Published:Updated:

லயோலா விவகாரம்... நடந்தது என்ன?

லயோலா விவகாரம்... நடந்தது என்ன?
பிரீமியம் ஸ்டோரி
லயோலா விவகாரம்... நடந்தது என்ன?

லயோலா விவகாரம்... நடந்தது என்ன?

லயோலா விவகாரம்... நடந்தது என்ன?

லயோலா விவகாரம்... நடந்தது என்ன?

Published:Updated:
லயோலா விவகாரம்... நடந்தது என்ன?
பிரீமியம் ஸ்டோரி
லயோலா விவகாரம்... நடந்தது என்ன?

“லயோலா கல்லூரியை இழுத்துமூட வேண்டும்; கல்லூரிக்கான அனுமதியை ரத்துசெய்ய வேண்டும்” என்று கொந்தளித்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழக பி.ஜே.பி தலைவர்கள். காரணம், ஓவியக் கண்காட்சி.

`வீதி விருது விழா’ என்ற பெயரில் நலிந்த கலைஞர்களைக் கௌரவப்படுத்தும் பணியை ஆறாவது ஆண்டாகச் செய்துவருகிறது சென்னை லயோலா கல்லூரி. இதன் ஓர் அங்கமாக, ஓவியக் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஜனவரி 19, 20 தேதிகளில் நடந்த அந்தக் கண்காட்சியில் ம.க.இ.க ஆதரவாளரான ஓவியர் முகிலன் வரைந்த சில படங்கள் இடம் பெற்றிருந்தன. அதில், `மீ டு’ என எழுதிப் பாரத மாதா படத்தை யும், சஞ்சீவி மலையைப் பிரதமர் மோடி தூக்கிக் கொண்டு போவது போலவும் படம் வரைந் திருந்தார். மேலும், அமெரிக்கா மற்றும் திரிசூலத்துக்கு இடையில் ஊஞ்சல் கட்டிப் பிரதமர் மோடி அகண்ட பாரதக் கனவு காண்பது போலவும் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. இவைதான் பி.ஜே.பி-யினரை ஏகத்துக்கும் சூடேற்றியிருக்கிறது.

லயோலா விவகாரம்... நடந்தது என்ன?

`இந்து மதத்தையும் பெண்களையும் அவமதிக்கும் வகையிலான ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மதக் கலவரத்தைத் தூண்ட வேண்டும் என்ற உள்நோக்கத் துடன் கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது’ என்று உடனடி யாகத் தனது கோபத்தை வெளிப்படுத்தினார் பி.ஜே.பி தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். இதுதொடர் பாக, ட்வீட் செய்த பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, `லயோலா கிறித்துவக் கல்லூரியில் விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள், நக்ஸல், மதமாற்றம் செய்யும் தீய சக்திகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து இந்து மதம் மற்றும் தேசம் மீது தாக்குதல் நடத்தியுள்ளன’ என்றார் ஆவேசத்துடன். இதுபோன்ற எதிர்ப்புகளைத் தொடர்ந்து, லயோலா கல்லூரி நிர்வாகம், `சமூகத்தில் அமைதியையும் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் வகையிலான எந்தச் செயல்களையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. ‘வீதி விருது’ விழாவுக்கு நாங்கள் கொடுத்த அனுமதி தவறாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. குறிப்பிட்ட மதத்தைப் புண்படுத்தும் வகையில், எங்கள் கல்லூரியில் ஓவியங்கள் இடம் பெற்றதற்கு நாங்கள் வருத்தம் தெரிவிப்பதுடன், மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறோம்’ என விளக்கம் அளித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லயோலா விவகாரம்... நடந்தது என்ன?

ஓவியக் கண்காட்சி நடத்திய முகிலனின் தரப்பில் பேசியவர்களோ, “இதற்கு முன்பு குஜராத் கலவரம் தொடர்பாகத் தஞ்சையில் நடந்த ஓவியக் கண்காட்சியில் முகிலனின் படங்கள் வைக்கப் பட்டிருந்தன. அந்தப் படங்களைப் பார்த்து, மக்கள் கண்ணீர்விட்டனர். தன் படைப்புகள் அனைத்தும் மக்களுக்கும் சென்றுசேர வேண்டும் என்பதுதான் அவரது எதிர்பார்ப்பு. இது பெரியார் பிறந்த மண். இங்கு இந்துத்வவாதிகளின் வேலைகள் எடுபடாது. முகிலனின் கையை வெட்டுவோம் என்கிறார்கள். ஆனால், அவரது தூரிகையில் உள்ள ஓர் இழையைக்கூட அவர்களால் பறிக்க முடியாது” என்றார்கள்.

- ஆ.விஜயானந்த்
 படங்கள்: அ.வள்ளிசெளத்ரி

“என்னை மத அடையாளத்துக்குள் அடைக்க முடியாது!” - சகாயம் ஆவேசம்!

“மா
னுடத்தை நேசிக்கும் மனிதனாக இருக்க ஆசைப்படுகிறேன். ஆனால், என்னைச் சிலர் மத அடையாளத்துக்குள் அடைக்கப் பார்க்கிறார்கள். அது அவர்களால் முடியாது. அவர்கள் என்னை விமர்சிப்பதில் உள்நோக்கம் இருக்கிறது” என்று வெடிக்கிறார் சகாயம் ஐ.ஏ.எஸ். லயோலா ‘வீதி விருது’ நிகழ்ச்சியின் பின்னணியில் பி.ஜே.பி-யினர் சிலர் இவரை விமர்சித்ததைத் தொடர்ந்துதான் இப்படிக் கொந்தளித்துள்ளார். என்ன நடந்தது?

லயோலா விவகாரம்... நடந்தது என்ன?

சென்னை லயோலா கல்லூரியில் ஜனவரி 19-ம் தேதி `வீதி விருது’ வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் விருந்தினராகப் பங்கேற்றார், சகாயம். நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக நடத்தப்பட்ட கண்காட்சியில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய ஓவியங்கள் குறித்து இந்து அமைப்புகள் போர்கொடி தூக்கின. லயோலா கல்லூரி சார்பில் மன்னிப்பும் கேட்கப்பட்டது. ஆனால், ‘‘விழாவில் பங்கேற்ற சகாயம் ஐ.ஏ.எஸ்., சர்ச்சைக்குரிய ஓவியங்கள் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதனால் அவரது நேர்மை கேள்விக்குறியாகிவிட்டது’’ என்று பி.ஜே.பி-யினர் சிலர் சமூகவலைத்தளங்களில் விமர்சித்துவருகின்றனர்.

இதுகுறித்து சகாயத்திடம் பேசினோம். ‘‘நாட்டுப்புறக் கலைஞர்களில் நலிந்த பிரிவினரைக் கௌரவிக்கும் நிகழ்ச்சி என்று சொல்லித்தான் என்னை நிகழ்ச்சிக்கு அழைத்தனர். அதன்படி, அந்தக் கலைஞர்களுக்குப் பொங்கல் பரிசு வழங்கி, வாழ்த்துத் தெரிவித்தேன். அங்கு மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் சில ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாகச் சொல்கின்றனர். அங்கு அப்படி ஓர் ஓவியக் கண்காட்சி நடந்ததா என்பதே எனக்குத் தெரியாது. அதுகுறித்து என் கவனத்துக்கும் யாரும் கொண்டுவரவில்லை. இன்னும் சொல்லப்போனால், அங்கு யாரெல்லாம் பங்கேற்கிறார்கள் என்றுகூட எனக்குத் தெரியாது. நல்லெண்ணத்தின் அடிப்படையில், நலிந்த கலைஞர்களைக் கௌரவிக்கவே அங்கு சென்றேன். இப்படியான நிலையில், அங்கே நடந்த நிகழ்வுகளுக்கு நான் எப்படிப் பொறுப்பேற்க முடியும்? என்னை மட்டும் குறிவைக்க வேண்டிய நோக்கம் என்ன?” என்றவரிடம், ‘‘உமாசங்கர் ஐ.ஏ.எஸ் உடன் தொடர்புப்படுத்தி, உங்களை விமர்சிக்கிறார்களே?’’ என்றோம். ``மதரீதியாக என்னை விமர்சிப்பதில் உள்நோக்கம் இருப்பதாகவே உணர்கிறேன்” என்றதுடன் முடித்துக்கொண்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக சகாயத்தின் ஆதரவாளர்கள் சிலர் நம்மிடம், “சகாயம் எங்களிடம், ‘இந்த அரசியலுக்குள் நாம் போக வேண்டாம், சமூக மாற்றத்துக்கான விஷயங்களை முன்னெடுப்பதில் கவனம் செலுத்துவோம்’ என்று சொல்லியிருக்கிறார். அதற்கு நாங்கள், ‘நாம் ஓர் இயக்கமாக இருந்தால் இப்படியெல்லாம் பேச மாட்டார்கள். நீங்கள் முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்றோம். அதற்கு அவர் பொறுமையாக இருக்கும்படிக் கேட்டுக்கொண்டிருக்கிறார்” என்றார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism