Published:Updated:

உருக்குலைந்த உப்பளங்கள்! - தீராத கஜா சோகம்... கண்ணீரில் தொழிலாளர்கள்...

உருக்குலைந்த உப்பளங்கள்! - தீராத கஜா சோகம்... கண்ணீரில் தொழிலாளர்கள்...
பிரீமியம் ஸ்டோரி
உருக்குலைந்த உப்பளங்கள்! - தீராத கஜா சோகம்... கண்ணீரில் தொழிலாளர்கள்...

உருக்குலைந்த உப்பளங்கள்! - தீராத கஜா சோகம்... கண்ணீரில் தொழிலாளர்கள்...

உருக்குலைந்த உப்பளங்கள்! - தீராத கஜா சோகம்... கண்ணீரில் தொழிலாளர்கள்...

உருக்குலைந்த உப்பளங்கள்! - தீராத கஜா சோகம்... கண்ணீரில் தொழிலாளர்கள்...

Published:Updated:
உருக்குலைந்த உப்பளங்கள்! - தீராத கஜா சோகம்... கண்ணீரில் தொழிலாளர்கள்...
பிரீமியம் ஸ்டோரி
உருக்குலைந்த உப்பளங்கள்! - தீராத கஜா சோகம்... கண்ணீரில் தொழிலாளர்கள்...

நாகை மாவட்டத்தில் மீன்பிடித் தொழிலுக்கு அடுத்தபடியாக முக்கியத் தொழிலாக விளங்குவது உப்பு உற்பத்திதான். தமிழகத்தின் முக்கிய உப்பள மண்டலங்களில் முக்கியமானது வேதாரண்யம். ஆங்கிலேயர்கள் உப்புக்கு வரி விதித்ததை எதிர்த்து, காந்தியடிகள் தண்டியில் உப்புச் சத்தியாகிரகம் நடத்தியபோது, ராஜாஜி தலைமையில் தமிழகத்தில் உப்புச் சத்தியாகிரகம் நடைபெற்றது, வேதாரண்யத்தில்தான்.

லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிவந்த வேதாரண்யத்தின் உப்பளங்கள், கஜா புயலில் உருக்குலைந்துவிட்டன. உப்பளங்களில் கடல்சேறு உட்புகுந்த நிலையில் அரசின் உதவிகள் கிடைக்காமல், உப்பு உற்பத்தியை மீண்டும் எப்படித் தொடங்குவது என்று உப்பு உற்பத்தியாளர்களும், வேலை இழந்த நிலையில் தொழிலாளர்களும் கலங்கித் தவிக்கிறார்கள்.

உருக்குலைந்த உப்பளங்கள்! - தீராத கஜா சோகம்... கண்ணீரில் தொழிலாளர்கள்...

தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு  உற்பத்தியில் பிரபலமாக இருக்கும் வேதாரண்யத்தில் சுமார் 35,000 ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி நடக்கிறது. இங்கிருந்து ஆந்திரம், கேரளம், கர்நாடகம், ஒடிஷா, மேற்கு வங்காளம் உட்பட பல மாநிலங்களுக்கு உப்பு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பாத்திகள் அமைத்தல், உப்பு வாருதல் உட்பட பல்வேறு பணிகளில் சுமார் 10,000 பேர் நேரடியாகவும், 15,000 பேர் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளார்கள். இந்தத் தொழிலைத்தான் கஜா புயல் முற்றிலும் சீர்குலைத்துப்போட்டுள்ளது. உப்பளங்களில் ஓர் அடி உயரத்துக்குக் கடல்சேறு படிந்துள்ளது. ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் ஒரு லட்சம் டன் உப்பு, மழையில் கரைந்துவிட்டது. உப்பளங்களில் இருந்த சுமார் 42,000 மின்கம்பங்களும், 50 மின்மாற்றிகளும் உருக்குலைந்துவிட்டன. உப்பளங்களைச் சுற்றி ஏற்றுமதிக்காக அமைக்கப்பட்டிருந்த 50 கி.மீ தூரத்துக்கான சாலைகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உருக்குலைந்த உப்பளங்கள்! - தீராத கஜா சோகம்... கண்ணீரில் தொழிலாளர்கள்...

“உப்புத்தொழிலை விட்டால், எங்களுக்கு வேற எதுவுமே தெரியாதுங்க. கடன் வாங்கிச் செலவு செஞ்சு, கஷ்டப்பட்டு உற்பத்தி செஞ்ச உப்பை, அம்பாரம் (பனைமட்டைகளால் ஆன கூரை) போட்டு மூடிவெச்சிருந்தோம். அம்பாரமெல்லாம் சூறைக்காத்துல பறந்து, உப்பெல்லாம் தண்ணியில கரைஞ்சுபோச்சு. புயல்ல பாதிக்கப்பட்ட எங்களுக்கு அரசாங்கம் எந்த உதவியும் செய்யல. உப்பளங்கள்ல படிஞ்சிருக்குற சேற்றை எப்படி அகற்றுறதுன்னே தெரியல” என்று கவலையுடன் பேசினார், உப்பளத் தொழிலில் உள்ள பானுமதி.

“தண்ணீர் இறைக்கிற கிணறு, சேறுபடிஞ்சிக் கிடக்குது. ஆயில் என்ஜின் துருப்பிடிச்சுப் போச்சு. உப்பளங்கள்ல இருக்குற சேற்றை எடுத்துட்டு வரப்புப் பிடிக்கணும். மூலதனமாய் இருந்த உப்பை வித்த பணத்தை வெச்சுதான், மறுபடியும் உப்பு தயாரிப்போம். மூலதனத்தையே புயல் அடிச்சிட்டுப்போயிருச்சு. வாங்குன கடனைத் திருப்பிக் கொடுக்காம, இனி எப்படி தொழில் செய்யப் போறேன்னு தெரியல” என்று விரக்தியுடன் பேசினார் சுப்ரமணியன்.

உருக்குலைந்த உப்பளங்கள்! - தீராத கஜா சோகம்... கண்ணீரில் தொழிலாளர்கள்...

வேதாரண்யம் சிறு உப்பு உற்பத்தியாளர் இணைச் செயலாளர் செந்தில், “வேதாரண்யத்தில் அகல ரயில்பாதை அமைக்கிறதுக்காக, 2001-ல் ரயில் போக்குவரத்தை நிறுத்தினாங்க. அதனால, லாரி மூலமாவே உப்பு ஏற்றுமதி செய்யறோம். லாரி வாடகை அதிகமா இருக்கிறதால செலவு கூடுது. குஜராத்துல இருந்து ரயில் மூலமா எல்லா மாநிலங்களுக்கும் உப்பை ஏற்றுமதி செய்றாங்க. அங்கே, உப்புத் தயாரிப்பில் இயந்திரங்கள் அதிகமாகப் பயன்படுத்துறாங்க. அதனால, அவங்களுக்கு செலவு குறைவா இருக்கு. குஜராத்துல ஒரு டன் உப்பு உற்பத்தி செய்ய ரூ.200 செலவாகும். இங்கே, மனித உழைப்பிலேயே உப்பு தயாரிக்கப்படுறதால, ஒரு டன்னுக்கு 400 ரூபாய் செலவாகுது. இவ்வளவுச் சிரமங்களுக்கு மத்தியிலதான் தொழில் செய்றோம். இந்தச் சூழல்ல, எங்க வாழ்வாதாரத்தை கஜா புயல் உருக்குலைச்சுப் போட்டிருக்கு. உப்புத் தொழில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் வருது. அதனால, மாநில அரசு எங்களுக்கு எந்த உதவியும் செய்யிறதில்ல. புயல் பாதிப்பைப் பார்வையிட வந்த மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் எங்க நிலைமையை எடுத்துச்சொன்னோம். ‘பேரிடர் நிவாரண உதவி வழங்கணும்’னு அவங்ககிட்ட கேட்டோம். மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவை நேரில் சந்திச்சு, ‘மீண்டும் நாங்க உப்புத் தொழில் செய்ய உதவி வழங்கணும்’னு கேட்டிருக்கோம். மத்திய அரசு என்ன செய்யப் போகுதுன்னு தெரியல” என்றார்.

உருக்குலைந்த உப்பளங்கள்! - தீராத கஜா சோகம்... கண்ணீரில் தொழிலாளர்கள்...

இதுதொடர்பாக, மத்திய அரசின் உப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் பென்னி சார்ஜிடம் பேசினோம். “உப்பளங்களில் புயலால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து, மத்திய அரசுக்கு விரிவான அறிக்கையை அனுப்பியுள்ளோம். சேதங்களை மதிப்பிடுவதற்கு குழு வந்து பார்வையிட்டுள்ளது. அந்தக் குழு சமர்ப்பிக்கும் அறிக்கைக்குப் பின்னர், மத்திய அரசு நிவாரணம் வழங்கும்” என்றார்.

இந்த ஆண்டு உப்பு உற்பத்திப் பணிகள் ஜனவரியில் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், புயலடித்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், உப்பளங்களின் சேதங்களை மதிப்பிடும் பணியே இத்தனை தாமதமென்றால், இவர்களுக்கு எப்போது நிவாரணம் கிடைத்து, இவர்கள் எப்போது மீண்டும் தொழில் தொடங்குவது? இது நியாயமா அரசே?

- மு.இராகவன்
படங்கள்: ர.கண்ணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism