Published:Updated:

50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்!

சக்தி தமிழ்ச்செல்வன்
50 லட்சம் மரங்களை நட்ட  96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்!
50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்’ விக்னேஷ்வர் தத் மரணம்!

50 லட்சம் மரங்களை நட்ட 96 வயது `ட்ரீ மேன்' மரணித்தார். உத்தர காண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ்வர் தத் சக்லானி. அந்தப் பகுதி மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தனது பணிக்காக அறியப்படுகிறவர். 96 வயதான விக்னேஷ்வரை மக்கள் 'வ்ரிக்‌ஷா மனவ்' அதாவது  `ட்ரீ மேன்' என அன்போடு அழைத்து வந்தனர். தெக்ரி கார்வால் (Tehri Garhwal) மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 50 லட்சம் மரங்களை நட்டுள்ளார் எனத் தெரிவிக்கின்றனர் அவரது குடும்பத்தினர். அவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். 

1986-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இவரது சேவையைப் பாராட்டி இந்திரா ப்ரியதர்ஷினி விருது வழங்கிக் கௌரவித்தார். தனக்கு 8 வயது இருந்தபோது முதல் மரக்கன்றை நட்டுள்ளார் விக்னேஷ்வர்.

அதன் பிறகு சகோதரர் மரணித்தபோது, மனைவி இறந்தபோதும் மரக்கன்று நடத் தொடங்கினார். பத்து வருடங்களுக்கு முன் விக்னேஷ்வர் கண்பார்வையை இழந்தார். அதன் பிறகும் பலரின் உதவியுடன் மரங்கன்றுகளை நட்டுள்ளார். அவரது மறைவுக்கு அந்தப் பகுதி மக்கள் பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.