Published:Updated:

''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்!''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்

எம்.குமரேசன்
''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்!''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்
''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்!''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்

மெரிக்காவின் சியாட்டில் (Seattle) நகரில் உள்ள டிக்ஸ் ஹோட்டலுக்கு சமீபத்தில் வந்த பில்கேட்ஸ் பர்கர் ஆர்டர் செய்தார். பில்கேட்ஸ் ஆர்டர் செய்த ஒரு பர்கர் விலை 3.40 டாலர். ஃப்ரைஸ் விலை 1.90 டாலர் மற்றும் கோக் 2.38 டாலர் மொத்தம் 7.68 பில் கொடுத்த பில்கேட்ஸ் கடைக்கு வெளியே பேண்ட் பாக்கெட்டுக்குள் கை விட்டுக் கொண்டு அமைதியாக நின்று கொண்டிருந்தார். உலக மகா பணக்காரர்,  பர்கர் ஆர்டர் செய்து விட்டு சாமானிய மனிதர் போல காத்திருப்பதைப் பார்த்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் மைக் காலோஸ் என்பவர் அவரைப் புகைப்படம் எடுத்தார். பின்னர், 'பணக்காரர்கள் பில்கேட்ஸ் போன்று நடந்து கொள்ள வேண்டுமே தவிர வெள்ளை மாளிகையில் இருந்து கொண்டு தங்கக்கழிவறையுடன் போஸ் கொடுக்கக் கூடாது என்று டொனால்ட் டிரம்பை கேலி செய்து இந்தப் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்தப் புகைப்படம் 13,000 முறை ஷேர் செய்யப்பட்டது. 17,000 பேர் லைக் செய்திருந்தனர். 

''95 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதிபதி. உலகத்தின் முன்னணி கொடையாளர். இவ்வளவு சொத்து வைத்திருந்தாலும் சாதாரண மனிதர் போல கடைக்குச் சென்று பர்கர் ஆர்டர் செய்த பில்கேட்ஸை பாராட்ட வார்த்தைகளே இல்லை'' என்றும் 'தங்கத்தட்டு, தங்கத்தினால் செய்யப்பட்ட கழிவறைகளைப் பயன்படுத்தும் பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு மனிதர்' எனவும் சமூக வலைதளங்களில் பில்கேட்ஸுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

சியாட்டில் நகரத்தின் அருகிலுள்ள பெல்வியூவ் (Bellevue) பகுதி பர்கர்மாஸ்டர் கடைக்குச் சென்று பர்கர் சாப்பிடுவது பில்கேட்ஸின் வழக்கம். ஒரு மாற்றம் வேண்டுமென்பதற்காக சியாட்டிலில் உள்ள டிக்ஸ் டிரைவ் இன் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போதுதான், இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் பல்கலையில் ஒருமுறை உரையாற்றிய பில்கேட்ஸ், ''மிகப் பெரிய பணக்காரராக இருக்கலாம். உலகம் முழுக்க கொண்டாடப்படும் செலிபிரிட்டியாக இருந்தாலும் தனி மனித சுதந்திரம் மிக அவசியமானது'' என்று குறிப்பிட்டிருந்தார்.

சிலிக்கான்வேலியின் 'பவர்ஃபுல் 'மனிதரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம்!