Published:Updated:

நெல்லை போலீஸின் 'கொல வெறி!'

நெல்லை போலீஸின் 'கொல வெறி!'

தென் மாவட்டங்களில் மதுரைக்கு அடுத்தபடியாக ஜனநெருக்கடியும், போக்குவரத்து நெரிசலும் நிறைந்த ஊர் திருநெல்வேலிதான். சாலை விபத்துக்களைக் கட்டுப்படுத்த 'ஒழுங்காய்ப் போய் வா ரோட்டில்.. மனைவி காத்திருப்பாள் வீட்டில்' என்று தொடங்கி பல்வேறு விழிப்பு உணர்வு போர்டுகளை மாநிலம் முழுவதும் போக்குவரத்து போலீஸார் வைத்திருந்தாலும்  நெல்லை போக்குவரத்து போலீஸாரின் விளம்பரம் ரொம்பவே வித்தியாசம்!

நெல்லை போலீஸின் 'கொல வெறி!'

திருநெல்வேலி மாநகரின் முக்கியப் பகுதிகளில் நெல்லை மாநகரப் போக்குவரத்து போலீஸார் வாகன ஓட்டிகளுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் தற்போது தமிழ்நாட்டையே கலக்கிக்கொண்டிருக்கும் 'ஒய் திஸ் கொலவெறி’ பாடலைப் பயன்படுத்தி பொதுமக்களைக் கவர்ந்திருக்கின்றனர். நெல்லை மாநகரின் முக்கியப் பகுதிகளில்  'why this kolaveri? Drive without anger’ என்று போக்குவரத்துத் துறை வைத்திருக்கிற ப்ளெக்ஸ்களைப் பார்க்கிற பொதுமக்கள், மெலிதாகப் புன்னகைத்தபடி வண்டியின் வேகத்தைக் குறைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதிலும்  போக்குவரத்து போலீஸாரின் அப்டேட் அட்வைஸுக்கு நெல்லை இளைஞர்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ்!

- என்.சுவாமிநாதன்
படம்: எல்.ராஜேந்திரன்

அடுத்த கட்டுரைக்கு