பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகளுக்கு என்ன ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது என்று குழம்பித் தவிக்கிறீர்களா? இதோ ஹெல்த்தி, டேஸ்ட்டி இனிப்பு, கார வகைகளின் செய்முறைகள் உங்களுக்காக. அப்புறமென்ன... தினம் தினம் வெரைட்டி வெரைட்டியாக செய்து அசத்துங்கள் உங்கள் குழந்தைகளை! வீட்டிலுள்ள பெரியவர்களும் இதை விரும்பிச் சாப்பிட்டு, `இன்னும் கொஞ்சம்’ என்று கேட்பார்கள்!

``சுவைக்கு மட்டுமன்றி சத்துக்கும் முதலிடம் கொடுப்பது நம் ஆரோக்கியத்துக்கும் ஆயுளுக்கும் முக்கியம் அல்லவா! சிறுதானியங்களைச் சமையலில் பயன்படுத்துவதன் மூலம் குடும்பநலத்தை மேம்படுத்தலாம்’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஜெ.கலைவாணி. இது ஆரோக்கிய சுவை!

தினை மரவள்ளிக்கிழங்கு பாயசம்

தேவையானவை:
* தினை (வேகவைத்தது) - கால் கப்
* மரவள்ளிக்கிழங்கு (சீவியது) – ஒரு கப்
* ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்
* பாதாம், முந்திரி - தலா 10
* பால் – அரை லிட்டர்
* சர்க்கரை – ஒரு கப்
* நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
* உலர்திராட்சை - 10

செய்முறை:

பாலைக் காய்ச்சி அதனுடன் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். இதிலிருந்து அரை டம்ளர் பாலை தனியாக எடுத்து அதனுடன் பாதாம், முந்திரியைச் சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளவும். மீதமிருக்கும் பாலில் சீவி வைத்திருக்கும் கிழங்கைச் சேர்த்து வேகவிடவும்.

கிழங்கு பாதி வேகும்போது வேகவைத்திருக்கும் தினையையும் சேர்த்துக் கிளறவும். பின்னர் பாதாம், முந்திரி சேர்த்து அரைக்கப்பட்ட பாலையும் இதனுடன் சேர்க்கவும். பிறகு சர்க்கரையைச் சேர்த்து நன்கு கிளறவும். சர்க்கரை கரைந்து கலவை பாயசப் பதத்துக்கு வந்தவுடன் கீழே இறக்கவும்.

வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி, திராட்சையை வறுத்து, அதை நெய்யோடு பாயசத்தில் சேர்க்கவும். சுவையான தினை மரவள்ளிக்கிழங்கு பாயசம் ரெடி!

* 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் விளைந்தாலும், கம்பு இந்தியாவில்தான் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.

கம்பு சீஸ் பால்

தேவையானவை:
* கம்பு மாவு - 3 டேபிள்ஸ்பூன்
* சீஸ் (துருவியது) – ஒன்றரை கப்
* பிரெட் க்ரம்ஸ் – ஒரு கப்
* அரிசி மாவு (அ) சோள மாவு - ஒரு டீஸ்பூன்
* பச்சை மிளகாய்
(பொடியாக நறுக்கியது) – 2 டீஸ்பூன்
* கொத்தமல்லித்தழை
(பொடியாக நறுக்கியது) – அரை கப்
* மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
* எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
* உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கம்பு மாவை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் துருவிய சீஸ், பிரெட் க்ரம்ஸ், அரிசி மாவு (அ) சோள மாவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள், உப்பு ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

பின்னர் இந்தக் கலவையில் சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி அதில் இந்த உருண்டைகளைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.

* தினைக்கு `ஃபாக்ஸ் டைல் மில்லட்’ என்று மட்டுமல்ல... `இட்டாலியன் மில்லட்’ என்றும் ஒரு பெயருண்டு.

கம்பு அதிரசம்

தேவையானவை:
* கம்பு மாவு - ஒரு கப்
* அரிசி – ஒரு கப்
* வெல்லம் (பொடித்தது) – ஒரு கப்
* எள் - 2 டீஸ்பூன்
* ஏலக்காய்த்தூள் அல்லது
சுக்குத்தூள் - ஒரு டீஸ்பூன்
* தண்ணீர் - கால் டம்ளர்
* எண்ணெய் – பொரிக்கத்
தேவையான அளவு

செய்முறை:

ஒரு கப் அரிசியைத் தண்ணீரில் நன்கு களைந்து பத்து நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு தண்ணீரை வடித்து அரிசியை நிழலில் உலர்த்தவும். நிழலில் உலர்ந்த அரிசியை மிக்ஸியில் நைஸாக அரைத்து சலித்து எடுத்துக்கொள்ளவும். இப்படி தயார் செய்யும் அரிசி மாவே அதிரசம் செய்ய ஏற்றது.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அதனுடன் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்துச் சூடாக்கவும். வெல்லம் தண்ணீரில் முழுவதுமாகக் கரைந்த பிறகு பாத்திரத்தைக் கீழே இறக்கி, வெல்லக் கரைசலை வடிகட்டவும். வடிகட்டிய வெல்லக் கரைசலை மறுபடியும் அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும். கொஞ்சம் கொஞ்சமாக வெல்லக் கரைசல் பாகு பதத்துக்கு வர ஆரம்பிக்கும். ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீரை வைத்துக்கொள்ளவும். சிறிதளவு பாகை எடுத்து அந்தத் தண்ணீரில் போட்டுப் பார்க்கவும். தண்ணீரில் போட்ட பாகை கையில் எடுத்து உருட்டினால் உருட்ட வர வேண்டும். இதுவே அதிரசம் செய்ய சரியான பாகு பதம் ஆகும்.

வெல்லப் பாகு சரியான பதத்துக்கு வந்தவுடன் அடுப்பிலிருந்து பாத்திரத்தைக் கீழே இறக்கிவிடவும்.

பிறகு இதனுடன் கம்பு மாவு, அரிசி மாவு, எள், ஏலக்காய்த்தூள் அல்லது சுக்குத்தூள் சேர்த்துக் கட்டிவிழாதவாறு, கைவிடாமல் நன்கு கிளறி வைத்துக்கொள்ளவும். பிறகு மாவைச் சிறு உருண்டைகளாக உருட்டி, வாழையிலையில் வைத்து வட்டமாகத் தட்டிக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் தட்டி வைத்திருக்கும் மாவைப் போட்டுப் பொரிக்கவும். அதிரசமானது இருபுறமும் பொன்னிறமாக வெந்து உப்பிவரும்போது எடுத்துவிடவும்.

குறிப்பு:

அதிரசத்தை வாணலியிலிருந்து எடுக்கும் போதே அதிரசத்தின் மீது கரண்டியால் சிறு அழுத்தம் கொடுத்தால் அதிரசத்தின் மீது இருக்கும் அதிகப்படியான எண்ணெய் வடிந்துவிடும்.

* வெல்லம், இந்திய துணைக்கண்டத்தில் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக உட்கொள்ளப்பட்டு வருகிறது.

குதிரைவாலி முறுக்கு

தேவையானவை:
* குதிரைவாலி அரிசி - ஒரு கப்
* பச்சரிசி - அரை கப்
* உளுந்து – கால் கப்
* பாசிப்பருப்பு (லேசாக வறுத்தது) – கால் கப்
* பொட்டுக்கடலை – கால் கப்
* சீரகம் - ஒரு டீஸ்பூன்
* பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்
* வெள்ளை எள் - அரை டீஸ்பூன்
* வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
* எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

குதிரைவாலியுடன் பச்சரிசி, உளுத்தம்பருப்பு, லேசாக வறுத்த பாசிப்பருப்பு, பொட்டுக் கடலை சேர்த்து அனைத்தையும் மெஷினில் அரைத்துக்கொள்ளவும். இதனுடன் சீரகம், வெள்ளை எள், பெருங்காயத்தூள், வெண்ணெய், உப்பு சேர்த்துக் கலக்கவும்.

பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக முறுக்கு மாவு பதத்துக்குப் பிசையவும். முறுக்குக் குழலில் எண்ணெய் தடவி, அச்சு தட்டைப் போட்டு மாவைக் குழலில் நிரப்பவும். எண்ணெய் தடவிய வாழையிலை அல்லது ஜல்லிக்கரண்டியின் பின்புறம் மாவை முறுக்காகப் பிழியவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்துப் பிழிந்த முறுக்குகளைப் போட்டுப் பொன்னிறமாகச் சுட்டு எடுக்கவும்.

* நெல் விளையாத நிலங்களில் குதிரைவாலி அதிகமாகப் பயிரிடப்படுகிறது.

சோளம் பேரீச்சைப் பணியாரம்

தேவையானவை:
* சோள மாவு - ஒரு கப்
* உளுந்த மாவு – அரை கப்
* வெல்லம் (பொடித்தது) - அரை கப்
* பேரீச்சம்பழம் - 5
* சமையல் சோடா - ஒரு சிட்டிகை
* ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
* எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

சோள மாவுடன் உளுந்த மாவு சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் பேரீச்சம்பழத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். வெல்லம் மூழ்கும்வரை தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதிவிட்டு வடிகட்டவும். வடிகட்டி வைத்திருக்கும் வெல்லக்கரைசலுடன் ஏலக்காய்த்தூள், சமையல் சோடா சேர்க்கவும்.

பிறகு சோள மாவு - உளுந்த மாவுக் கலவையை வெல்லக் கரைசலுடன் சேர்த்து தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். பிறகு ஒரு 20 நிமிடங்களுக்கு மாவை அப்படியே மூடி வைக்கவும். பணியாரக்கல்லை அடுப்பில் வைத்துச் சூடாக்கவும். கல் காய்ந்ததும் குழிகளில் எண்ணெய்விட்டுத் தடவி மாவை ஊற்றவும். பணியாரங்களைப் பொன்னிறமாகச் சுட்டெடுக்கவும்.

* இந்தியாவில் அரிசி, கோதுமைக்கு அடுத்து சோளம் முக்கிய உணவுப் பொருளாக விளங்குகிறது.

சிவப்பரிசி கேழ்வரகு புட்டு - வாழைப்பழப் பால்

தேவையானவை:
* கேழ்வரகு மாவு – ஒரு கப்
* சிவப்பரிசி மாவு - 2 கப்
* ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
* பனை வெல்லம் (பொடித்தது) – ஒரு கப்
* தேங்காய்த் துருவல் - ஒரு கப்
* வாழைப்பழம் - ஒன்று
* காய்ச்சி ஆறவைத்த பால் - ஒரு கப்
* உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அதில் உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். மற்றொரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, சிவப்பரிசி மாவு இரண்டையும் ஒன்றாகக் கலந்துகொள்ளவும். பிறகு கொதிக்கவைத்த நீரைக் கலந்து வைத்திருக்கும் மாவில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துப் பிசிறவும். மாவு முழுவதும் ஈரமாகும் வரை பிசிறினால் போதும். பிறகு பிசிறி வைத்த இந்த மாவை ஒரு சுத்தமான வெள்ளை காட்டன் துணியில் பரப்பி அதை இட்லி குக்கரில் வைத்து இருபது நிமிடங்கள் ஆவியில் வேகவிடவும். மாவு வெந்தவுடன் கீழே இறக்கி அதனுடன் பனை வெல்லம், தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். சத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு தயார்.

அடுத்து காய்ச்சி ஆறவைத்த பாலுடன் வாழைப்பழத்தைச் சேர்த்து ஜூஸரில் அடித்துக்கொள்ளவும். வாழைப்பழப் பால் ரெடி. அவரவர் விருப்பப்படி இந்த வாழைப்பழப் பாலை புட்டுக்கு மேலே ஊற்றிச் சாப்பிடலாம். அல்லது புட்டு சாப்பிட்டு முடித்த பிறகு தனியாகவும் குடிக்கலாம்.

* இந்தியாவில் கர்நாடகாவிலும் தமிழகத்திலும் கேழ்வரகு அதிக அளவில் சாகுபடியாகிறது.

பனிவரகு ஸ்வீட் சீடை

தேவையானவை:
* பனிவரகு மாவு - ஒரு கப்
* வெல்லம் (பொடித்தது) - முக்கால் கப்
* பொட்டுக்கடலை மாவு - கால் கப்
* ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
* தேங்காய்த் துருவல் - அரை கப்
* எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் கால் கப் தண்ணீர் ஊற்றி, ஒரு கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும். இதனுடன் பனிவரகு மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும். பிறகு பொட்டுக்கடலை மாவு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து மறுபடியும் நன்கு கலந்து வைக்கவும். பின்னர் இந்த மாவைச் சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, உருண்டகளைப் போட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். கரகரப்பான ஸ்வீட் சீடை ரெடி.

குறிப்பு:

வெல்லத்தை உருண்டைப் பாகு எடுத்து அதில் மாவைக் கலந்து சீடை செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

* சிறுதானியங்களில் மிகவும் குறைந்த வயதுடையது பனிவரகு. இது 65 நாள்களில் மகசூல் கொடுத்துவிடும்.

பனிவரகு கோதுமை மக்மல் பூரி

தேவையானவை:
* பனிவரகு மாவு - ஒரு கப்
* கோதுமை மாவு - ஒரு கப்
* சர்க்கரை - அரை கப்
* ஏலக்காய் - 2
* பச்சரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்
* நெய் - 4 டேபிள்ஸ்பூன்
* எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

சர்க்கரையுடன் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் பவுடராக்கிக் கொள்ளவும். பனிவரகு மாவுடன், கோதுமை மாவைச் சேர்த்து இரண்டு டீஸ்பூன் எண்ணெய்விட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பூரி மாவுக்குப் பிசைவது போல் பிசைந்து வைக்கவும். ஒரு சிறிய பாத்திரத்தில் பச்சரிசி மாவை எடுத்து அதில் நெய் மற்றும் இரண்டு டீஸ்பூன் எண்ணெய்விட்டு இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் ஸ்பூனால் முட்டை அடிப்பதுபோல் அடித்தால் கலவை மயோனைஸ் போல நெகிழ்வுடன் வந்துவிடும். இந்தக் கலவையைத்தான் நாம் பூரணமாகப் பயன்படுத்தப் போகிறோம்.

அடுத்து பிசைந்து வைத்திருக்கும் மாவை இரண்டு பகுதிகளாகச் செய்து கொள்ளவும். ஒரு பகுதியை நான்கு உருண்டைகளாக உருட்டி மெல்லிய சப்பாத்திகளாகத் திரட்டவும். ஒரு சப்பாத்தியில் அரை டீஸ்பூன் அளவு பூரணம் தடவவும். அதன் மேல் இன்னொரு சப்பாத்தியை வைத்து அதே அளவு பூரணம் தடவவும். அதன்மேல் மூன்றாவது சப்பாத்தி, அரை டீஸ்பூன் பூரணம், அதன் மேல் நான்காவது சப்பாத்தி அரை டீஸ்பூன் பூரணம் என்று ஒன்றன்மேல் ஒன்றாக வைக்கவும்.

இப்படி அடுக்கப்பட்ட சப்பாத்திகளை உருளை வடிவில் (cylinder shape) உருட்டவும். அதைச் சிறிய சிறிய வட்டங்களாக நறுக்கவும். பின்பு ஒவ்வொரு வட்டத்தையும் பூரி போல் திரட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் பூரிகளைப் பொரித்து எடுக்கவும். மற்றொரு பகுதி மாவையும் இதேபோல் செய்து கொள்ளவும். பொடித்து வைத்திருக்கும் சர்க்கரை - ஏலக்காய் பவுடரை பூரியின் மேல் தூவினால், நாவூறவைக்கும் பனிவரகு மக்மல் பூரி ரெடி.

* பனிவரகில் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் தாதுஉப்புகள் அடங்கியுள்ளன.

கம்பு முறுக்கு

தேவையானவை:
* கம்பு மாவு - ஒரு கப்
* பொட்டுக்கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்
* மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
* பெருங்காயத்தூள் - சிறிதளவு
* ஓமம் - கால் டீஸ்பூன்
* சீரகம் - அரை டீஸ்பூன்
* எள் - அரை டீஸ்பூன்
* எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு, பொட்டுக்கடலை மாவு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், சீரகம், ஓமம், எள் ஆகிய அனைத்தையும் எடுத்து நன்றாகக் கலந்துகொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும். சூடான எண்ணெயைக் கலந்து வைத்திருக்கும் மாவில் விட்டுப் பிசிறவும். பின்னர் இதில் சிறிது சிறிதாகத் தண்ணீர்விட்டு கெட்டியான மாவாகப் பிசைந்துகொள்ளவும்.

முறுக்கு பிழியும் அச்சில் முறுக்கு தட்டை போட்டு, அதில் மாவை நிரப்பவும். வாணலியில் எண்ணெய் வைத்துச் சூடாக்கவும். சிறு தட்டிலோ அல்லது ஜல்லிக் கரண்டியின் பின்புறமோ முறுக்கைப் பிழிந்து எண்ணெயில் மெதுவாகப் போட்டுச் சுட்டெடுக்கவும். முறுக்கு ஆறிய பின்னர் காற்றுப்புகாத டப்பாவில் எடுத்து வைத்துப் பத்திரப்படுத்தவும்.

குறிப்பு:

கம்பு முறுக்கை அதிக அளவில் செய்யும்போது ஒரே முறையில் மொத்த மாவையும் தண்ணீர் விட்டுப் பிசையக் கூடாது. மாவுடன் எல்லா பொருள்களையும் கலந்து சூடான எண்ணெய்விட்டு பிசிறி மட்டும் வைக்கவும். ஒரு ஈடு முறுக்கு எண்ணெயில் வேகும் நேரத்தில் அடுத்த ஈடுக்குத் தேவைப்படும் அளவுக்கான மாவைத் தண்ணீர்விட்டுப் பிசைந்து முறுக்காகப் பிழிந்துகொள்ளவும். இப்படி செய்தால் முறுக்கு மாவின் பதம் சரியாக இருக்கும். முறுக்கும் சாப்பிடுவதற்குக் கரகரப்புடன் இருக்கும்.

* பொட்டுக்கடலை, சில டயட் முறைகளில் பிரதான இடம்பிடித்துள்ளது.

- ஜெ.கலைவாணி

படங்கள்: தே.அசோக்குமார்