2017 ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்து முடிந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள்... இந்தப் போராட்டம் தொடர்பாக விகடனில் வெளிவந்த மிக முக்கியமான கட்டுரைகள் அப்பப்போவில் இன்று வெளியாகியுள்ளன. அப்பப்போ அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ய இங்கு க்ளிக் செய்யுங்கள். இன்ஸ்டால் செய்த பிறகு, அந்தந்த கட்டுரைகளுக்கான லிங்க்கை க்ளிக் செய்து படிக்கலாம்!
லாஸ்ட்ல ஒரு OFFBEAT ட்விஸ்ட் இருக்கு… மிஸ் பண்ணிடாதிங்க!
காளையும் நாளையும்!

மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை நேரில் பார்த்தவர்களுக்கு ஒரு விஷயம் நன்றாகவே தெரியும். அவ்வளவு நெருக்கடி இருந்தபோதும் அரசியல்வாதிகளை இளைஞர்கள் போராட்டத்தில் உள்ளேயே விடவில்லை.
போராடும் தமிழ்நாடு... அடக்கும் அரசு... அத்துமீறும் போலீஸ்!

தனது நாற்காலியைக் காப்பாற்றத் துடிக்கும் எடப்பாடியின் இதயம் அடுத்ததாகக் காவல்துறையைக் காதலிக்கிறது. தன்னை ‘வேட்டி கட்டிய ஜெயலலிதா’வாகவே நினைத்துக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார் எடப்பாடி. அவர் செல்லும் சாலைகள் தோறும் கொளுத்தும் வெயிலில் காக்கிச் சீருடைப் பணியாளர்கள் நிறுத்தி வைக்கப்படுவதைப் பார்த்தால், தன்னை அவர் எட்டு ராஜ்யத்தின் மன்னராகவே நினைத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது.
தேசத் துரோகிகள் யார்?

எண்பதுகளின் இறுதி. தற்போதைய(2017) கோவை காவல்துறை ஆணையர் அமல்ராஜின் தந்தை அம்புரோஸ் அப்போது ஒரு கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராகப் பணிபுரிந்துகொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் கல்லூரியில் நடந்த தேர்தலில் ஒரு மிகப் பெரிய வன்முறை வெடிக்கிறது. அதில், அவரும் சிக்கிக் கொள்கிறார். உடனடியாகச் சம்பவ இடத்துக்கு விரைந்த இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள்... அவரை மீட்டு, பாதுகாப்பாக அனுப்பிவைக்கிறார்கள். இந்த வரலாறு அமல்ராஜுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. இன்று அந்த அமைப்பைத்தான் அமல்ராஜ், ‘‘தேச விரோதச் செயலில் ஈடுபடும் அமைப்பு’’ என்கிறார்.
உண்மையில் தேசத்துரோகச் செயல் எது? தெரிந்துகொள்ள இங்கு க்ளிக் செய்யுங்கள்!
அதே மெரினாவில்… 1993ல்!
#OFFBEATBonus - மெரினாவில் முதல்வரின் உண்ணாவிரதம்

'எம்.ஜி.ஆர். சமாதிக்கு சி.எம். கிளம்பறாங்க... மலர்வளையம் ரெடி பண்ணச் சொல்லிட்டு இங்கே வாங்க" - போயஸ் தோட்டத்திலிருந்து கே.ஏ.கே. உட்பட வெகுசில அமைச்சர்களுக்கு மட்டும் தகவல் சென்றது. 'எம்.ஜி.ஆர். சமாதிக்கா? இன்னிக்கு எந்த விசேஷ நாளும் இல்லையே. வேற எந்த முக்கியமான நிகழ்ச்சியும் இல்லையே. என்னவாயிருக்கும்?' - குழப்பத்தோடு அமைச்சர்கள் ஓடிவந்தார்கள்.
18-ம் தேதி காலை 9.00 மணி...
சமாதிக்கு கார் அணிவகுப்பு வந்து நிற்க... ஜெயலலிதா இறங்கினார். அவசரகதியில் தயாரான மலர்வளையம் ஒன்றைச் சமாதியில் வைத்து வணங்கினார் ஜெயலலிதா. அதைத் தொடர்ந்து... ஜெயலலிதா வெளியே கிளம்பாமல் அப்படியே, அங்கேயே உட்கார்ந்தார். அதிர்ந்து போனார்கள் அமைச்சர்கள்.
விகடன் வாசகர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் ஆஃபர்!