Published:Updated:

தின வருமானம் 2,200 கோடி... வரியோ 0.5 %... பட்ஜெட்டுக்கு நிகராக சம்பாதிக்கும் இந்திய பெரும் பணக்காரர்கள்!

இந்தியாவில், கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் 18 புதிய பெரும் பணக்காரர்கள் உருவாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியப் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 119 ஆக அதிகரித்து, அவர்களின் செல்வமும் முதன்முறையாக 440.1 பில்லியன் டாலரைத் ( சுமார் 28 லட்சம் கோடி ரூபாய்) தொட்டுள்ளது.

தின வருமானம் 2,200 கோடி... வரியோ 0.5 %... பட்ஜெட்டுக்கு நிகராக சம்பாதிக்கும் இந்திய பெரும் பணக்காரர்கள்!
தின வருமானம் 2,200 கோடி... வரியோ 0.5 %... பட்ஜெட்டுக்கு நிகராக சம்பாதிக்கும் இந்திய பெரும் பணக்காரர்கள்!

ந்தியப் பெரும் பணக்காரர்களுக்கு 2018-ம் ஆண்டு அதிர்ஷ்டமிக்க ஆண்டாகவே இருந்துள்ளது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இந்த வகை பெரும் பணக்காரர்கள் 1 சதவிகிதம் மட்டுமே என்றாலும், அவர்களிடம்தான் நாட்டின் ஒட்டுமொத்த செல்வத்தில் பாதிக்கும் மேல் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. 

தின வருமானம் 2,200 கோடி... வரியோ 0.5 %... பட்ஜெட்டுக்கு நிகராக சம்பாதிக்கும் இந்திய பெரும் பணக்காரர்கள்!

சர்வதேச அளவில் பெரும் பணக்காரர்களின் செல்வம் 2018-ம் ஆண்டில் 12 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது, இந்த ஆண்டில்  இவர்கள் நாளொன்றுக்கு சுமார் 2.5 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியுள்ளனர். அதே சமயம், உலக மக்கள் தொகையில் பாதியாக உள்ள ஏழைகளின் வருவாய் 11 சதவிகிதம் குறைந்துள்ளது. சுமார் 136 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவைப் பொறுத்தவரையில், 10 சதவிகிதம் மக்கள் கடந்த 2004-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஏழைக்கும் ஏழை என்ற நிலையில், மிகவும் வறிய நிலையிலேயே உள்ளனர்.

அதே சமயம், இந்தியாவின் மொத்த சொத்துகளில் 77.4% முதல் 10 சதவிகித உயர் வகுப்புகளைச் சேர்ந்தவர்களிடம் உள்ளது. இன்னும் சரியாகச் சொல்வதானால், 51.53 சதவிகித சொத்துகள், பெரும் பணக்காரர்களாக உள்ள ஒரு சதவிகிதம் பேரிடம் மட்டுமே குவிந்துள்ளது. இந்தியாவின் பெரும்பான்மை மக்களாக அடிமட்டத்திலிருக்கும் 60 சதவிகிதம் பேரிடம், வெறும் 4.8 சதவிகித சொத்து மட்டுமே உள்ளது என்று ஆக்ஸ்ஃபேம் என்ற ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகப் பொருளாதார அமைப்பின் (World Economic Forum - WEF ) 5 நாள் உச்சி மாநாடு சுவிட்சர்லாந்தில் நடைபெறுவதையொட்டி, மக்களின் வருவாய் தொடர்பாக, இந்த அமைப்பு உலக அளவில் நடத்திய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. 

இந்த நிலையில், பணக்காரர்கள் - ஏழைகளுக்கு இடையே அதிகரிக்கும் இந்த இடைவெளியைப் போக்குவதற்கான உரிய நடவடிக்கையை அரசியல் தலைவர்களும், தொழிலதிபர்களும் மேற்கொள்ள வேண்டும் என ஆக்ஸ்ஃபேம் வலியுறுத்தி உள்ளது. 

அதிகரித்து வரும் இந்த ஏழை - பணக்காரர்கள் இடையேயான இந்தப் பொருளாதார சமமின்மை, வறுமையைப் போக்குவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைப் பயனற்றதாக்கிவிடுதோடு, பொருளாதாரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தி, பெரும்பான்மை மக்களின் கோபத்தை அதிகரிக்க வைத்து, சமூக பதற்றத்துக்கு வழி வகுத்து விடும் என ஆக்ஸ்ஃபேம் இன்டர்நேஷனல் அமைப்பின் நிர்வாக இயக்குநர் வின்னி பயனிமா எச்சரித்துள்ளார். 

தின வருமானம் 2,200 கோடி... வரியோ 0.5 %... பட்ஜெட்டுக்கு நிகராக சம்பாதிக்கும் இந்திய பெரும் பணக்காரர்கள்!

``ஏழைகள் பசியோடு தங்களின் அடுத்தவேளை சாப்பாட்டுக்கும், பிள்ளைகளின் கல்விக் கட்டணத்துக்கும் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், நாட்டின் பெரும்பாலான செல்வம் வெகு சில நபர்களிடம் மட்டுமே குவிந்து கிடப்பது தார்மிக அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல; இது மிகவும் மூர்க்கத்தனமானது. இந்த அசிங்கமான போக்கு தொடருமானால், அது நிச்சயம் இந்தியச் சமூக அமைப்பையும், ஜனநாயக கட்டமைப்பையும் முற்றிலும் சீர்குலைத்துவிடும்" என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். 

ஒருபுறம் உலக மக்கள் தொகையில் பாதிப்பேர் ஏழைகளாக உள்ள நிலையில், இன்னொருபுறம் சொத்துகள் தனிநபர்களிடமே குவிவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், கடந்த ஆண்டில் உலக அளவில் 44 பேரிடம் மிக அதிக சொத்துகள் குவிந்திருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 26 ஆகக் குறைந்துள்ளதாகவும் ஆக்ஸ்ஃபேம் தெரிவித்துள்ளது. 

இதற்கு உதாரணமாக உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோவின் சொத்து மதிப்பைக் குறிப்பிடலாம். 137 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டிருக்கும் பிசோவின் சொத்து மதிப்பின் 1 சதவிகிதம், 11.5 கோடி மக்கள் தொகையைக் கொண்ட எத்தியோப்பியா நாட்டின் சுகாதார பட்ஜெட்டுக்கு ஈடானது. 

 தினசரி வருவாய் ரூ. 2,200 கோடி 

இந்த நிலையில், 2018 மற்றும் 2022-ம் ஆண்டுகளுக்கு இடையே இந்தியா, மேலும் 70 பெரும் பணக்காரர்களை உருவாக்கிவிடும் என ஆக்ஸ்ஃபேம் மதிப்பிட்டுள்ளது. 2018-ம் ஆண்டில் இந்தியப் பணக்காரர்கள் நாளொன்றுக்கு சுமார் 2,200 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியுள்ளனர்.  

 ``இந்த ஆய்வறிக்கை, அரசாங்கங்கள் எப்படி ஒருபுறம் பொதுமக்களின் முக்கியத் தேவைகளான சுகாதாரம் மற்றும் கல்வி போன்றவற்றுக்கு உரிய நிதியை ஒதுக்காமல், மறுபுறம் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் செல்வந்தர்களுக்கும் வரிக் குறைப்பையும் வரிச் சலுகைகளையும் வாரி இறைத்து அவர்களை மேன்மேலும் பணக்காரர்களாக வளர்த்து விடுகின்றன என்பதை உணர்த்துகிறது" என்று கூறியுள்ளார் ஆக்ஸ்ஃபேம் இந்தியாவின் சிஇஓ அமிதாப் பெஹர். 

மேலும், பொருளாதார சமமின்மை அதிகரிப்பால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும் பெண் குழந்தைகளும்தான் என்று இந்த ஆய்வு தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

தின வருமானம் 2,200 கோடி... வரியோ 0.5 %... பட்ஜெட்டுக்கு நிகராக சம்பாதிக்கும் இந்திய பெரும் பணக்காரர்கள்!

இந்தியாவில், கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் 18 புதிய பெரும் பணக்காரர்கள் உருவாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியப் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 119 ஆக அதிகரித்து, அவர்களின் செல்வமும் முதன்முறையாக 440.1 பில்லியன் டாலரைத் ( சுமார் 28 லட்சம் கோடி ரூபாய்) தொட்டுள்ளது. 2017-ம் ஆண்டில் இது 325.5 பில்லியன் டாலராக இருந்தது. 

செலுத்தும் வரி 0.5 % மட்டுமே 

ஆக்ஸ்ஃபேம் தனது ஆய்வறிக்கையில் முக்கியமாகக் குறிப்பிடுவது, ``இந்தியப் பெரும் பணக்காரர்கள் தங்களின் சொத்தில் வெறும் 0.5 சதவிகிதத்தை மட்டுமே கூடுதல் வரியாகச் செலுத்துகிறார்கள். இதன் காரணமாகவே அவர்களால், அரசாங்கம் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கும் பட்ஜெட் தொகையின் பாதி அளவுக்கு நிகராகச் செல்வம் சேர்க்க முடிகிறது" என்பதைத்தான். 

மத்திய, மாநில அரசுகள் ஈட்டும் கூட்டு வருவாயில் பொதுமக்களின் மருத்துவம், சுகாதாரம், துப்புரவுப் பணி மற்றும் குடிநீர் விநியோகம் ஆகியவற்றுக்காகச் செலவிடும் தொகை 2,08,166 கோடி ரூபாய். இது, இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் செல்வ மதிப்பான 2.8 லட்சம் கோடி ரூபாயை விடக் குறைவாகும் என்று சுட்டிக்காட்டும் ஆக்ஸ்ஃபேம், ``பெரும் பணக்காரர்களின் செல்வம், அவர்களுக்கான வரிக்குறைப்பால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொது மக்களுக்கான மருத்துவம் போன்ற அடிப்படை சுகாதாரத் திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லை அல்லது அவை தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றன. 

தின வருமானம் 2,200 கோடி... வரியோ 0.5 %... பட்ஜெட்டுக்கு நிகராக சம்பாதிக்கும் இந்திய பெரும் பணக்காரர்கள்!

இந்தியா போன்ற பல நாடுகளில், தரமான கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் போன்றவை பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய அளவுக்கு ஆடம்பரமான ஒன்றாக ஆகிவிட்டது. மேலும் முதல் பிறந்த நாளுக்கு முன்னதாகவே நோய் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை பணக்காரக் குடும்பங்களைக்காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக இந்திய ஏழைக்குடும்பங்களில் நிகழ்கின்றன என்றும் இந்தியாவின் நிலைமையைக் குறிப்பிட்டுள்ளது ஆக்ஸ்ஃபேம். 

பல்வேறு அரசுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொதுத் தளங்களில் கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையிலேயே மேற்கூறிய ஆய்வை நடத்தியுள்ளதாக ஆக்ஸ்ஃபேம் தெரிவித்துள்ள நிலையில், இந்தியா மட்டுமல்லாது பெரும்பாலான உலக நாடுகள், தொடர்ந்து பெரும் பணக்காரர்களை வளர்த்து விடுவது, உலக அமைதிக்குப் பேராபத்தை ஏற்படுத்திவிடும் என்றே தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகிறது!