Published:Updated:

3G பள்ளி!

3G பள்ளி!

3G பள்ளி!

பெண் சிசுக் கொலை நடைமுறையில் இருந்த மதுரை மாவட்டத்தில், அதனைத் தடுக்கவும் பெண்களுக்குக் கல்வி புகட்டவும் எடுக்கப்பட்ட முயற்சிகளில், கிறிஸ்துவ நிறுவனங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. பெண்களுக்கு எனப் பிரத்யேகமாகத் தொடங்கப்பட்ட முதல் பள்ளி என்பதோடு, மதுரையில் நூற்றாண்டு கண்ட முதல் பெண்கள் கல்வி நிறுவனம் என்ற பெயரையும் பெற்றுள்ளது கீழவாசல் ஆர்.சி. நடுநிலைப்பள்ளி. இந்தப் பள்ளியின் நூற்றாண்டு விழா, கடந்த 21-ம் தேதி நடந்தது. மதுரையின் முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் திரண்டு வந்து வாழ்த்திய இந்த விழாவில், மாணவிகளின் அழகிய கலை நிகழ்ச்சிகள் மணிக்கணக்கில் நடந்தன.

3G பள்ளி!
##~##
மூன்று தலைமுறையாக இந்தப் பள்ளியில் பயிலும் ஒரே குடும்பத்துப் பெண்கள் கலந்துகொண்டதுதான் இந்த விழாவின் ஹைலைட். மதுரை தெற்குவாசல் சிங்காரத்தோப்பு தெருவைச் சேர்ந்த பத்மாவதி, அவருடைய மகள் நாகராணி, பேத்தி ஜனார்த்தனி ஆகியோர்தான் அந்தப் பெண்கள். 'நான் படிச்ச காலத்துல பொம்பளைப் பிள்ளைங்களைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பவே மாட்டாங்க. ஆனா, எங்க வீட்டுல என்னை ஏழாவது வரைக்கும் படிக்க அனுப்பியதுக்குக் காரணம், இந்தப் பள்ளிதான். பெண்கள் மட்டும் படிக்கிறதுக்குத் தனிப் பள்ளிங்கிறதால, பாதுகாப்பா இருக்கும்னு அனுப்பிவெச்சாங்க. பாதுகாப்பு, நல்லொழுக்கம் ரெண்டும் இருந்ததால், என் மகள் நாகராணியையும் இதே ஸ்கூலில் சேர்த்தேன். இப்போ அவ தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையா வேலை பார்க்கிறா. ஆனாலும், என் பேத்தி ஜனார்த்தனியையும் இதே ஸ்கூல்லதான் படிக்க வெச்சிருக்கா என் மகள். இப்போ தெரியுதா இந்தப் பள்ளியோட பெருமை!'- நெகிழ்ச்சியாகச் சிரிக்கிறார் பத்மாவதி பாட்டி.

- கே.கே.மகேஷ்
படங்கள்: பா.காளிமுத்து

அடுத்த கட்டுரைக்கு