Published:Updated:

எம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்!

எம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்!
பிரீமியம் ஸ்டோரி
எம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்!

இயற்கை வாழ்வியல் உன்னதம்

எம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்!

இயற்கை வாழ்வியல் உன்னதம்

Published:Updated:
எம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்!
பிரீமியம் ஸ்டோரி
எம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்!

“சட்டமே காவல் நிலையம் என்று
காவல் நிலையம் நாங்க போனோம்
போகும் வழியிலேயே – எங்கள் கற்பு பறிபோச்சே!
காலங்கள் மாறினாலும் நீதிமன்றம் மறந்ததே
இரையாகிப் போனதே இருளச்சி எங்கள் வாழ்க்கை
எங்கள் உரிமை எங்களுக்கு வேணுமுங்க
போராடுவது எங்கள் உரிமைங்க...”

எம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்!

நீலம் பண்பாட்டு மையம் சமீபத்தில் சென்னையில் `வானம்’ என்கிற கலை விழாவை நடத்தியது. அங்கே அனைவரின் கவனத்தையும் ஈர்த்த `முல்லைக் கலைக்குழு’வின் பாடல் வரிகள் இவை.

இருளர் மக்கள் இன்றளவும் பல்வேறுவிதமான சமூக ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகிறார்கள். வசிப்பிடம், குடிநீர், மின்சாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்காக ஓயாது போராடிக்கொண்டே இருக்கும் பழங்குடி இனம்.  இவர்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறைகளைத் தட்டிக் கேட்கவோ, உரிமைகளைப் பெற்றுத் தரவோ எந்த அரசியல் இயக்கங்களும் முன்வருவதில்லை. இப்படிப்பட்ட சூழலில், தங்களின் வலிகளுக்கும், உரிமைகளுக்கும் கலை வடிவம் கொடுத்து மேடையேற்றிவருகிறார்கள் `முல்லை’ கலைக்குழுவினர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஜக்காம்பேட்டை இருளர் குடியிருப்பில் `முல்லை’ குழுவினரைச் சந்தித்தோம்.

``இந்தக் குழுவில் உள்ள அனைவருமே முதல் தலைமுறைப் பட்டதாரிகள்’’ என்ற அறிமுகத்தோடு பேசத் தொடங்கினார் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கன்னியப்பன். 

எம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்!

“எங்கள் குலதெய்வம் கன்னிமார் சாமிகளுக்கு நிகரானவர் பேராசிரியர் கல்யாணி ஐயா. எங்கள் இனத்தின் குறியீடாக விளங்கும் அவர்தான் அனைத்திற்கும் முன்னோடி. அவர் நடத்திவரும் `பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்க’த்தில் என் அப்பா உறுப்பினர். அப்பாவைத் தொடர்ந்து நானும் அதில் இணைந்தேன். ஒருகட்டத்தில் இருளர் இன இளைஞர்களை ஏன் நாமே ஒன்றிணைக்கக் கூடாது எனத் தோன்ற, அப்போது உருவெடுத்ததுதான் `பழங்குடி இளைஞர்கள் நலச் சங்கம்.’

எங்கள் மாவட்டத்தின் முதல் தலைமுறைப் பட்டதாரிகள் அனைவரையும் அதன்மூலம் ஒன்றுதிரட்டினோம். முதல் கட்டமாக, எங்கள் சமூக முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் கல்வியின்மையை உடைத்து, கல்வியை அடுத்த தலைமுறைக்கு எவ்வகையிலேனும் கொண்டு போய்ச் சேர்ப்பது என முடிவெடுத்தோம். 

எம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்!

எங்களில் பலர், உள்ளூரில் ஒதுக்கப்படுவதால் வெளி மாநிலங்களுக்குச் செங்கல் சூளை, கரும்பு வெட்டும் வேலைகளுக்குச் செல்கிறார்கள். அப்படிப் போகும்போது பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளையும் தங்களுடன் அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். இதனால் அந்தப் பிள்ளையின் கல்வி தடைப்படுகிறது. அப்படியானவர்களைக் கண்டறிந்து அந்த மாணவனை விடுதியில் சேர்க்க உதவுகிறோம். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எங்கள் மாவட்டத்தில் இருக்கும் மாணவர்களை ஒரு இடத்தில் திரட்டி எந்தப் பாடத்தில் அவர்கள் பின்தங்கி இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து சிறப்பு ஆசிரியர்களைக் கொண்டு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறோம்.

உதாசீனங்களையும், வெறுப்புகளையும் சமாளித்து நாங்கள் பத்தாம் வகுப்பு வரை முன்னேறினாலும் சாதிச்சான்றிதழ் கிடைக்காததால் அதற்குமேல் படிப்பைத் தொடர முடியாமல் கூலி வேலைக்குச் செல்லும் நிலை இப்போதும் இருக்கிறது. எங்களால் முடிந்தவரை அப்படியான மாணவர்களுக்கு சாதிச்சான்றிதழ் கிடைக்கச் செய்து கல்வியைத் தொடர வைக்கிறோம்.

கடந்த செப்டம்பர் மாதம் நீலம் பண்பாட்டு மையம் திண்டிவனத்தில் நடத்திய இளம் எழுத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையில் நான் கலந்துகொண்டேன். அங்கு இன்றைய கல்விமுறையைக் கடுமையாகச் சாடும் பிரளயனின்  `பவுனுக் குஞ்சு’ நாடகமும், நகர விரிவாக்கத் திட்டங்களினால் இடம்பெயரும் மக்களைப் பற்றிய ‘பயணம்’ நாடகமும் நடத்தப்பட்டது. அந்த நாடகங்களின் தாக்கத்தில் உருவானதுதான் எங்கள் முல்லை கலைக்குழு! 

எம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்!

காடும் காடு சார்ந்த நிலங்களையும் ஒட்டிய முல்லைப் பகுதிகள்தான் எங்கள் முன்னோர்களின் வாழிடம். அதையே எங்கள் குழுவின் பெயராக வைத்தோம்.

எங்கள் முன்னோர்களின் வாழ்வியல் முறை, தெய்வ வழிபாடு, கல்வியின் அவசியம் இவற்றைப் பாடல்களாக இயற்றி எங்கள் சமூக மக்களிடையே கடத்திக்கொண்டிருந்தோம்.

அப்போதுதான் வானம் கலை விழா பற்றிக் கேள்விப்பட்டு அதில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்தோம். அவர்களும் எங்கள் குழுவின் படைப்புத்திறனைப் பார்த்துவிட்டு வாய்ப்பு கொடுத்தார்கள்.  இப்போது அதிகமான கவனம் கிடைத்திருக்கிறது’’ எனச் சொல்லும் கன்னியப்பன் ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு, கொத்தடிமைகளாக இருக்கும் பழங்குடி மக்களை மீட்கும் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவருகிறார்.  

எம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்!

``இயற்கையோடு  இயற்கையாகக் காட்டுக்குள் இருந்தவர்களை ஒவ்வொரு சட்டமாக இயற்றி ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமர வைத்ததைத் தவிர எங்களுக்கு என்ன செய்துவிட்டது அரசு? எங்களின் நிலையை மாற்ற இலவச மனைப்பட்டா வழங்குவதாக அறிவிக்கிறது அரசு. அதை வாங்க வேண்டுமென்றால் சாதிச்சான்றிதழ் கேட்கிறார்கள். அதைக் கேட்டு தாசில்தார் அலுவலகம் போனால் `நல்ல டிரஸ் போட்டிருக்கீங்களே... நீங்க இருளர் என்று நாங்கள் எப்படி நம்புவது?’ என்று தர மறுக்கிறார்கள். இப்படியான இரட்டை நிலைப்பாடுகளைத்தான் எங்கள் விஷயத்தில் கடைப்பிடிக்கிறது அரசு.

எம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்!

ஒரு பக்கம் படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை. எங்களுக்கான இட ஒதுக்கீடு 1% மட்டும்தான். அதையும் பணம் கொடுத்தால்தான் பெற முடியும் என்ற நிலை இருக்கிறது. நடுவனந்தல் என்ற கிராமத்தில் 40 குடும்பங்களுக்குப் பட்டா கேட்டு வருடக் கணக்காகப் போராடினோம். அங்கே கொடுக்க வாய்ப்பே இல்லை என்று அடித்துக் கூறினார்கள் அதிகாரிகள். ஆனால், விதிமுறைகளின்படி பட்டா கொடுக்கலாம் என்று எங்கள் குழுவின் வழிகாட்டியாக இருக்கும் செல்வம் போராடவும் அவை கிடைத்தன.

நாங்கள் கடந்து வந்த இத்தனை வலிகளும்தான் எங்கள் பாடல்களின் மூலம்.  எங்களின் உரிமைக் குரல், கலைக்களங்களில் இனி விடாது ஒலிக்கும்” என உறுதிப்பட முடிக்கிறார் கன்னியப்பன்.

தொடரட்டும் இசைப்புரட்சி!

ஜெ.முருகன் - படங்கள்: எஸ்.தேவராஜன்