Published:Updated:

`தி.மு.க எப்படி இருக்கவேண்டும்?' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு!

எம்.திலீபன்
`தி.மு.க எப்படி இருக்கவேண்டும்?' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு!
`தி.மு.க எப்படி இருக்கவேண்டும்?' - ஸ்டாலினுக்கு அறிவுரை சொன்ன பாடாலூர் விஜய் உயிரிழப்பு!

திராவிடர் கொள்கையில் நாட்டம் கொண்டவரும், ஸ்டாலினே வியந்து பாராட்டிய மனிதர் பாடாலூர் விஜய். தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இறப்பு தி.மு.கவினர் மத்தியில் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

யார் இந்த விஜய். பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் கிராமத்தைச் சேர்ந்த விஜய். இவர் 5ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது தசைச்சிதைவு நோயால் பாதிப்பு ஏற்பட்டதால் பள்ளிக்குச் செல்ல முடியாமல் வீட்டில் இருந்தபடியே புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டவர் விஜய்.

கலைஞர், மு.க.ஸ்டாலின் அவர்களின் மீது ஏற்பட்ட கொள்கை பிடிப்பாலும் திராவிட பாரம்பரியத்தை முகநூல் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றவர். தி.மு.க என்ற கட்சி எப்படிச் செயல்படவேண்டும், பெரும் தலைவர்கள் தொண்டர்களை எப்படிப் பார்க்கவேண்டும் என்று ஸ்டாலின், மற்றும் கருணாநிதியின் இன்பாக்ஸ்க்கு செய்தி அனுப்பும் துணிச்சல் கொண்டவர். அதே சமயத்தில் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது நிகழ்ந்த அவலநிலைகளையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

ஒற்றைப் புள்ளியில் முற்றுப் புள்ளி வைப்போம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். அதில் தி.மு.க தலைமைக்கே தெரியாத பல விஷயங்களை எழுதியிருந்தார். அதனைப் பார்த்ததும் யார் இந்த பாடாலூர் விஜய் என்று ஸ்டாலின் கேட்கும் அளவிற்கு வளர்ந்தவர். தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இடுப்புக்குக் கீழ் எந்த உறுப்புகளும் செயல்படாத நிலையிலும் அ.தி.மு.க. அரசுக்கு எதிராகவும், துணிச்சலாகவும் ஆட்சியை அகற்ற வேண்டும் எனும் குறிக்கோளோடு செயல்பட்டு வந்தார் விஜய். தசைச் சிதைவு நோய்க்குச் சென்னையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த போது ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறி நிதியுதவியும் வழங்கினார்.

அதே போல் கடந்த 8-11-2018 அன்று பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்திற்கு ஸ்டாலின் வந்திருந்த போது பாடாலூரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரடியாகச் சென்று உடல் நலம் விசாரித்தார். நூரையிரல் மற்றும் சுவாச பிரச்னையால் அவதிப்பட்டு வந்த விஜய் கடந்த 15 ம் தேதியன்று உடல்நிலையால் மோசமானதால் பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துக் கல்லூரியில் சேர்ந்தார். அங்குச் சிகிச்சை பலனிக்காமால் நேற்று மாலை உயிரிழந்தார். இவரின் இறப்பு ஒட்டு மொத்த தி.மு.கவின் பேரிழப்பு என்கிறனர் தொண்டர்கள்.