Published:Updated:

`ஷமி வேகம்... மிரட்டலான 100-வது விக்கெட்!’ - நியூசிலாந்து நிதானம்

`ஷமி வேகம்... மிரட்டலான 100-வது விக்கெட்!’ - நியூசிலாந்து நிதானம்
`ஷமி வேகம்... மிரட்டலான 100-வது விக்கெட்!’ - நியூசிலாந்து நிதானம்

Credits: ICC

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேப்பியர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ ஆகியோர் நியூசிலாந்தின் இன்னிங்ஸை தொடங்கினர். அந்த அணிக்கு இரண்டாவது ஓவரிலே அதிர்ச்சி காத்திருந்தது. மார்டின் கப்தில் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஷமியின் பந்துவீச்சில் போல்ட் ஆகி விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து சிறப்பாக பந்துவீசிய ஷமி மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான காலின் முன்ரோவையும் காலி செய்தார். இருவரும் இவரது பந்துவீச்சில் க்ளீன் போல்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. காலின் முன்ரோவின் விக்கெட் ஒருநாள் போட்டியில் ஷமியின் 100-வது விக்கெட்டாக அமைந்தது. 56-வது போட்டியிலே இந்த சாதனை ஷமி எட்டியுள்ளார்.

குறைந்த ஆட்டங்களில் 100 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர்களின் பட்டியலில் ஷமி முதலிடத்தில் உள்ளார்.  இர்பான் பதான் (59), ஜாஹிர் கான் (65), அஜித் அகர்கர் (67), ஸ்ரீ சாந்த் (68) போட்டிகளில் கைப்பற்றியுள்ளனர்.18 ரன்களுக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கனே வில்லியம்ஸன், ராஸ் டெய்லர் தற்போது களத்தில் உள்ளனர்.