த சீசனைப் புரிந்துகொண்டு முதலீடு செய்வது, இழப்பைத் தவிர்க்கும் ஒரு வழியாகும். உதாரணமாக, கச்சா எண்ணெய்க்கு இத்தகைய சீசன் உண்டு. வாகனங்கள் அதிகம் போக்குவரத்துப் பயன்பாட்டில் இருக்கும்போது கச்சா எண்ணெய்யின் தேவை அதிகரிக்கும். போக்குவரத்துக் குறையும் சீசனில் தேவையும் குறையும். அதேபோல, தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதும் சர்வதேச அரசியல், இயற்கை சீற்றங்களைப் பொறுத்திருக்கும்.

நாணயம் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்... பங்குச் சந்தை... நீங்கள் வணிகரா, முதலீட்டாளரா, சூதாட்டக்காரரா?

கமாடிட்டி முதலீடுகளைப் பொறுத்தவரை, வெள்ளியில் முதலீடு செய்வது ஓரளவுக்குப்  பாதுகாப்பானதாகும். மொபைல் போன் முதல் ராக்கெட் வரை வெள்ளியின் பயன்பாடு அதிகம் உள்ளது. கமாடிட்டி சந்தையில் நீண்ட காலமாக  நிலையாக இருப்பது வெள்ளி மட்டுமே.

ஏற்ற இறக்கமான பங்குச் சந்தை நிலவரம், கச்சா எண்ணெய் விலை நிலவரம், பிட்காயின் தொல்லை போன்றவற்றால் 2019-ல் கமாடிட்டி சந்தையில் முதலீடு அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்றார்.

   சரியான முடிவெடுக்கும் உத்தி

அடுத்ததாக, பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் லாபம் சம்பாதிக்க ஃபண்டமென்டலான விஷயங்களுடன், டெக்னிக்கலான விஷயங் களையும் தெரிந்துவைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கமாக எடுத்துச் சொன்னார் எக்ட்ரா நிறுவனத்தின் தலைவர் டி.ஆர்.அருள்ராஜன். அவர் பேசியதாவது...

“எந்தவொரு விஷயத்திலும் முடிவெடுத்தலின் முக்கியத்துவம் குறித்து அறிந்துகொள்ள வேண்டும். வீட்டு உபயோகப் பொருள் விற்கும் கடைக்குள் நுழைந்தால் அங்குள்ள அனைத்துப் பொருள்களையும் வாங்கமாட்டோம். நம்முடைய தேவை என்னவென்று பார்ப்போம். அடுத்து அந்தப் பொருளின் தரம் என்னவென்று சோதித்துப் பார்ப்போம். அதன்பின்பே முடிவுக்கு வந்துவாங்குவோம். அதை வாங்கியபின்னரும்கூட அதன் செயல்பாட்டைத் தொடர்ந்து ஆய்வு செய்வோம். அதாவது, யோசித்தல், திட்டமிடுதல், செயல்படுத்துதல் என்ற மூன்று படிநிலைகளைச் செயல்படுத்துகிறோம்.

பங்குச் சந்தை முதலீட்டிலும் நம்முடைய செயல்பாடு இப்படித்தான் இருக்கவேண்டும். பங்குச் சந்தை முதலீட்டிற்கு நம்மிடம் இருக்கும் சேமிப்பு எவ்வளவு, அதனை என்ன வகையில் முதலீடு செய்வது, சிறந்த திட்டத்தைத் தேர்வுசெய்வது எப்படி, அதை எவ்வாறு செயல் படுத்துவது, செயல்படுத்தியபின் அதன் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து, மீண்டும் எப்படிச் செயல்படுத்துவது எனப் பல்வேறு விஷயங்கள் இந்த முடிவெடுத்தலில் உள்ளன.

அடுத்ததாக, முடிவெடுத்தலில் உலகக் காரணிகளை ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு பங்குச் சந்தை சார்ந்த அறிஞர்களின் நூல்களை வாசித்து அவர்களின் அறிவுரை களைச் செயல்படுத்த வேண்டும். முடிவெடுக்கும் நிலையில் உணர்ச்சி வசப்படுவது பல நேரங்களில் தவறான முடிவுக்கு நம்மை இட்டுச் செல்லும். இவர்கள், பங்குச் சந்தை சரிவடையும்போது பெரும் பதற்றத்திற்கு உள்ளாவார்கள். சந்தை சரியான பாதைக்குத் திரும்பவேண்டுமென்று தெய்வங் களை வேண்டுவார்கள்; எளிதில் மனமுடைந்து போவார்கள். அதன் காரணமாக மிகப்பெரிய இழப்புகளைச் சந்திப்பார்கள்.

குழப்பச் சிந்தனையில் இருப்பவர்கள், சந்தை ஏறுவது போல் இருக்கையில் வாங்குவார்கள். கொஞ்சம் இறங்கினாலும் விற்றுவிடுவார்கள். அவர்களால் பெரிய லாபத்தைப் பார்க்கவே முடியாது. பங்கின் விலை உயரும்முன் அதை விற்றுவிட்டு,  அது உயரத் தொடங்கியதும், ‘அடடே, தப்பு பண்ணிட்டோமே!’ என விழிப்பார்கள். எனவே, நம்முள் இருக்கும் குழப்பவாதியை வெளியேற்றிவிட்டு, உறுதியான முடிவெடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

நாணயம் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்... பங்குச் சந்தை... நீங்கள் வணிகரா, முதலீட்டாளரா, சூதாட்டக்காரரா?

அதன்பின்னர், பங்குகளின் சார்ட்டில் முடிவெடுக்க எத்தகைய காரணிகளைப் பார்க்க வேண்டும் என்று விளக்கினார். ட்ரெண்ட் அனாலிசிஸ் செய்யும் முறைகளை விவரித்தார். ஒரு பங்கு லாபத்தில் இருந்தால் அது லாபத்தைத் தொடர அனுமதிக்க வேண்டும். பங்கினை விற்க அவசரப்படக்கூடாது. லாபம் குறையும்போது பங்கை விற்றுவிட்டு வெளியேற முடிவெடுக்க வேண்டும்.

ஒரு நிறுவனப் பங்கு லாபத்தில் செயல்பட்டபோதிலும் நம்மால் அதில் ஏன் லாபம் பார்க்க முடிவதில்லை என்பதை ஒரு சிறு கதையின்மூலம் விளக்கினார். ஒரு மீனவர் தனது படகில் மீன்பிடிக்கச் சென்றார். நிறைய மீனை அவர் பிடித்தபின், கரைக்குத் திரும்ப மனமில்லாமல் இன்னும் அதிகமான மீன்களைப் பிடிக்க நினைத்தார். ஆனால், திடீரென்று அடித்த சூறாவளிக் காற்று அவரது படகை புரட்டிப் போட்டது. பேராசை அவருக்குப் பெரிய நஷ்டத்தைத் தந்தது.  அதேபோலத்தான் பல முதலீட்டாளர்களும் தவறு செய்கிறார்கள் என்றார் அவர். 

இறுதியாக, “நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும், சரியான காரணம் இருக்கவேண்டும். அதுவும் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்ட காரணமாக இருக்கவேண்டும். அப்ட்ரெண்டில் இருக்கும்போது சரியான தடைநிலையையும், டவுன்ட்ரெண்டில் இருக்கும்போது சரியான ஆதரவு நிலையையும் கண்டறிய வேண்டும். பங்குச் சந்தையில் நீங்கள் வணிகரா, முதலீட்டாளரா, சூதாட்டக்காரரா என்றத் தகுதிநிலையைத் தீர்மானிப்பது மிகவும் அவசியம்” என்று சொல்லி தன் உரையை நிறைவுசெய்தார்.

அடுத்துப் பேசியவர்களின் கருத்துகள் அடுத்த வாரம்...

- தெ.சு.கவுதமன்

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், சி.ரவிக்குமார்