Published:Updated:

நாணயம் QUIZ

நாணயம் QUIZ
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் QUIZ

நாணயம் QUIZ

நாணயம் QUIZ

நாணயம் QUIZ

Published:Updated:
நாணயம் QUIZ
பிரீமியம் ஸ்டோரி
நாணயம் QUIZ

ங்குச் சந்தை, பொருளாதாரம், வருமான வரி தொடர்பான கேள்விகளையும் அவற்றுக்குச் சில பதில்களையும் தந்துள்ளோம். சரியான பதிலுக்கு 10 மார்க் என மொத்தம் 100 மார்க். இதில் 60-70 மார்க்கை நீங்கள் எடுத்தால், உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம்.

1. ஒருவருக்கு சிபில் கிரெடிட் ஸ்கோர் 680 என இருப்பது

அ. சராசரி    
ஆ. சிறப்பு
இ. மிகச் சிறப்பு

2. ஒருவர் திவாலாகும்போது எதற்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது?

அ. ரொக்கப் பணம்
ஆ. வங்கிக் கணக்கு
இ. ஓய்வூதியக் கணக்கு 

3.  கல்விக் கடன் என்பது

அ. பாதுகாப்பான கடன்
ஆ. முன்னுரிமைக் கடன்
இ. முன்னுரிமை அல்லாத கடன்

4.  காளைச் சந்தை என்பது

அ. நிறுவனப் பங்குகளின் விலை தொடர்ந்து குறைந்து வருவது
ஆ. பங்குகளின் விலை ஏற்ற இறக்கத்தில் இருப்பது
இ. பங்குகளின் விலை  ஏற்றத்தில் இருப்பது

நாணயம் QUIZ

5. ரிஸ்க் இடமாற்றம் (Risk transfer) என்பது இன்ஷூரன்ஸின் செயலாகும்.

அ. சரி   
ஆ. தவறு

6. ஜி.எஸ்.டி என்பது

அ. மறைமுக வரி
ஆ. நேரடி வரி

7.  ஹெல்த் இன்ஷூரன்ஸ் என்பது  ஒருவரின் ஆயுளுக்கு கவரேஜ் அளிக்கும்.

அ. சரி     ஆ. தவறு

8. இந்திய எஃகு ஆணையத்துக்கு (SAIL)  எஃகு தொழில் வளர்ச்சியில் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் தனியார் நிறுவனங் களுக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துகிறது. 

அ. சரி    ஆ. தவறு

9.  இந்தியாவின் முதல் காகிதத் தொழிற்சாலை   எந்த ஆண்டு கொல்கத்தாவில் தொடங்கப் பட்டது?

அ. 1867    ஆ. 1967        இ. 1987

10. மிகவும் மூத்தக் குடிமக்களுக்கு (80 வயதுக்கு மேல்) நிதியாண்டில் எவ்வளவு தொகை வரை வருமான வரிவிலக்கு அளிக்கப்படுகிறது?

அ. 3,00,000   
ஆ. 5,00,000    இ. 10,00,000

- சி.சரவணன்

விடைகள்

1. ஆ. சிறப்பு 

2. இ. ஓய்வூதியக் கணக்கு 

3. இ. முன்னுரிமை அல்லாத கடன்  
4. இ. பங்குகளின் விலை ஏற்றத்தில் இருப்பது 

5. அ .சரி 

6. அ. மறைமுக வரி

7. ஆ. தவறு

8. அ. சரி

9. அ. 1867 

10. ஆ. 5,00,000