Published:Updated:

ஒரு பொம்மலாட்டம் நடக்குது !

ஆ.நந்தகுமார் படங்கள்: ஜெ.முருகன்

##~##

''சீனர்களுக்கும் நமக்கும் எல்லைத் தகராறு மட்டும் இல்லை.... கலைத் தகரா றும் இருக்கு. 'நாங்கதான் பொம்ம லாட்டத்தைக் கண்டுபிடிச்சோம்’ என்கிறார்கள் சீனர்கள். ஆனால், சிலப்பதிகாரத்திலேயே பொம்ம லாட்டம் பற்றிய குறிப்புகள் இருக்கு.   வாஸ்கோடகாமா,   மார்க் கோபோலோ மாதிரியான வெளி நாட்டு யாத்ரீகர்கள் வெவ்வேறு நாடுகளுக்குப் பயணிக்கும்போது, அந்தந்த நாட்டுக் கலைகள் மீது பிரியம்கொண்டு தங்கள் நாட்டுக் குக் கொண்டு போயிருக்கலாம்கிறது சிலரின் அனுமானம். எப்படியோ பொம்மலாட்டம்கிறது நமது தொன்மையான கலைகளில் ஒண்ணு!'' என்று பொம்மலாட்டம் பற்றிப் பேசத் தொடங்குகிறார் தண்டபாணி.

தண்டபாணி, புதுவையில் ஓர் அரசு பள்ளித் தலைமை ஆசிரியர். பொம்மலாட்டக் கலை மீது கொண்ட அதீத ஆர்வத்தால், பள்ளிகளிலும் கிராமங்களிலும் பொம்மலாட்டம் நடத்துவதைக் கலைப் பணியாகவே செய்து வருகிறார்.

''சினிமா வெளிநாட்டில் இருந்து வந்தாலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பொம்மலாட்டம்தான், அதற்கு முன்னோடி. இன்றைய அனிமேஷன் படங்களுக்கும் முன்னோடினு சொல்லலாம். கதாபாத்திரங்கள் பேசுவது, காதலிப்பது, சண்டை போடுவதுனு தமிழ் மக்கள் முதல்முதலில் திரையில் பார்த்துப் பழகியது பொம்மலாட்ட வடிவத்தைதான். ஆனா, இப்போ தேடித் தேடிப் பார்த்தாலும் தமிழ்நாடு முழுக்க விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பொம்மலாட்டக் கலைஞர்கள் இருக்காங்க.

ஒரு பொம்மலாட்டம் நடக்குது !

பொம்மலாட்டப் பொம்மைகளைஆட்டுத் தோலில்தான் செய்வாங்க. அதுக்காகவே ஆடு வளர்த்த காலமும் இருந்திருக்கு. கட் டைப் பொம்மலாட்டம், கையுறைப் பொம்மலாட்டம், கயிறு பொம்மலாட்டம்னு மூணு வகையான பொம்மலாட்டம் இருந்திருக்கு. கட்டைகளில் பொம்மைகளை வெச்சுநடத்த றது கட்டைப் பொம்மலாட்டம். இதுக்காக ஐந்து அடி உயர பொம்மை எல்லாம் செய்து இருக்காங்க. என் கையில் இருக்கே இது தான் கையுறைப் பொம்மலாட்டப் பொம்மைகள். திரைக்குப் பின்னால் கயிறு களை வெச்சு ஆட்டுவிக்கிறது கயிறு பொம்மலாட்டம்.

ஒரு பொம்மலாட்டம் நடக்குது !

இப்ப உள்ள காலகட்டத் தில் பொம்மலாட்டத்தில் புராணக் கதைகள் சொல்ல வேண்டியஅவசியம் இல்லை. கவிதைகள், சிறுகதைகளைப் பொம்மலாட்டம் மூலமா மாணவர்களிடமும் கிராம மக்களிடமும் கொண்டுபோறோம். என்னை மாதிரியே என் மகள் பிரியதர்ஷினிக்கும் பொம்மலாட்டம் மீது ஆர்வம். பொதுவா மாணவர்களுக்குச் செய்யு ளையோ சங்கப் பாடல்களையோ புரிஞ்சிக்கறதும் மனப்பாடம் பண்றதும் கஷ்டமா இருக்கும். அதைக் கதையா மாத்தி பொம்மலாட்டம் மூலமா சொல்லும்போது சுலபமா மனசில் தங்கிடும். பாடப் புத்தகங்கள் மூலமா கல்வி கற்றுக் கொடுக்க முடியும்கிறதைத் தாண்டி, அடுத்தகட்டமா செயல் வழிக் கற்றல் முறைக்கு வந்திருக்கோம்.

ஒரு பொம்மலாட்டம் நடக்குது !

இதுக்கு நடுவில் பொம்மலாட்டம் மூலமா பாடங்களைக் கற்றுத்தருவது மட்டும் இல்லாம, பொம்மலாட்டக் கலைகளையும் கலைஞர்களை யும் ஊக்குவிக்க வேண்டியது அரசாங்கத்தோட கடமை!'' என்கிறார் தண்டபாணி.

அடுத்த கட்டுரைக்கு